10 ஆண்டுகாலமாக கோயிலில் ‘அர்ச்சகராக’ செயல்பட்டு வந்த தலித் அர்ச்சகர் இப்போது அதே கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று உள்ளூர் சாதி வெறியர்களால் தடை செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டி கிராமத்தில் இந்த சமூக அவலம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.

டி.கல்லுப்பட்டியிலுள்ள கைலாசநாதன் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அர்ச்சகராக இருந்து வருபவர் நல்லமுத்து. அவர் ஒரு தலித். நான்கு மாதங்களுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மே 5 ஆம் தேதி கோயில் நிர்வாகக் குழுவில் இருந்த தலித் அல்லாத சாதியினர், நாகமுத்துவை அழைத்து, இனி கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் பூஜைசெய்வதை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்றும் கூறினர். 10 ஆண்டுகாலத்துக்கும் மேலாக என்னை ஏற்றுக் கொண்டவர்கள், இப்போது எதிர்ப்பது ஏன் ஏன் நாகமுத்து கேட்டார். உடனே நாகமுத்துவை சாதிவெறியர்கள், அடித்து உதைத்துள்ளனர்.

இது பற்றி நாகமுத்து கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரச்சினை தொடங்கிவிட்டது. முக்கியமான பண்டிகை  மற்றும் “புனித” நாட்களில் என்னை பூசை சடங்குகள் நடத்த அனுமதிக்காமல், அன்று மட்டும் “பிராமண” (பார்ப்பன) அர்ச்சகர்களை அழைத்து வந்து அவர்களுக்கு, கூடுதலாக ஊதியம் தந்து பூசைகளை செய்ய ஏற்பாடு செய்தனர். இதைக்கூட நான் ஏற்றுக் கொண்டு, ஏனைய நாட்களில் நான் பூசைகளை செய்து வந்தேன். இப்போது நான் கோயிலுக்குள்ளேயே வரக்கூடாது; பக்தர்கள் பலர் நான் பூசை செய்வதை ஏற்கவில்லை என்று கூறினர். இதை நான் கேள்வி கேட்டபோது, இழிவாகப்பேசி, என்னைத் தாக்கினர்” என்று கூறினார்.

நாகமுத்து காவல்துறையை அணுகியபோது, காவல்துறை, தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் மனித உரிமையாளர்கள் ஆதரவோடு, உயர்நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தென்கரை காவல் நிலைய அதிகாரிகள் ‘எப்.அய்.ஆர்.’ மட்டும் ஆகஸ்டு 2 ஆம் தேதி பதிவுசெய்தனர். எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.

“இந்த வழக்கில் சாதிப் பிரச்சினை இருப்பதால் எங்களால் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோயில் நிர்வாகத்தினருக்கு அர்ச்சகரை பதவி நீக்கும் அதிகாரம்உண்டு. அதே நேரத்தில் நாகமுத்து தாக்கப்பட்டது உண்மை தானா என்று விசாரித்து வருகிறோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி கூறினார்.

“இந்தக் கோயில் பற்றி எவருமே கவலைப்படாத காலத்தில் நாகமுத்து என்ற தலித் எந்த எதிர்ப்பும் இன்றி அர்ச்சகராக இருந்தார். இப்போது சுற்றுப் பகுதியிலுள்ள செல்வாக்குள்ள பிரமுகர்கள் கோயிலைப் புதுப்பித்தப் பிறகு, கோயில் புதுப் பொலிவு பெற்றவுடன் இப்போது அவர்களுக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் தேவைப்படுகிறார். இது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது” என்று ‘எவிடென்ஸ்’ இயக்குனர் கதிர் கூறினார். அர்ச்சகர் தொழில் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த நாகமுத்து குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது - என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

5 comments

5
தேவன்
சட்டத்து மூலமாவே உரிமைகளை பெற்று விடலாமே? இருக்கிற சட்டத்தில் எல்லாம் ஒரு வழக்குப் போட்டுவிட வேண்டியதுதானே? இருக்கவே இருக்கு வன்கொடுமைச் சட்டம் அந்த ஊர்மேலேயே போட்டுற வேண்டியதுதான்.
Sakya Mohan
சூத்திரர்களின் (அ ) தமிழர்களின் ஜாதிவெறியாட்டம் எனத் தலைப்பிடாமல் "பார்ப்பனருக்காக விரட்டப்பட்ட "தலித்" அர்ச்சகர்" என தலைப்பிடும் கோழைத்தனத்தை என்னவென்று அழைப்பது? விடுதலை ராஜேந்திரன் இத்தனை ஜாதிய வன்கொடுமைகளுக்கு உதவும் தமிழ்-திராவிடம்-ஸைவம் உள்ளிட்ட கருத்தியல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், மீண்டும் சூத்திரராகிய தமிழ் ஜாதிகள் திணிக்கும் தலித் குடிகளின் மீதான தீண்டாமை உளவியலை நேரடியாக தாக்க தடுமாறும் அறிவுஜீவிகள், பார்ப்பனர் அர்ச்சகர் வேண்டி தலித் அர்ச்சகரை வெளி விரட்டும் சூத்திர (தமிழ்) ஜாதிகளை கண்டிக்க வக்கற்றுப் போகிறார்கள்! சூத்திரத்வத்தின் இன்னொரு பிரதியான தமிழியத்தின் அருவருப்பான முகத்தைப் பாருங்கள்!
மகேந்திரன்
பெற வேண்டிய உரிமைகள் எல்லாம் அரசியல் ஆக்கப்பட்டால் இம்மாதிரியான அபத்தங்கள் நடக்கதான் செய்யும் .சாதியை உருவாக்கியவன் எவன் என்றாலும். அதை அதிகப்படியாக நடைமுறைபடுத்துவர்கள் நம்மவர்கள்தான் . வந்தேரிகள் வாழ நமக்குள் சாதி தீமூட்டினார்கள். ஆனால் அம்பெட்கர் பிறந்த மண்ணில் இம்மாதிரியான வன்கொடுமைகள் நடப்பதும் அவர் ஊட்டிய சமூக விழிப்புண்ர்வுகள் ஏற்க்கப்படாததும் இந்த நாட்டை பிந்தங்க செய்யும் அழிக்க முடியாத சக்தியாகும் .இதை உணரும் வரை ? தான்.
Guest
"சுதந்திரம் எனும் பொய்வழக்கால் மூடப்பட்ட ஒரு முட்டால்தேசம்தான் நமது இந்தியா".

எத்தனை முறை தலைவர்கள் பிறந்து நீதிகளுக்காகவும் நியாயங்களுக்காகவும் அநீதியை எதிர்த்து போரிட்டாலும் சுற்றி சுற்றி ஒரே குட்டையில் ஊறிய மட்டையாய் கிடக்கிறது இந்தியா.

இதில் சாதியம் தழைத்திருப்பதை நாம் தடுக்கவா முடியும். வேரோடு வெட்டி எறிந்தால் மட்டுமே சாத்தியம்.
imayavaramban
OK.The Dalit Archagar was driven out by caste Hindus according to some comments.But,who has benefitted out of it?Only the Brahmin who institutionalised the superstitious beliefs in the caste Hindus stating that only Brahmin priests are sacred enough to do the job of priests.Only Gods in TN temples need the priest to sport tuft and Panchakatcham.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.