தொடர்புடைய படைப்புகள்

பொதுவாக உலக முஸ்லிம்களுக்கு அரபு நாடுகள் மீது ஒரு வகையான வெறுப்பும், கோபமும் உண்டு. அது, முஸ்லிம் நாடுகள் மீது மேற்கத்திய நாடுகள் நிகழ்த்தும் வன்முறையின் போதும், ஆக்கிர மிப்பு யுத்தங்களின் போதும் அமைதி காப்பது அல்லது தனக்குள் முணகிக் கொள்வதைப் போன்றபலவீனமான எதிர்ப்பைக் காட்டுவது. பாலஸ்தீன் பிரச்சினையாகட்டும், இராக், இரான், ஆப்கான் பிரச்சினைகளாகட்டும் - அரபு நாடுகளின் பங்களிப்பு என்னவோ சபையேறாத அளவிற்குத்தான் இருக்கும்.

இந்த நிலைபாட்டில் சற்றேமாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ என்கிற சந்தோஷக் கீற்றை வெளிப்படுத்துகிறது அண்மையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த, சிரிய அதிபர் பஷார் அல் அசாத், சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஆகியோரின் சந்திப்பு.

லெபனானில் ஷியா - சன்னி பிரிவு முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவி வருகிறது. இங்கு ஷியா பிரிவினர் பெரும்பான்மையாகவும், சன்னி பிரிவு முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் இருப்பதுதான். அவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் மோதலுக்கு அடித்தளமிடுகிறது.

சன்னி முஸ்லிம்கள் மீதான ஷியா பிரிவினரின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைமுடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்த சிரிய அதிபர் பஷர் அல் அசாத், முதன்முறையாக லெபனானுக்கு பயணித்துள்ளார்.

லெபனானில் இரு பிரிவு முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்டு வரும் முரண்பாடுகளைக் களைந்து அங்கு அமைதியை ஏற்படுத்த சவூதி அரேபிய அரசுடன் இணைந்து செயலாற்ற இருப்பதாக தெரிவித்துள்ள அசத், சவூதி மன்னர் அப்துல்லாஹ்வைச் சந்தித்து எதிர்வரும் காலங்களில் லெபனானுக்கு ஆதரவாக செயல்படப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு சவூதி மன்னரும் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைதியை நிலை நாட்டிட அசதுக்கு உரிமையும், பொறுப்பும் அதிகமாகவே உண்டு. ஏனெனில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற சன்னி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் போது, மற்றஅரபு நாட்டுத் தலைவர்களை விட அதிகமான கவலையை வெளியிட்டு ஷியா பிரிவின் போராளிக் குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஹசன் நசுருல்லாஹ்வுடன் அவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியவர்.

தாக்குதல்களினால் சன்னி முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறார் அசத். இதன் முதற்கட்ட முயற்சியாக லெபனான் சன்னி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விசார ணையை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்திற்கு இரு நாட்டுத் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மற்ற நாடுகளைப் போலவே, ஐ.நா. சபையிலும் பிரச்சினையைக் கொண்டு செல்லும் அளவிற்கு அரபு நாட்டுத் தலைவர்களுக்கு அக்கறைபிறந்திருப்பது வரவேற்கப் பட வேண்டியதே. ஆனால் இது போன்றநடவடிக்கைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்குள் மட்டும் மேற்கொள்ளாமல் உலகின் மற்றஇஸ்லாமிய நாடுகளின் பிரச்சினை களிலும் தலையிட்டு தீர்வு காண அரபு நாடுத் தலைவர்கள் முன் வர வேண்டும் என்பதே உலக முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு உலக ரவுடியான அமெரிக்கா மீது நடவடிக்கை எடு என ஐ.நா. மன்றங்களில் அரபு நாட்டுத் தலைவர்களின் குரல்கள் ஆவேசமாக ஒலிக்கும் வரை இருந்து கொண்டுதான் இருக்கும்.

