கலைஞர் தலைமையிலான அரசு 2006ஆம் ஆண்டு பதவியேற்றதும், சமச்சீர்க் கல்வி குறித்துச் சிந்திக்கத் தொடங்கியது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி முறைகளைச் சமப்படுத்தி, எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக 2006 செப்டம்பரில், மேனாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 2007இல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2010ஆம் கல்வியாண்டு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில், சமச்சீர்க் கல்வித் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்தக் கல்வியாண்டிலிருந்து அத்திட்டம் 10ஆம் வகுப்புவரை நீட்டிக்கப்பட இருந்தது. இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால், மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளி, தனியார்ப் பள்ளி, மெட்ரிக்குலேசன் பள்ளி என எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம் அமையும். அதனால் பிள்ளைகளுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லாத சமச்சீரான நிலை உருவாகும். இதற்காக பலகோடி ரூபாய் செலவிடப்பட்டு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்ட பாட நூல்கள் அச்சிடப்பட்டன. ஆனால் இப்போது, ஆட்சிக்கு வந்திருக்கும் புது அரசோ அத்திட்டத்தையே தள்ளி வைத்துவிட்டது. அல்லது, மறைமுகமாகக்  கைவிட்டுவிட்டது. இப்போது மீண்டும் பல கோடிகள் செலவழிக்கப்பட்டு, புதிய பாட நூல்கள் அச்சேற்றப்பட்டுள்ளன. சமத்துவமும் போயிற்று, நம் வரிப்பணமும் போயிற்று.

 

 

Comments

2 comments

2
Guest
சமச்சீர் சமச்சீர் என்று ஒப்பாரி , சாதகமானவரும் ,பாதகமானவரும் , செய்கிறார்கள் என்பதுதான்
உண்மை. பாடத்திட்டத்தில் சமச்சீர் என்பது பொதுவாக பட்டப்படிப்பு அளவில் .எப்போதும் இருக்கிறது.

தற்போது இரு நிலயில் படிக்கக்கூடிய அனைவருக்கும் இதைக் கொண்டுவருவதால் பாதிப்பே.
பாடத்திட்டத்தில் சமச்சீர் என்பதை விட படிப்பதற்கான சூழ் நிலைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தால் அதுதான் வரவேற்கப்பட வேண்டிய சமச்சீர் கல்வியாகும்.

கூரையில்லா வகுப்பறைகள் , ஓரிரு ஆசிரியர் மட்டுமே கொண்ட பள்ளிக்கூடங்கள் , அண்மையில் இல்லாத பள்ளிக்கூடங்கள் , வசதியற்ற பரிசோதனைக் கூடங்கள் , கழிவறையற்ற கல்வி நிலையங்கள் , பசியற்ற , உடையற்ற சிறார்கள் , போய் வர
வசதியற்ற நிலைகள், குடும்ப பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மாண்வர்கள் இவற்றை நிவர்த்தி செய்தாலே போதும் . யாராலும் , யாருக்கு இணியாகவும் வாழ்ந்துக் காட்ட முடியும்.

தமிழ் மொழிக் கல்வி ,ஆங்கிலவழிக் கல்வி , மாறுபட்ட இரண்டானாலும் , தமிழில் படித்து சாத்திதவர்கள் இருக்கிறார்கள் .ஆங்கிலமாக இருந்திருந்தால் , மேலும் பல்ர் சாதித்து இருப்பார்கள் என்று வாதிட்டால் , அந்த மேலும் பலரை விட சாதிக்காதவர்கள் ஆங்கிலவாழிக் கல்வியைப் பெற்றவர்கலீடத்தில் உண்டு என்பதை உணர முடியும் தமிழால் உய்ர்ந்தவர்களால்.

பாடத்திட்டம் முக்கியமல்ல , நன்றாகப் படிப்பதற்கான , நன்றாக சொல்லிக் கொடுப்பதற்கான அடிப்படைத் தேவைகளை சமக்சீர் செய்தாலே போதும்.

வரிப்பணம் போகிறது என்பதற்காக , தேர்தல்கள் நடத்தாமல் இருக்கிறோமா ? இடைத்தேர்தல் நடத்தாமல் இருக்கிறோமா? அரசியல் நடத்துவதற்காக தேவைய்ற்ற ஆட்சி கலைப்புகள் நடக்கவில்லையா ?

புத்தகம் அச்சிட்டது இந்த வருடத்திற்கு ,தப்பான முடிவிற்கு அது தண்டனையாக எற்போம். சமத்துவம் எதில் கொண்டுவரவேண்டும் என்பதே தேவையான ஒன்று.

அரசு வரிப்பணத்தில் raymonds எல்லோருக்கும் தேவையில்லை .உடுத்த உடையும் உண்ண
களியும் . ஒடுங்க ஓர் கூரையும் போதுமே .
R.uma
adippadaiye kalvithaan. athil samaththuvam thevaillai endraal, veru ethil

samaththuvam undaagum peyarillatha nanbare?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.