சென்னை, அறிவாலயம், கலைஞர் அரங்கில், திராவிட இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்ற நாளில், தினமலர் நாளேடு, அவ் விழாவிற்கு எதிராகப் புனையப்பட்ட செய்தி ஒன்றினை, வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. விழாவிற்குத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு என்றும், மக்கள் மாநாடு கட்சி கடும்கண்டனம் என்றும், மீண்டும் பத்தாவது பக்கத்தில் தலைவர்கள் கண்டனம் என்றும் பல்வேறு தலைப்புகள் இட்டுத் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

அந்தச் செய்திகளில் முன்வைக்கப்பட்டுள்ள விவாதங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அந்த அறிக்கைகளைக் கொடுத்த மாபெரும் கட்சி களும், மாபெரும் தலைவர்களும் யார் என்று பார்க்கலாம். முதல் பக்கத்தில், மக்கள் மாநாடு கட்சியின் தலைவர் சக்திவேல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்கள் மாநாடு கட்சி என ஒன்று எங்கே உள்ளது என்பது குறித்தும், அதனுடைய தலைவர் சக்திவேல் எங்கே தலைமறைவாக உள்ளார் என்பது குறித்தும் விவரம் அறிந்தவர்கள் நமக்குச் செய்தி அனுப்பலாம்.

காணவில்லை என்னும் பகுதியில் போட வேண்டிய செய்திகளை எல்லாம் தினமலர் முதல் பக்கத்தில் வெளியிடுகிறது. அந்தப் பகுதியில் கூட காணாமல் போனவரின் புகைப்படத்தை வெளியிடும் பழக்கம் உண்டு. தினமலரில் அவ்வளவு பெரிய தலைவரின் படம் கூட வெளியிடப்படவில்லை. தமிழகத்தின் முன்னாள் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் தலைமைநிலையச் செயலாளர் என ஒருவர் என்று அடையாளம் தெரியாத பலரின் பெயரால் அறிக்கைகள் வெளியிடும் மஞ்சள் பத்திரிகையாக மாறிவிட்டது தினமலர்.

தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்வதில்லையாம். தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தப் பூணூல் மலர் ஒரு கேள்வியை முன்வைக்கிறது. திராவிடன் என்பதை ஒப்புக் கொண்டால், திராவிட மொழிக்குடும் பத்தை ஒப்புக்கொள்ள வேண்டிவரும். அதன்படி, திராவிட மொழிக்குடும் பத்தில் தமிழே மூத்த மொழியும், முதன்மை யான மொழியும் ஆகும் என்ற கால்டுவெல்லின் ஆய்வை ஏற்க வேண்டி வரும்.

அப்படி ஏற்றால் தமிழுக்குப் பின்னால் தான் தங்கள் மொழிக ளெல்லாம் நிற்கின்றன என்னும் உண்மையை அவர்கள் ஏற்றவர்கள் ஆவார்கள். அதனால்தான் அவர்கள் யாரும் தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்வ தில்லை. அதனை அவர்கள் தங்களுக்குத் தாழ்வு என்று கருதுகிறார்கள். ஆனால் தமிழே மூத்த மொழி என்னும் உண்மையை ஏற்கும் தமிழர்கள் பெருமிதத்தோடு தங்களைத் திராவிடர் என்று அழைத்துக் கொள்கின்றனர். இதுதான் வேறுபாடு. இந்த வேறுபாடு பூணூல்களுக்கும் புரியத்தான் செய்யும். ஆனால் சமற்கிருதமே தேவபாசை என்று பிதற்றிக்கொண்டிருக்கும் அவர்கள், திராவிடர் என்று சொல்வதன் மூலம் தமிழுக்கு வரும் ஏற்றத்தை எப்படித் தாங்கிக் கொள்வார்கள்?