- ஃபைஸ்

Comments

2 comments

2
காரிருள்
//ஷியா பிரிவின் போராளிக் குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஹசன் நசுருல்லாஹ்வுடன் அவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியவர்.//

அய்யா அது ஃகமாஃச் (Hamas) அல்ல கெஃச்புல்லா (hezbollah).. வெளிநாடுகளின் தகவல்களை வெளியிடும்போது தயவுசெய்து சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்..

நன்றி
zakir hussain
அஸ்ஸலாமு அலைக்கும், மரியாதைக்குரிய சமுதாய சிந்தனை படைத்தவர்களின் மேலான சமூகத்திற்கு, திருவள்ளூரை சேர்ந்த ஜாகிர் ஹுசைனின் அன்பான கோரிக்கை,....... இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் மற்றும் இன்ன பிற பின்தங்கிய மக்கள் மீடியாக்கள் மூலம் பாதிப்படைந்து வருவதை தங்களைப் போன்றவர்கள் நன்கறிவீர்கள், குறைந்த பட்சம் தமிழ் பத்திரிக்கைகளில் வரும் அபாண்டமான மற்றும் விஷமத்தனமான செய்திகளை தினம் தினம் ஆய்வு செய்து உடனுக்குடன் மறுப்புக்களை தெரிவித்திட, நான் தற்போது சிறு முயற்ச்சியில் இறங்கியுள்ளேன், அதாவது நமது தமிழ் தினசரிகளின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் முன்பு அன்றாடம் எடுத்து சொல்லும் அதே வேளை- சம்மந்தப்பட்ட அந்த நாளேட்டின் ஆசிரியர்களுக்கும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி அவர்கள் அது போன்ற தவறுகளை செய்யாமலிருக்க நான் சில domain registrations செய்து வைத்துக் கொண்டு (உ.ம். தினமலருக்கு.இன்.......... தினமணிக்கு.இன் ............... தினகரனுக்கு.இன் ............ தினத்தந்திக்கு.இன்) தற்போது வெப் designing & ஹோஸ்டிங் போன்ற வேளைகளில் ஈடுபட்டுள்ளேன் (இன்ஷா அல்லாஹ் இந்த வாரத்திற்குள் முறையாக இந்த இனைய தளங்களை துவக்கிட உத்தேசித்துள்ளேன்) ...... எனது நோக்கம் பூரண பலன் அடைவது என்பது தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்போடு தான் சாத்தியம் என்பதை நான் நன்கறிவேன், ...... ஆகவே தாங்கள் பழைய மற்றும் சமீபத்திய எந்த தவறான செய்திகளை வைத்திருந்தாலும் அதை எனக்கு ஸ்கேன் செய்து அதில் இருக்கும் விஷமத்தனத்தை விரிவாக எனக்கு அனுப்பி வைக்கவும், தவிர எந்த செய்திக்கும் தங்களுடைய எந்த மறுப்புக்கள் அல்லது குறைபாடுகள் எதுவானாலும் அனுப்பி வைக்கலாம் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் (அரசு ஊழியர்கள் அரசியல் வாதிகள் சமூக மற்றும் சமுதாய இயக்கங்களை சார்ந்தவர்கள்) அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்களின் நிலைப்பாடுகளையும் விளக்கங்களையும் எவ்வித கட்டணமுமின்றி எனது இணையத்திலே பதிவு செய்து வெளியிடப்படும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே எனேது நோக்கமாகும், ஆகவே எனது இந்த செயல்பாடுகளுக்கு தாங்கள் எல்லா வகையிலும் உதவி செய்வதோடு, எல்லா வகையிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (எனக்கு இதன் மூலம் தனிப்பட்ட எந்த பலனையும் நான் எதிர்ப்பார்க்கவில்லை, எதிர்காலத்திலும் அந்த எண்ணம் இருக்காது இன்ஷா அல்லாஹ்) தங்களின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன், நன்றி. வஸ்ஸலாம்
Zakir Hussain 9380945727

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.