நண்பரின் திறன் பேசியில் குறுஞ்செய்தி அறிவிப்புக்கான  ஒலி விடாமல் ஒலித்தது.  அவரும் அதைத் திறந்து பார்ப்பதாக இல்லை.  

செல்போனை வெறுப்புடன் பார்த்துவிட்டு, அவரே அலுப்புடன் சொன்னார்.  ’எனக்கு வரும் குறுஞ்செய்திகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் வருகின்றன. சில சொற்களுக்கு பொருள் விளங்கவில்லை. ஒவ்வொரு முறையும் அகராதிக்குச் சென்று பார்க்கவும் சோம்பலாக இருக்கிறது? தீர்வுதான் சொல்லேன் என்றார்.

“இதற்குப் போய் அலுத்துக் கொள்ளலாமா? திறன்பேசியில்தான் அகராதி இருக்கிறதே. தேடிப்பிடித்து தெளியலாமே” என்றேன்.  ஒவ்வொரு முறையும் இணையத்தை நாடவேண்டியுள்ளது. அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு பொறுமையில்லை என்றார்.  

இல்லை.. இல்லை... இணையமில்லாமல் எந்த ஆங்கிலச் சொல்லுக்கும் பொருள் தெரிந்து கொள்ளலாம். அதுவும் இமைப்பொழுதில் என்றேன். ஆச்சரியத்தில் கண்கள் விரித்தார்.

ஆம். நண்பரிடத்தில் சொன்னதைத்தான் உங்களிடத்திலும் சொல்ல வருகிறேன். நமக்கு  வரும் ஆங்கில குறுந்தகவல்கள் அனைத்தும் உங்களுக்குப் புரியாத சொற்கள் இருக்குமாயின் இனி எந்தத் தடுமாற்றமும் இல்லை. உங்கள் செல்பேசியில் Play Store செல்லுங்கள். U Dictionary என்ற செயலியினைத் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளுங்கள். 38 மொழிகளின் அகராதியினை வழங்கியிருக்கிறார்கள். அதில் தமிழைத் தேர்வு செய்யுங்கள். அவ்வளவே.

இனி நமக்கு வரும் செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் செய்தி எதுவாக இருக்கட்டும்.  எந்தச் சொல்லின் பொருள் வேண்டுமோ அதனை தேர்வு செய்து சிஷீஜீஹ் மட்டும் செய்யுங்கள். உடனடியாக அச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் திரையில் காண்பீர்கள்.

பல வியப்புகளை நிகழ்த்தும் இச்செயலி வெறும் 5 எம்.பி. தரவுகளை மட்டுமே கொண்டுள்ளது. இதனை நிறுவ மிகச்சிறிய நினைவகம் போதுமானது. அது மட்டுமல்ல, இந்த தமிழ் மின்னகராதியினை பயன்படுத்த இணையமே தேவையில்லை என்பதுதான் சிறப்புச் செய்தி.

நம் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்திக் கொள்ள, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சொல்லைத் தேர்வு செய்து, அதன் பயன்பாடு குறித்து விவாதிக்கிறார்கள். நாள் தோறும் மொழித்திறன் மேம்படுத்த Spelling Check, Conversation practice, சொற்புதிர் விளையாட்டு எனப் பல பயிற்சிகள் இதில் உள்ளடங்கியுள்ளன.

இச்செயலி  நாம் பேசினால் ஒலியை உணர்கிறது.  ஆங்கிலத்தில் சொன்னால் போதும்,  கணப்பொழுதில் அதற்கு இணையான தமிழ்ச்சொல்லை தேடித்தரும். நீங்கள் முக்கியம் என்று கருதும் சொற்களை தனியே ஒரு திஷீறீபீமீக்ஷீல் சேமித்தும் வைக்கலாம்.

இணையமில்லாமல் அகராதி பயன்படுத்தவும், வேறெந்த புதிய தளத்திற்கும் செல்லாமல் அதே திரையில் பொருள் அறிய மிகச்சிறந்த செயலி. இணையத்தோடு பயன்படுத்தும் போதும் இன்னும் பல கூடுதல் வசதிகள் உள்ளன.

பல வகையான அகர முதலியில் பொருள் காண முடிகிறது. இதிலிருந்து விக்கிபீடியாவிற்கும் சென்று அது தேர்வு செய்த பொருள் தொடர்பான கட்டுரைகளை வாசிக்கலாம். இச்செயலி நிச்சயமாகப் பயனளிக்கும். உடனே தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

https://play.google.com/store/apps/ details?id=com.youdao.hindict

Pin It