ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் ‘துக்ளக்’ இதழின் ஆண்டுவிழா இந்த ஆண்டும் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்குச் சென்று வந்த நண்பர்கள், அ.தி.மு.க. பொதுக் கூட்டத்திற்குப் போய்வந்தது போல் இருந்ததாகக் கூறினார்கள்.

முதலில் வாசகர்கள் சார்பில் சிலர் பேசியுள்ளனர். பிறகு, எஸ்.குருமூர்த்தி, பழ.கருப்பையா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் ஆகியோர் உரையாற்ற, இறுதியில் சோ பேசியிருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக நேர்மை, நீதி காக்க வெளிவந்து கொண்டுள்ள பத்திரிகை துக்ளக்தான் என்று பழ.கருப்பையா பாராட்டியிருக்கிறார். அவர் எப்போதும் நேர்மை, நியாயம் பற்றி மிகுதியும் கவலைப்படுகின்றவர். அதனால்தான், ஜெயலலிதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். காந்தியவாதி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அவர், காந்தியாருக்குப் பிறகு கண்டெடுத்துள்ள மகாத்மா ஜெயலலிதாதான்.

இப்போது மட்டுமில்லை, தொடக்கத்திலிருந்தே தி.மு.க. ஆட்சி, ஒரு அராஜக ஆட்சிதான் என்பது அவர் கருத்து. ஆனால் நடுவில் கொஞ்சகாலம் அவர் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார் என்பது இப்போது நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எஸ்.குருமூர்த்தி, சோ மாதிரியே இன்னொரு ‘யோக்கியர்’. முருகன் இப்போது சரத்குமார் கட்சியில் இருக்கிறார். (அது சரி, சரத்குமார் கட்சி இப்போது எங்கே இருக்கிறது?).

இறுதியில் பேசியுள்ள சோ, எப்படியாவது வரும் தேர்தலில், தி.மு.க வைத் தோற்கடித்து விட வேண்டும் என்பது குறித்தே கவனம் செலுத்தியுள்ளார். தேர்தலில் யாரும் வாக்களார்களுக்குப் பணம் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தால், அ.தி.மு.க.தான் வெற்றிபெறும் என்று ஓர் அரிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டுள்ளார்.

தி.மு.க.வின் மீதும் கலைஞரின் மீதும் இவர்களுக்கெல்லாம் என்ன கோபம்? ஏன் இவர்கள் இப்படி எரிந்து விழுகிறார்கள்? பத்திரிகை சுதந்திரத்தில் தி.மு.க. அரசு குறுக்கிட்டதா அல்லது குறிப்பாகத் துக்ளக் இதழுக்கு ஏதேனும் இடையூறு செய்கிறதா என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் ஒரு விடையும் கிடைக்கவில்லை.

காலகாலமாக, சோ, சுப்பிரமணிய சாமி போன்ற பார்ப்பனர்களுக்கும், சில பார்ப்பன அடிமைகளுக்கும் தி.மு.க. மீது, குறிப்பாகக் கலைஞர் மீது இருந்துவரும் பகையே இதற்கான காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெயலலிதா தன் ஆட்சியில் எவ்வளவோ தீமைகள் புரிந்தார். சமூகத்தின் சகல தரப்பினர் மீதும் ஒடுக்குமுறைகளை ஏவிவிட்டார். எல்லாவற்றையும் தாண்டி, பார்ப்பனர்கள் ‘லோக குரு’ என்று சொல்லித் தலையில் வைத்து ஆடும் சங்கராச்சாரியையே கைது செய்தார். அத்தோடு நிற்காமல், அவர் செய்த பாலியல் குற்றங்களையயல்லாம் அம்பலப்படுத்தி, அவரைப் புழுதியில் போட்டுப் புரட்டி எடுத்த பின்னும், அவர்கள் ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தனர்.

அதற்குப் பெயர்தான் ‘இனப்பாசம்’ என்பது.