பா.ம.க. நிறுவனர் ராமதாசை வேறு தினமலர் தன் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. திராவிட இயக்கத்தை யார் கொச்சைப்படுத் தினாலும் அவர்களைப் பார்ப்பனர்கள் பாராட் டத்தானே செய்வார்கள். திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று ராமதாசு கூறிவிட்டாராம், திளைத்து மகிழ்கிறது தினமலர். “கருணாநிதி வம்சாவளியினர் ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்” என்பது ராமதாசின் கூற்று என்கிறது தினமலர். எந்த ரத்தப்பரிசோதனை நிலையத்தில் இதுபோன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் நடக்கின்றன என்பது நமக்குத் தெரிய வில்லை. அதனை நம்பி ராமதாசு அப்படிச் சொல்லியிருப்பாரெனில், அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அடுத்த பரிசோதனையில் உங்கள் மூதாதையரைப் பற்றியும் இவர்கள் ஆராய்ச்சி செய்து, உங்களை மராத்தியர் என்று சொன்னாலும் சொல்லி விடுவார்கள்.

திராவிட என்ற போர்வையில் கருணாநிதியும், வீரமணியும் மீண்டும் தமிழர்களை அழிக்கப் புறப்பட்டுள்ளனர் என்கிறார் அந்த மாபெரும் தலைவர் சக்திவேல். திராவிட என்பது நமக்குப் போர்வையோ முகமூடியோ அல்ல. நம் இனமானப் பேராசிரியர், விழாவில் குறிப்பிட்டதைப் போல, திராவிடன் என்பதே நம் முகம். இந்து என்பதும், சூத்திரன் என்பதும்தான் நமக்குப் போடப் பட்ட முகமூடிகள். அந்த முகமூடிகளை, அந்தப் போர்வைகளைக் கிழித்தெறிந்துவிட்டுத்தான் திராவிடர்களாய் மீண்டும் இப்போது அணிவகுக்கத் தொடங்கியுள்ளோம்.

parpanar_370தினமலருக்கும், பார்ப்பனர்களுக்கும்தான் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் எவ்வளவு அக்கறை. திராவிடர்கள் என்னும் பெயரில் தமிழை அழிக்க வருவதாய் முதலைக் கண்ணீர் வடிக்கும் தினமலர் அறியுமா, தமிழகத்தில் தமிழ் உணர்வை ஊட்டியதே திராவிட இயக்கம்தான் என்பது? 1950களில் ஏராளமான சமற்கிருதப் பெயர்களைத் தமிழில் மாற்றிய இயக்கம் எது? சமற்கிருதப் பேராசிரியர்களுக்கு இணையாய்த் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஊதியம் பெற்றுத் தந்த இயக்கம் எது? 1911ஆம் ஆண்டு முதல் நீக்கப் பட்டிருந்த தமிழ்ப்பாடத்தை மீண்டும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1926ஆம் ஆண்டு முதல் கொண்டு வந்த இயக்கம் எது?

மேற்காணும் கேள்விகளுக்கு எல்லாம் பார்ப்பனர்கள் விடை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் இங்கு அவற்றை எழுப்பவில்லை. தமிழால் பயன்பெற்ற, திராவிட இயக்கத்தால் பயன்பெற்ற தமிழர்களேனும் இந்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே அச்செய்திகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

ஒரு கட்சி அல்லது இயக்கம் தங்களின் நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு எவரேனும் எதிர்ப்புத் தெரிவிப்பார்களா? 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தன் நூற்றாண்டைக் கொண்டாட வில்லையா? எங்கோ நடந்த சோவியத் புரட்சியின் வீரவரலாற்றை இங்கே இந்த மண்ணில் நாம்கூட மகிழ்ந்து கொண்டாட வில்லையா? எந்த விழாவிற்காவது எவராவது கண்டனம் தெரிவிக்கும் அநாகரிகம் அரங்கேறி உள்ளதா இன்றுவரையில்?

