புலிக்குப் பயந்து
ஒளிந்து கொள்ள என்
காட்டை அடர்த்தியாய்
வளர்க்கத் துவங்கினேன்

கால்தடங்களைப் பதிய விடாது
மண் மூடி காடு வளர்ந்தது

என் கூடவே பெருகிய
முயல்களும் மான்களும்
திடீரென காணாமல் போகத்
துவங்கிய போதுதான் தெரிந்தது

காட்டின் நிழல்களூடே
நானறியாது புலிகளும்
பெருகியதை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.