ராஜாஜிக்குப் பிறகு, அவர்களுக்குக் கிடைத்த ஒரே சொத்து அந்த அம்மையார்தான். அவரும், அவர் கட்சியும் இப்போது கலகலத்துப் போயிருப்பது கண்டு, கலங்கிப் போயிருக்கிறார் சோ.அதனால்தான் தன் நடுநிலை வேடத்தை எல்லாம் கூடக் கலைத்துவிட்டு, நேரடியாகவே வீதிக்கு வந்து, அ.தி.மு.வுக்கு ஆதரவு கேட்டுள்ளார்.

தி.மு.க.வை விடக் கடுமையாகப் பார்ப்பனர்களைச் சாடும் திராவிடர் கழகம் போன்ற பல அமைப்புகள் இங்கே உள்ளன. இன்னும் சொன்னால், தி.மு.க.வில் பார்ப்பனர்களைச் சாடிப் பேசுகின்றவர்கள் மிகக் மிகக் குறைவுதான். இருப்பினும், கலைஞர் மீது அவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்றால், அவர் அதிகாரத்தில் உள்ளார் என்பதுதான்.

இன்றைக்குத் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மக்கள் தலைவராகவும், ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளவராகவும் உள்ள கலைஞர், தான் பெரியாரின் பிள்ளைதான் என்பதை அடிக்கடி வெளிப் படுத்துகின்றார். மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளையும், பார்ப்பன எதிர்ப்புச் செய்திகளையும் வெளிப்படுத்துகின்றார். திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைத் தன் பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொள்கின்றார்.

பொறுக்குமா அவாளுக்கு? அதுதான் பொங்கி எழுகின்றார்கள். எப்படியாவது இந்த மனிதரை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றிவிட முடியாதா என்று துடியாய்த் துடிக்கிறார்கள். ஆனாலும் பாவம் என்ன செய்வது? என்றைக்கும் இல்லாத அளவு, இன்றைக்கு அவருடைய செல்வாக்கு கூடியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அவர் அறிவித்த திட்டங்களைத் தாண்டி, இன்று அவர் அறிவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு திட்டமும், அவருடைய புகழையும், ஆட்சியின் செல்வாக்கையும் உயர்த்திக் கொண்டுள்ளன.

இந்தியாவிலேயே, மகளிர் சுயநிதிக் குழுக்களின் மூலம் கூடுதல் பயன்பெற்றிருக்கும் மாநிலம் தமிழ்நாடாகத்தான் உள்ளது. அதனால்தான் இப்போதெல்லாம் தேர்தல்களில் பெண்கள் கூடுதலாக வாக்களித்தால், தி.மு.க.வின் வெற்றி உறுதி என்றாகிறது. கலைஞர் உயிர்க் காப்பீட்டுத் திட்டம், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்குப் பேருதவி செய்யும் திட்டமாக உள்ளது. ஆந்திர மாநிலத்தில் தோல்வியடைந்த அத்திட்டம், தமிழ்நாட்டில் மிகப் பெரும் வெற்றி அடைந்துள்ளது.

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி மிகப் பெரும் அளவில் எழுந்து கொண்டிருக்கும் எட்டு மாடி நூலகக் கட்டிடமும், புதிய சட்டமன்ற வளாகமும் அவர் பெயரை வரலாற்றில் நிலையாகப் பதிக்கவுள்ளன. கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்கும் ‘அனைவருக்கும் வீடு’ திட்டமும் அரிய பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சோவும், அவரைச் சுற்றியுள்ள கும்பலும் எழுப்பும் இரைச்சல் எவர் காதிலும் விழப்போவதில்லை. எனினும் ஒன்றைத் தமிழின உணர்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பார்ப்பனர்களைப் பார்த்தாவது நாம் பாடம் படிக்க வேண்டும். அவர்களின் ஆசைக்கு நாம் என்றும் துணைபோய்விடக் கூடாது என்ற எண்ணம் நம் நெஞ்சில் உறுதிப்பட வேண்டும்.

