கடற்கரை மணற்பரப்பில்

கதைகள் அளப்பதில்லை காதல்

இருசக்கர வாகனத்தில்

இறக்கைகட்டிப் பறப்பதில்லை காதல்

கடைசி இருக்கையில்

கால்கள் உரசுவதில்லை காதல்

இதயம் எழுப்பும் வினாவிற்கு

விழிகள்  விடை சொல்லும் வினோதம் காதல்

உயிரின் இயற்கை காதல்

உள்ளங்களின் உன்னத சேர்க்கை ‡ காதல்

புரிதலும் விட்டுக் கொடுத்தலும் ‡ காதல்

சாதிக்குச் சமாதிகட்டும் சமத்துவம் ‡ காதல்

மதங்களை மறுதலிக்கும் மானுடம் ‡ காதல்

Pin It