தொடர்புடைய படைப்புகள்

trupur thiravidam funtionதிருப்பூர் மாநகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.01.2021 அன்று தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா திருப்பூர் மாஸ்கோ நகர், பெரியார் திடலில் 12 ஆவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது.

காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த விழாவில் பறை இசை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள், மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சி, சிறுவர் பாடல்கள், தமிழிசைக்கு நடனங்கள் ஆகியவை சிறப்புடன் நடைபெற்றன.

அப்பகுதி வாழ் பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் என ஆர்வமுடன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவு வரை பங்கேற்றனர்.

நிகழ்வுகள் காலை 9 மணி முதல் நிகர் பறை இசைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. முதலில் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

பின்பு அதனைத் தொடர்ந்து 10.00 மணியளவில் குழந்தைகள் பெண்களுக்கான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் துவங்கி மாலை வரை நடைபெற்றது.

மேடை நிகழ்வுகள் மாலை 6 மணி அளவில் கழக மாநகரச் செயலாளர் மாதவன் தலைமையில் துவங்கியது. நந்தினி வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி, பூங்குன்றன், த.பெ.தி.க.வின் தியாகு ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார்கள்.

தமிழிசைப் பாடல்களுக்கு பகுதி வாழ் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது. காவை.இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா’ அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொங்கல் புத்தாண்டு சிறப்புரையாக தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சந்தோஷ், திமுக பொறுப்பாளர் கதிரேசன், மதிமுக பொறுப்பாளர் வடிவேல் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு அறிவியல மன்றத் தலைவர் சிவகாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற பெண்கள் குழந்தைகளுக்கு மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழா ஏற்பாடுகளில் தொடர்ந்து, மகாலட்சுமி, கோமதி, கணபதி, மோகன், நாகராஜ் ஆகியோர் முழுமையாகப் பங்கேற்றனர். இந்நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள் அகிலன், நீதிராஜன்,

வீ. தனபால், சங்கீதா, ராமசாமி, முத்து, ஐயப்பன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள். கழகத் தோழர் கார்த்திகா நிறைவாக நன்றி கூறினார்.

- திராவிடர் விடுதலைக் கழகம்

Comments

2 comments

2
குமரன்
பூமி எவ்வாறு சுழல்கிறது என்பதை காண்பதற்கு கீழுள்ள தொடர்பை அழுத்தவும்

https://youtu.be/qlVgEoZDjok
குமரன்
பொங்கல் திருவிழா புத்தாண்டு திருவிழா இரண்டும் வெவ்வேறானது தை முதல் நாள் தான் சூரியனின் வட செல்கை ஆரம்பம் ஆகிறது என்பது தவறான கருத்து தற்காலத்தில் இச்செயலானது மார்கழி 7 அல்லது 8 திகதிகளில் தான் நடைபெறுகிறது சூரியனின் வட செல்கை 1500 வருடங்களுக்கு முன் தை முதல் நாளில் நடந்திருக்க சந்தர்ப்பம் உண்டு ஆனால் பூமியின் அசின் சுழற்சியால் இச்செயல் காலத்துடன் மாறுபடும் எனவே கிட்டத்தட்ட 2000 (அச்சு சுழற்சி காலம் கிட்டத்தட்ட 26000÷12)வருடங்களுக்கு ஒரு முறை சூரியனின் வட செல்கை ஒரு மாதம் முன் நகர்கிறது எனவே இன்னும் 500 வருடங்களுக்குப் பின் அது மார்கழி முதலாம் நாள் தான் சூரியனின் வட செல்கை ஆரம்பிக்கும் ஆகவே அப்பொழுது மார்கழி பிறப்பை வருடப்பிறப்பாக கொண்டாட வேண்டி வரும் எனவே சித்திரை வருடப் பிறப்பாக கொண்டாடினால் தமிழரின் நாகரீக தொன்மையை தற்காலத்தில் இருந்து இன்னும் எண்ணாயிரம் வருடங்களுக்கு முன் நகர்த்திச் செல்லும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.