நீண்ட நாள் புழுதிகள்
படர்ந்த
தெருக்களும் நடைபாதைகளும்...
ஆனந்தமாக ஓடி
வாசல் வந்து
கை, கால்கள் நீட்டும்
சிறுமி...

கைக் குழந்தைக்கு
சோறூட்டி முடித்த
அம்மாவின்
காய்ந்த விரல்கள்...

சேற்றை உடம்பில்
வாங்கிக் கொண்ட
இரு சக்கர வாகனங்கள்
என...
நகரத்தை
இலவசமாகவே கழுவிவிடுகின்றது
மழை!

உற்றுப் பார்த்திருக்கிறீர்களா?
பூமியை முட்டும்
ஒவ்வொரு மழைத்துளியையும்
தன்
பெரும் சாம்ராஜ்யத்தின்
அடையாளமாக
ஒரு நொடி மட்டும்
மகுடம் சூட்டிக் கொள்வதை...

- மு.தமிழ்மீகனன், கோவை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.