திராவிட இயக்க நூற்றாண்டிற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு? எதற்காகப் பார்ப்பனப் பூணூல் கள் படபடக்கின்றன? எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உள்ளது. திராவிட இயக்கம் கண்டு நடுங்கும் பார்ப்பனர்களின் பயமும் பதற்றமும் இன்னும் அவர்களை விட்டு விலகிட வில்லை. எங்கே மறுபடியும் அந்த இயக்கம் வீறுகொண்டு எழுந்துவிடுமோ, தங்களின் ஏமாற்றுப் பிழைப்பில் எதிர்காலம் மண்தூவிவிடுமோ என்று அவர்கள் அஞ்சி ஒடுங்குகின்றனர். அச்சமே எதிர்ப்பாய் வேறுவடிவம் எடுக்கிறது.

நச்சுப் பாம்பை அடிக்கத் தடி ஓங்கினால், அது அச்சத்தின் காரணமாய் சீறி விழுவது இயல்புதானே! பெரியாரின் தடி கண்டு இந்தப் பெரும்பாம்புகள் இப்போது சீறுகின்றன.

ஒரு விதத்தில் தினமலருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அன்றைய விழாவிற்கு வீரியமும் விறுவிறுப்பும் வந்து சேர்ந்ததற்கு அந்த நாளேட்டின் அறிக்கையும் ஒரு காரணம். தினமலரின் பணி தொடர வாழ்த்துகிறோம்.

