ஒரு
வெற்றுக் காகிதம்
சில சமயம் கவிதையாகிறது

சில கவிதைகள்
வெற்றுக் காகிதத்தில்
கையெழுத்து இட்டதால்
கடனாளி ஆகின்றன

முன்பு வெற்றுக் காகிதங்களாய் இருந்த
சில
விவாகரத்து பத்திரங்கள்
வாழ்க்கையை
சிவப்பு குறுக்கு கோடிட்ட
வெற்றுக் காகிதங்களாக்குகின்றன

சில கடிதங்கள்
கொடுக்கப்படாத சேருமிடங்களால்
வெற்றுக் காகிதங்களாகின்றன

நானும் ஒரு
வெற்றுக் காகிதம் வைத்துள்ள போதும்
எழுதியவற்றையே எடுத்துக் கொள்கிறேன்
எப்போதும்,
என்முன் சம்மணம் இட்டு
விண்ணப்பிக்கும்
வெற்றுக் காகிதங்களுக்கு
உரக்க பதில் கொடுத்து!

- அருணாசலசிவா

More articles by அருணாசல சிவா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.