சுப.வீரபாண்டியன்

Comments

19 comments

19
Sukdev
Prof. சுபவீ , உங்கள் கட்டுரையில் எதிரியை சரியாக அடையாளம் காட்டியுள்ளீர்கள். ஆனால் கலைஞரை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வது எப்படி சரியகும். இன்றும் தனக்கு நெருக்கமான நண்பர் ஸோ என்றே கலைஞர் சொல்லிக் கொள்கிறார். இத் குறித்து எதுவுமே உங்கள் கட்டுரையில் இல்லை. ஈழத்திற்காக Pஓராடியவர்கள் மண்டை உடைபடும் Pஓது கலைஞர் தரும் நிழல் எதற்கு.
vijayan
தன் பதவியை காப்பாற்றீ கொள்ள எத்தனை தடவை பார்பனர்களோடு கூட்டணி வைத்திருந்தார் என்பதை தமிழன் அறிவான்.விஜயன்.
M.Munisamy
கண்மூடிதனமாக ஒரு தரப்பை மட்டும் குறை சொல்வது சரியான விமர்சனமாக இருக்குமா என்பதை சிறந்த விமர்சகர்களில் ஒருவரான சுப.வீ அவர்கள் சிந்தித்து இருதரப்பு செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எழுதினால் சிறப்பாக இருக்கும்.
Shankar
அய்யா நண்பர்களே...
மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் அளிக்காத ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என நினைக்கும் சோ போன்றவர்களின் கருத்து என்றுமே மக்கள் மன்றத்தில் எடுபடாது...
நன்றி...
சங்கர்.
tamil
ஐயா சுபவீ.....
போதும் உங்கள் ஜால்ரா? ஜால்ரா அடிப்பதில் சிறந்தவர் நீங்களா அல்லது வீரமணிய? தமிழன் என்ற காரணத்திற்காக இதுவரை காவடி தூக்கி என்ன பயன்? கண் எட்டும் தூரத்தில் உள்ள ரத்த சொந்தங்களை கொன்றது தான் மிச்சம். இதே சோ இவரை புகழ்த்து எழுதி விட்டால் முதல் பக்கத்தில் போடா மாட்டார்களா?
தயவு செய்து உங்கள் ஜால்ராவை உங்களோடு வைத்து கொள்ளுங்கள்.
shlini
கருணா ஆட்சி ஒழீந்தால் தான் தமிழகம் உருப்படும்..
அதுவரை தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது......
shalini
இலங்கை தமிழரை காப்பாற்ற வக்கற்ற கருணாநிதிக்கு தமிழின தலைவர் பட்டம் ஏன்?
Chithara Cheran
ஐயா! சுபவீ ஐயா! நீங்கள் வாதாட்டத்தில் ஒரு சூரப்புலிதான். கிஃட்லர், இடிஅமீன் போன்றோருக்காகவும் வாதாடநேர்ந்தால், இவர்கள் மகாத்மாக்கள் என்று உலகை நம்பவைக்கும் பேச்சாற்றல் உங்களிடம் உண்டு என்பது எமக்கெல்லாம் தெரியும்.
இருப்பினும், பேயை ஓட்டுவதற்காக, பிசாசுடன் கூட்டுச்சேர்ந்தமை சரியானதுதானா?
கொலைஞரின் கையில் படிந்துள்ள, ஈழத்தமிழனின் இரத்தக்கறை,- அவருக்குக் கைகொடுத்த உங்கள் கையிலும் நிரந்தரமாகப்படித்துவிட்டதே!
இதை எங்கு கொண்டுபோய்க் கழுவப்போகிறீர்கள்?
Ganesan
ஐயா,
சுபவி.
Please Don't write article about anything, We do not believe you. IF you want praise karunanithi please go and write in murasoli. ok. I do not like see your face anywhere.
pattabiraman
தனக்கு பிடித்தவர்கலை பாராட்டுவதர்க்கு சுபவிக்கு உரிமை உள்ளது. அதில் தலையிட உரிமை இல்லை.
ஆனால், அவரதுநேர்மையை ?.

