லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என ஜெயலலிதா அரசு கொண்டுவந்துள்ள அரசாணை குறித்து உங்கள் பார்வை என்ன?
அதிகாரிகளை எல்லாம் ஊழல் பேர்வழிகளாக மாற்றிய பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு. தேர்தலில் கோடிக் கணக்கில் செலவு செய்து மக்களின் வாக்குகளை பர்ச்சேஸ் செய்கிறார் அரசியல்வாதி.
ஜெயித்து ஆட்சிக்கு வந்ததும், செலவு செய்த கோடிகளைப் பலமடங்கு லாபத்துடன் எடுக்க நினைக்கும் ஆட்சியாளர்கள், அதனை அதிகாரிகள் மூலம் சாதித்துக்கொள்கின்றனர்.
ஆட்சியாளர்களுக்குப் புரோக்கராகச் செயல்படும் அதிகாரிகள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்கின்றனர்.
ஆட்சியாளர்களால் அதிகாரிகளும், அதிகாரிகளால் ஆட்சியாளர்களும் பரஸ்பரம் ஊழல்வாதிகளாக ஆக்கப்படுகிறார்கள்.
இதில், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பவர்கள் அதிகாரிகள்தான். தங்களின் அடிமைகளாக இருக்கும் அதிகாரிகளைக் காப்பாற்ற அல்லது பாதுகாக்கவே இப்படியரு அரசாணையை கொண்டுவந்திருப்பதாக நினைக்கிறேன்.
தேவசகாயம் IAS (ஓய்வு)
நன்றி - நக்கீரன் (பிப்ரவரி 10, 2016)