நீண்ட நெடும் பரப்பில்
கருவேல மரமிடை உறங்கும்
நிழல்
வெயில் கலந்த பெருவெளியில்
அலையடிக்கும் கடல் போலும்
புல்வெளி
சற்றுமுன் பெய்திருந்த மழைக்கு
தேங்கிய சிறு குட்டையில்
நீர் தெளித்து விளையாடி
பறக்கும்போது நீலம் பூத்த கருங்குருவி
அந்த நீண்ட மண்ணணைத்த
கரை மட்டுமே
அது ஒரு ஏரி என்று
கூறிக் கொண்டிருந்தது
தன்னை போலவே ஏரியும்
என்று நினைத்தபடி கடந்திருந்தாள்
ஏரி போலும் பெண்ணொருத்தி

உயிரோடை லாவண்யா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.