JAYALALITHA KAIDU SEIDHA SANKARAACHAAIYAI VIDUDHALAI SEIDU PAADHUKAAKKUM NADAVADIKAIIL KALANGAR ARASU SEYALPADUVADU YEAN. MANJAL THUNDIN MAGIMAIYAA. ALLADU SAMIGAL SABAM VIDUVAARGAL YENRA BAYAMAA.

SANKARACHARIYAI KAIDU SEIYAVENDUM YENRU PORAATAM NADATHIYA VEERAMANI ADHU PATRI VAAI THIRAPPADILLAI YEAN.

JAYALAITHAAVIN CHO, SU SAMY, KALAINGARIN MARAIMUGA AALOSAGARGAL AAGIVITTANARAA?.

ALLADU KADANDHA KAALATHIL BJP IN MADUKASAAYAM KUDITHA MAYAKKAMAA.

YEDU ENRU SUBA VEERAPANDIYAN VILAKKI IRUNDHAAL AVARADU NEYRMAI YAI SANTHEGAPADAVENDIYADHILLAI.
அக்னிப்புத்திரன்
திரு.சுப.வீ கருத்துகள் முற்றிலும் உண்மையே. அதிகாரத்து வந்து சமூக நீதியைச் சட்டத்தின் துணையைக் கொண்டே கலைஞர் நிறைவேற்றிவிடுவதால் 'அவாளுக்கு' அய்யா பெரியாரை விட திரு.வீரமணியைவிட கலைஞர் மீதே அதிகம் தாக்குதல் தொடுக்கிறார்கள். தமிழர்களின் தொடையில் மீண்டும் கயிறு திரிக்க கலைஞர் பெரும் தடையாக இருக்கிறார். இதுவே சோ மற்றும் சு.சாமி போன்றவர்களுக்கு வயிறெரிந்தும் குடல் கும்பி எல்லாம் எரிந்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முயல்கிறார்கள். இந்த சோ இதற்காக ஜெயாவைச் சந்தித்து விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி செய்து கொள்ள அறிவுரை வழங்கியிருக்கிறார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இந்தக்கும்பல் பதற்றத்துடன் செயல்பட்டு திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க முயல்கிறது. ஆனால் வழக்கம் போல ஒருசில குருட்டுக் குணம் கொண்ட தமிழர்களே தங்களுக்கு தாங்களே குழிபறித்துக்கொள்ளுவது போல கலைஞரை எதிர்ப்பது எப்போதும் போல தொடர்கிறது. தமிழர்கள் எப்போது ஒரே அணியில் நிற்கும் காலம் வரும்?
tvs
கீ ற்று குழுவினருக்கு....
சோ விரோதி. சுப.வீ. துரோகி. இருவரும் ஆபத்தானவர்களே...
சுப.வீ. கட்டுரைகளைத் தவிர்க்கவும்...
raja raman
திரு சுப.வீ அவர்களே,
ஒரு பக்க சார்பான கட்டுரைகள் தான் தந்தைப் பெரியார் கற்றுக்கொடுத்த பகுத்தறிவோ! உண்மையான பகுத்தறிவின் படி எழுதுங்கள்.
tvs
அய்யா, கீற்று மின்னிதழுக்கு கட்டுரை எழுத விரும்புகிறேன். இதே பாண்ட்டில் அனுப்பலாமா?
manikandan
mmr subavee congratulations and carryon
manikandan
very good subee ayyaa
Rajagopal
Dear சுபவி...

