நன்றிக்குப் பேர் போன நாயும்
உழைப்பிற்குப் பேர் போன நானும்
ஒரு வகையில் ஒரே தரம்தான்
இருவரும் வாசலில்தான்
 வாசம் செய்கிறோம் !

நானோ!
 மழையிலும் வெயிலிலும்
 கல்லிலும் முள்ளிலும்
 உனக்காகவே உழைத்து - என்
 உடலை இரணமாக்கினேன் !

நீயோ
 என் காதறுந்ததற்கு
 ஆணியைப் பரிசளித்தாய்!
 பேசக் கூடாதென
 ஊசி கொண்டு தைத்தாய்!

நீயோ!
 என்னை மதிப்பதே இல்லை!

நானோ!
 உன்னைச் சுமக்க மறுப்பதேயில்லை!

அன்பே
 நீ என்னைத் தீண்டாத போதுதான்
 உணர்ந்தேன் இன்னும்
 "தீண்டாமை"
 தீரவில்லை என்று!

- தென்றல் பாரதி
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி
பெரம்பலூர்

Pin It