உத்தர பிரதேசத்தின் பழம்பெரும் கல்விநிலையமாக இருப்பது பனராஸ் இந்து பல்கலைகழகம் (பிஎச்யு). இங்கு ஜோதிடக் கல்வித்துறை சுமார் 4 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. சம்ஸ்கிருத வித்யா தர்ம விஞ்ஞானப் புலத்தின் கீழ் செயல்படும் இத்துறையில் மாணவர்களுக்கு ஜோதிடப் பட்டத்திற்கான கல்வி போதிக்கப்படுகிறதாம். இதன் அங்கமாக, தற்போது மேம்படுத்தப்பட்ட ஜோதிடப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு இப்போது சிறப்புச் சேவைகளை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஜாதகம் பார்ப்பது முதல் சடங்குகள் வரை 8 வகையான சேவைகள் வெளிநபர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கவுள்ளன. ஜோதிடத் துறையின் ‘பஞ்சாங்கப் பிரிவு’ அலுவலகத்தில், இதற்கென பிரத்யேகமான குளிரூட்டப்பட்ட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் வினய் பாண்டே அமர்த்தப்பட்டுள்ளார். ஜாதகம், நல்ல நாட்கள், திருமணப் பொருத்தம், வாஸ்து அடிப்படையிலான நிலத் திட்டம், மண் மேம்பாடு, ரத்தினக் கற்கள் மற்றும் சடங்குகள் குறித்த தகவல்களைத் தேடும் மக்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் இங்கு வழங்கப்படுகின்றனவாம்.

சடங்குகள் தொடர்பான ஆலோசனைக்கு ரூ.250, நல்ல நேரம் அறிய ரூ.100, பேராசிரியராக உள்ள ஜோதிடரை மாவட்டத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல ரூ.21,000, மாவட்டத்திற்குள் அழைத்துச் செல்ல ரூ.11,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனச் செலவுகளைத் தனியாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தில் 50% ‘தட்சணை’ (கவுரவ ஊதியம்) அடங்கும்.

இதுகுறித்து பிஎச்யுவின் ஜோதிடக் கல்வித்துறையின் தலைவர் பேராசிரியர் சத்ருகன் திரிபாதி கூறுகையில், ‘ஒவ்வொரு நபரும் தங்கள் பிரச்சினைக்கான தீர்வைக் காண வருவதால், இத்தகைய சிறப்பு ஆலோசனை மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ஜன்ம குண்டலி (பிறப்பு ஜாதகம்), வர்ஷ குண்டலி (வருடாந்திர ஜாதகம்) மற்றும் பிரஷ்ன குண்டலி (கேள்விக்கான ஜாதகம்) ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கான கட்டணத்தில் 50% ஜோதிடருக்கு தட்சணையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை துறை மற்றும் பிற செலவுகளுக்காக ஒதுக்கப்படும்" என்றார். உருப்படுமா இந்த நாடு?

பிரதமர் அலுவலகமா? பார்ப்பன பாதுகாப்பு அலுவலகமா?

ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மநுசாஸ்திரத்துக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான பாடத்திட்டங்கள் இடம் பெற்று இருக்கின்றதா? என்று விளக்கம் கேட்டு பல்கலைக்கழகங்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி இருக்கிறது பிரதமர் அலுவலகம்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பெயர் குறிப்பிடாத செய்தி ஒன்று முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் பல உயர்கல்வி நிறுவனங்களின் அம்பேத்கர், ஜோதிராவ் பூலே போன்ற தலைவர்களின் ஜாதி, மத எதிர்ப்பு சிந்தனையின் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. பாட நூல்களிலும் இடம்பெற்றுள்ளன என்றும், ஆண் ஆதிக்கம், ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் பார்ப்பன எதிர்ப்பும் மநுசாஸ்திர எதிர்ப்பும் மாணவர்களிடம் திணிக்கப்படுகிறது என்றும் இந்த விஷம் பரப்பும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என்றும் பதிவிடப்பட்டிருந்தது.

பெயர் குறிப்பிடாத இந்தப் பதிவை உடனடியாக கவனத்தில் எடுத்து பிரதமர் அலுவலகம் அடுத்த நாளில் செப்-27 உயர் கல்விநிறுவனங்களிடம் இது குறித்து மின்னஞ்சல் வழியாக விளக்கம் கேட்டுள்ளது பிரதமர் அலுவலகம். பார்ப்பனர்கள் பாதுகாப்பு அலுவலகமாக செயல்படுகிறது.

 (‘இந்து ஆங்கில நாளேடு’ செப்-30 அன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது)

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.