நமது சந்திப்புகளில்
நிலவும் கடும் கோடை
எப்போதும் தகிக்கிறது.
 
எப்போதாவது பெய்யும்
சாரல் மழையில்
நாம் குதூகலிக்கிறோம் எனினும்
மழை குறித்த
சிலாகிப்புகள் ஏதுமின்றி
பெய்து போகிறது மழை.
 
கோடையை மட்டுமே
அசை போடுகிறோம்
எப்போதும்.
அதன் தகிப்பை
உஷ்ணத்தை
தந்து போன வியர்வை வீச்சை.

கோடையைப் பற்றி
பேசிப் பேசியே
வரவைத்து விடுகிறோம்
மீண்டும் அதன் உஷ்ணத்தை.

- இரா.பூபாலன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.