சாயல்களிலிருந்து விடுபடுதல் சுலபமில்லை

தற்கொலை செய்து கொண்டவர்கள்
எப்பொழுதும்
நம்மைத் துரத்தும்படியான
சாயலை
விட்டுச் செல்கிறார்கள்

தினமும்
பன்னிரெண்டு மணி
பேருந்தில்
இறந்தவர்கள்
வந்து போகிறார்கள்

உறைந்த தலையென
பனிக்கட்டி நினைவுகளில்
புதைந்த
மீளா முகங்களை
எதிர்கொள்ளும்
ஒவ்வொரு கணமும்
அதிர்ந்து
நடுங்குகிறது
உடல்

மறக்கப்பட வேண்டியவர்கள்
ஏதாவதொரு சாயலில்
ஏதாவதொரு சாலையில்
எதிர்பாரத பொழுதில்
நம்மைக் கடக்கிறார்கள்

சாயல்களிலிருந்து விடுபடுதல் சுலபமில்லை

சில சாயல்கள் அழ வைக்கின்றன
சில சாயல்கள் பதற வைக்கின்றன
சில சாயல்கள் சாரலில் நனைக்கின்றன

நேற்றும்
இரத்தச் சகதியோடு
தோண்டப்பட்ட கண்களில்
கடைசி முத்தத்தில்
கசிந்த
உன் கண்களில்
சாயலைப் பார்க்கிறேன்

- வா.மணிகண்டன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.