Comments

5 comments

5
எச்.பீர்முஹம்மது
சு.ப.வீரபாண்டியாருக்கு,

தினமலர் கடந்த இருபது ஆண்டுகளில் காவிமயமாகி இந்துத்துவாவை உள்வாங்கி கொண்டு அதற்கேற்றபடி செயல்பட்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்களால் பூணூல் மலர் என்று சொல்லப்படுவது தான் வியப்பாக இருக்கிறது. காரணம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது மட்டும் தான் உங்களுக்கு பூணூல் ஞாபகம் வருகிறது. டி.வி ராமசுப்பய்யருக்கு தபால் தலை வெளியிட்டதை மறந்து விட்டீரா? அப்போது மட்டும் பூணூல் உங்களுக்கு கருப்பு சிவப்பு நூலாக தென்பட்டதா? அதிகாரத்திற்கு வந்து விட்டால் தினமலரும், பார்ப்பானும் உங்களுக்கு தேவைப்படுகிறது. ஆட்சி போய் விட்டால் மீண்டும் பார்ப்பனவாதம். அதிகார வர்க்கத்தின் பிராமணர்களை நியமிப்பது இருக்கட்டும். அது தவிர்க்கமுடியாதது கூட. ஆனால் உங்களின் நடைமுறை வாழ்க்கையில் பிராமணர்களை தவிர்க்க முடியவில்லை. முரசொலி மாறனுக்கு ஆறாயமுத அய்யங்கார் தான் மாமனாராக அவரின் மகள் தான் மனைவி ஆக வர முடிந்தது. அவரின் மகன்களும் தங்கள் தந்தை வழியையே பின்பற்றினர். ராஜாத்தி அம்மாள் பெங்களூரில் சென்று குறி கேட்டது எந்த பூசாரியிடத்தில்? கருணாநிதி பயன்படுத்தும் வழக்கறிஞர்கள், தொழில் கூட்டாளிகள், ஆடிட்டர்கள் யார்? குடும்பத்தின் பெயர்கள் மட்டும் தமிழ்பெயர்களா? நீதிக்கட்சி ஆட்சியில் சேதுரத்தினம் அய்யர் அமைச்சராக இருந்த வரலாற்றை மறந்து விட்டீரா? அன்றைய சட்டசபையில் நீதிக்கட்சியின் உறுப்பினர்கள் பிராமண உறுப்பினர்களோடு கொஞ்சி குலாவியதை மறைக்கிறீரா? சின்னக்குத்தூசியாரை மறந்து விட்டீரா? பாரதீயஜனதாக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து குஜராத் கலவரம் தொடர்பான விஷயத்தில் மாறுபட்ட நிலைபாட்டை திமுக எடுத்ததை வரலாறு இன்னும் மறக்கவில்லை. கூர்ந்து கவனிக்கும் போது இவர்களுக்கு பார்ப்பணீயம் ஆட்சியில் இல்லாத போது மட்டுமே கண்ணுக்கு தெரியும். திமுகவில் இருந்து பிரிந்த நேரத்தில் கண்ணதாசன் சொன்ன ஒன்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது. "திராவிட இயக்கத்தார் எல்லாம் பார்ப்பணர்களை விரட்டுவோம். பார்ப்பணர்களை விரட்டுவோம் என்கிறார்கள். ஏன் அவர்கள் பார்ப்பணத்திகளை விரட்டுவோம் என்று சொல்ல தயங்குகிறார்கள். அந்தகேள்விக்கான அவசியமும் பதிலும் அக்கால உங்கள் முன்னோடிகளின் வாழ்க்கை முறையிலே இருந்தது. திராவிட இயக்கத்தை பொறுத்தவரை பெரியார் மட்டும் தான் சற்று வித்தியாசமானவர். அதனால் தான் இந்துத்துவ சக்திகளுக்கு பெரியார் இன்னும் பெரும் சவாலாகவே இருக்கிறார். அவரிடத்திலும் போதாமைகள், சறுக்கல்கள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் இன்றைய கட்டத்தில் வரலாற்றில் ஒரே ஒரு பெரியார் தான் இருந்தார். அவரும் மறைந்து விட்டார். அவருடைய நிழலாக இன்று யாரையுமே நாம் முன்வைக்க முடியாது. உம்முடைய தலைவரான கி.வீரமணியும், கருணாநிதியும் இன்றைக்கு கார்பரேட் யுகத்தின் நிழல்கள் தான். மேலும் பார்ப்பண எதிர்ப்பு என்பது உம்மை பொறுத்த வரை கொள்கைரீதியானதோ, மனோபாவ ரீதியானதோ அல்ல. மாறாக உங்களின் survival யை பொறுத்தது.
இன்னும் நிறைய விவாதிக்கலாம். ஆதாரபூர்வமாக, வரலாற்று தெளிவாக , நீளும் தன்மை கொண்டது அது.
R Nagaraj
அந்தக் காலத்து நாயர் எல்லாம் திராவிடம் என்று சொன்னார்.. இந்தக் கால நாயர் தமிழன் மேல் சுடுதண்ணி ஊத்துகிறான்.. கன்னட திராவிடன் விரட்டுகிறான்... ஆட்சியில் இருந்தால் ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று...பேச நாக்கு இரண்டு போற்றி என்பது யாருக்கு சரியாக இருக்கிறதோ இவர்களுக்கு படுகச்சிதமாக பொருந்துகிறது
Nallayen N
Mr Bir Muhammed is only keen to mudslinging on Mr Karunanidhi and Mr Subavee. Dravidian movement is all about against suppression of fellow humans and not against any individual.Pity that still people dont realise the reality.
rajasekar
always periyar and his policies are great and against parpanan and parpaniyam.first budhar,vallalar,jothilal pula,vaikunada nathar,puratchiyalar nathanar all are against this parpaniyam.So through history always the rationalist and justice are followed and try to implement by the above said peoples.apart from this if you go behind any of the individual leaders like karunanidhi or veeramani you never be answer to anyone.All the sutharars (Ramados,Nedumaran,Pe,Maniarasan,) and parapanan Dhinamalar,thuklak,subramanisamy will raise question about dravidaism.So please go by ism and behind any leader.Periyarism will help you throw blow on parpana faces." Parpana malam kalitha mulaikal " Periyar use to said it was till in society.
gopinath
If periyar not to taken the Dravidan Ajanda in Tamilnadu, still tamilnadu will go back 30 to 40 years. today who are raising the question to dravidan, its called they are balamed him mother. still the bramins control other cast peopels using the Latest Methods, see one thinks in most of the Tamil daily news papers founders and editors are Bramins. you can watch the News papers per day one news having to raising the questions of dravindan.

why they are continully critisiam to dravindan? and Dravidan Leaders.
how the bramins bleesed the our Leaders, the same we are also bleesed dravidan leaders. then how they are critisiasm?

please think.... tamil peopels......

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.