காலத்தின் அடர்கிளையிலிருந்து
விடைபெற்ற இலை ஒன்று
நிதானமாய் தரையிறங்கிக் கொண்டிருக்கிறது
மரத்திடம் நன்றி சொல்லியபடி...

இருத்தலின் உணர்வையும்
விடுபடலின் களிப்பையும்
தன் அசைவால் உரைத்தபடி
அது இறங்குகிறது கீழே...

காலம் தன் கடைசி வர்ணத்தை
அதன் உடலில் பூசியிருக்கிறது...

அனுபவத்தின் நீட்சியாய்
புடைத்திருக்கின்றன அதன் நரம்புகள்...

அவசர அவசியங்கள் ஏதுமின்றி...
காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு...
வெறுமனே
தரையிறங்கிக் கொண்டிருக்கிறது அது
கற்பித்தலுக்கான பிரக்ஞை ஏதுமின்றி!

- காயத்ரி

More articles by காயத்ரி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.