I like your article very much. Its 100% true. Please write more articles. Thank you.
இராசகம்பீரத்தான்
அய்யா சுபா.வீ அவர்களே,

பார்பண எதிர்ப்பினை சமாளிக்க, பெரியாரின் பகுத்தறிவு சுடரை ஒழிக்க இப்பொழுது பிராமாணியம் தேர்ந்தெடுத்துள்ள ஒரே ஆயுதம் தமிழினம் பேசுவதும், புலி ,ஈழ ஆதரவு ,எதிர்ப்பு என பகுத்தறிவாளர் களை பிறித்து வீரியம் இழக்க செய்யவும், தர குறைவான விமர்சனங்கள் வைப்பதும் தான்.

பிராமணிய ஊடுறுவள் சதிகள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வலை பின்னல்களில் தமிழ் உணர்வு பேசி கொண்டு கலகம் மூட்டுவதும் , தரமற்ற விமர்சனங்கள் புரிவதும் வாடிக்கையாகி விட்டது, இதில் உண்மையான உணர்வாளர்களை காயப்படுத்தி முடமாக்குவது தான் அதிகமாக நடைபெருகிறது.

உங்கள் கட்டுரையின் பார்பண மணு- ”சோ ”வின் பாரம்பர்ய கழிவு அரசியல் காய் நகர்த்துதளின் உண்மையை உணர்த்தியுள்ளீர்கள். அது அவர்களின் காலங்காலமாய் செய்துவரும் ராஜ குரு தந்திரங்கள்தானே, சு.சாமி ஒரு தேநீர் விருந்து கொடுத்தால் ஆட்சி மாற்றமே நடக்கும் என்பது போன்ற ஆரிய சூத்திரங்களை பற்றி மக்கள் எல்லோரும் அறிவர்.
இவர்கள் எல்லோரும் அவர்களுக்கு உரியனவற்றை செய்து வருகின்றனர். ஆனாலும் கலைஞர் ஒன்றும் விமர்சணத்துக்கு அப்பால் இருப்பவர் அல்ல.
பெரியாரின் கொள்கைகளை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் இன்று அந்த கொள்கைகளை துருபிடிக்க வைத்தவரும் கலைஞர்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
பிராமானிய தோசம் கலைஞரையும் அவர் குடும்பத்தையும் தீண்டி நாட்கள் ஆகிவிட்டது,
நல திட்டங்களை கொண்டு இன துரோகத்தை மறந்து விடமுடியாது என்ற துயருடன் இருக்கும் தமிழர்களுக்கு, தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞர் ஒரு முறையாவது ஈழத்து பிரச்சனையில் எந்த அச்சுருத்தலையும் கடந்து அவர் மரணிக்கும் முன்பு, அவரின் குரல் உலகம் முழுதும் ஒலிக்க வேண்டும்.
மத்திய அரசு செவி சாய்க்கும் அளவிற்கு ஒலிக்க வேண்டும்.
மத்திய அரசின் துரோகம் தான் தமிழனின் பேரழிவிற்கு காரண்ம் என்பதை உங்களை போன்ற எல்லோருக்கும் தெரியுமாதளால்.

அவருக்குள் இருக்கும் மீதமுள்ள பகுத்தறிவை காக்க வேண்டிய பொருப்பு உங்களுக்கும் , வீரமணி அய்யாவிற்கும் உள்ளது என்பதை ,சற்று நினைவூட்ட விரும்புகிறேன்.
nagasundaram
சுப வீஅவர்களே ! ஜெ.வை சமூகநீதி காத்தவீராஙக்னை என்ற விருது வழஙகி பெரியாரின கொள்கையைப் போற்றிய சிந்தனைச்செம்மல்தான் வீரமணி என்பதை மறந்து விடாதீர்கள்1 கலைக்னரின் குடும்பம் எத்தகையக் கொள்கைப் பற்றுக் குடும்பம் என்பதியும் நீஙகள்தான் விள்க்க வேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.