பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை:

senkodi_400ஈழத்தமிழர் உரிமைப் பார்வையில் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க தமிழக மக்களும் தமிழக அரசும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழர் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதல்லாமல் மனிதமே அதிர்கிற வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற மைய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இது பேரதிர்ச்சியாகவே இருந்தது.

அதற்கென மக்கள்திரள்   போராட்டங்களும் சட்டப்போராட்டமும் நடந்துவருகிற இவ்வேளையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி அவர்கள் தீக்குளித்ததாக வந்துள்ள செய்தி அனைவரையும் மேலும் அதிரவைத்துள்ளது.

கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்த ஆயிரம் வழிமுறைகள் இருக்க, போராடும் சக்திகள் தங்களையே அழித்துக்கொள்ளும் இம்முறையை அருள்கூர்ந்து யாரும் தொடர வேண்டாம் என வலிறுத்தி வேண்டிக்கொள்கிறோம்.

அவர்களது உணர்வுகள் நமக்குப் புரிகிறது. ஆனால் அதிகார வெறிகொண்ட மத்திய பாசிச ஆட்சியாளர்களுக்கு இது சிறு அசைவையாவது ஏற்படுத்துமா என்பது அய்யமே.

நாம் தொடர்ந்து நமது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை வலிறுத்திப் போராடுவோம்.

தோழர் செங்கொடியின் கடிதம்:

senkodi_letter_600

Comments

2 comments

2
avudaiappan
red salute com sengoti
கி.பிரபா
தன்னை அழித்துப் போராடுதல்கூடாது என்பதை வலியுறுத்தினாலும் உண்மையின் உணர்வை உணராதவர்களை அரியணையில் அமர வைத்ததன் விளைவே உணர்வு பொங்கிய நிலையில் செங்கொடி தன்னைத் தான் அழித்துக் கொண்டாள்.இனியாவது உண்மையின் விலை நல்லவர்களின் உயிர் என அரசு எண்ணும் அல்லவா!இடது பக்கம் விழுந்த உணவைப் புலி உண்ணாது; ஒரு மயிர் உதிர்ந்தாலும் கவரிமா எனும் விலங்கு உயிர் வாழாது எனும்போது அறிவையும் உணர்வையும் ஒருங்கே பெற்ற மனிதன் வேறு வழியின்றித் தானே பிறிதொரு உயிருக்காகத் தன் உயிரைப் போக்கிக் கொள்கிறான். அந்தப் பட்டியலில் செங்கொடி மலை போல் உயர்ந்து இன்றும் நம்முடன் வாழ்கிறாள் அல்லவா!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.