உன்னைப் பற்றிய மதிப்பீடுகள்
சரிந்து கொண்டிருக்கின்றன

நாம் ஆசையாய் வளர்த்த
பசுந்தாவரங்கள் பற்றி எரிகையில்
புன்னகைக்கிறாய் நீ

நமது பறவைகள்
உன்னால் இம்சிக்கப்பட்ட பிறகும்
விலக மறுக்கின்றன
உன்னைவிட்டு

எனினும்
கைவிடமுடியவில்லை
உன்னைப் பற்றிய நம்பிக்கைகளை

யாரோ ஒருவனுக்காக
நீ அழுத கணங்கள் மறைந்து
உன்னால் அழத் துவங்கியிருக்கிறார்கள்
யார் யாரோ

எரித்துக் கொளுத்துகிறாய்
நாம் சந்திக்கும்
அக் கிளுவை மரத் தோட்டத்தை

எரிந்தடங்கிய காட்டில்
உன் காலடித் தடங்கள்
அணைய மறுத்து
வெந்து தணிகின்றன

திரும்பும்போது
கை நழுவத் துவங்கியிருந்தன
உன் மீதான நம்பிக்கைகள்

- கு.இரமேஷ்குமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.