விழுதிறங்கிய மழைநீர்
விலைபோன உயிராய்
சாயத்தில் தோய்ந்து
சோரம் போனது.
தொழில் வளர்ச்சி

ஆயிரம் அடியில்
ஆழ்குழாய்க் கிணறு
நல்ல நீர்வேண்டி
நீளும் இரும்புக்கரமாய்
மனித முயற்சி

வரலாறு படித்தபோது
வஞ்சி மாநதி
புவியியல் படித்தபோது
நொய்யல் நதி
உண்மையென நெருங்கின்
நாற்றமிகு சாக்கடை

இனி
கெடுப்பதற்கு ஏதுமில்லை.
என்ன செய்ய?

நதியும்
வயலும் உள்ள
நல்லதோர் ஊர்நோக்கி
நகர்வோம்.
தொழில் வளர்த்து
பணம் பெருக்க...!

- ச.மோகனராசு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.