குமரி மாவட்ட மீட்புப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு

கன்னியாகுமரி தமிழகத்தோடுதான் இணைக்கப் பட வேண்டும் என்று தளபதி நேசமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாரின் பங்கு இருட்டடிக்கப்படுகிறது. பெரியார் மீது அவதூறுகளை வீசவும் ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

குமரி மாவட்ட மீட்புப் போராட்டத் தளபதி நேசமணி பற்றி - ‘நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்’ என்ற நூலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் எழுதியுள்ளார். அந்நூலுக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.சுவாமிதாஸ் எழுதிய அணிந்துரையை இங்கு வெளியிடுகிறோம். அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சி, ம.பொ.சி., அரசுக்கு பயந்து சொற்பொழிவு ஆற்றாமலே ஓட்டம் பிடித்தார் என்ற உண்மையையும், பெரியார் மலையாளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசியதையும் இந்த அணிந்துரையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.சாமிதாஸ் பதிவு செய்துள்ளார். அவர் எழுதிய அணிந்துரை:

“‘பெரியவர்’ என்றும், ‘வக்கீல்’ என்றும், ‘மார்ஷல்’ என்றும் ‘குமரித் தந்தை’ என்றும் அழைக்கப் பெறும் சிறப்புக்கு உரியவர் திரு.ஏ. நேசமணி. அவர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கிப் போராடும்போது நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் செயற்குழு உறுப்பினராகவும் பிரச்சாரக் குழு உறுப்பினராகவும் இருந்தேன்.

கண்ணில் கண்டவர்களை, ‘கண்டால் அறியாம் பள்ளி’ என்று கூறிக் கைது செய்தனர். நான் போலீசுக்குப் பிடி கொடுக்காமல் வாழ்ந்தேன். திருவிதாங்கூரில் நடந்த தமிழகப் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறிச் செயல்பட்டது. பலரைத் துப்பாக்கிக்கு இரையாக்கியும் பலரைச் சித்திரவதை செய்தும் பலரைத் துன்புறுத்தியும் கைது செய்தனர். தமிழ்க் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்ற வந்த ம.பொ.சி. சொற்பொழிவு ஆற்றாமலேயே அரசுக்குப் பயந்து திரும்பிச் சென்றார்.

ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. மட்டும் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் நிலைமையை மார்ஷல் நேசமணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதன் பின்னணியாகச் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு கூட்டத்தைப் போட்டு, “திருவிதாங்கூரில் போலீஸ் அடக்கு முறையை உடனடியாக நிறுத்தா விட்டால், தமிழகத்தில் வாழும் மலையாளிகளை நாங்கள் இங்கிருந்து அடித்துத் துரத்துவோம்” என்று பொதுக் கூட்டத்தில் அறிக்கை விட்டார். மலையாள அரசு தமிழனைத் துன்புறுத்தியதை நிறுத்தியது.

மார்ஷல் நேசமணி தன் கையால் மாலை அணி வித்த ஒரே தலைவர் பெரியார் தான். பெரியாரும் மார்ஷல் நேசமணி மீது மிக்க மதிப்பு வைத்திருந்தார். திருவிதாங்கூர் தமிழர் போராட்டத்தில் மார்ஷல் நேசமணிக்குப் பொருளுதவி செய்தவர் பயோனியர் குமாரசுவாமி. டாக்டர் மத்தியாஸ், கட்டுக்கடை தேவசகாயம் ஆசான் ஆகியோர் மருத்துவ உதவி செய்தனர்.

திரு. கோலப்பா பிள்ளை நாஞ்சில் நாடு வங்கி நிறுவனர். இவருடைய நெருங்கிய நண்பர். குமரித் தந்தை வழி நாம் போராடி தமிழ் நாட்டுடன் இணைந்தோம். அந்தப் போராட்டத்தைப் பற்றி அவருடன் இணைந்து போராடிய ஜனாப் அப்துல் ரசாக் முன்னாள் எம்.பி. எழுதிய ‘நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்’ என்ற நூல் வெளி வருவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதனைப் பல்வகை சிரமத்தின் மத்தியில் பதிப்பித்து வெளியிடும் பேராசிரியர் டாக்டர் மு. ஆல்பென்ஸ் நதானியேல் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். இந்நூல் நறுமணம் மிக்கதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக.

- ஏ. சுவாமிதாஸ், பி.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., நுள்ளிவிளை, 15.08.1998.

1998 நவம்பர் மாதம் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரி பேராசிரியர் முனைவர் மு.ஆல்பென்ஸ் நதானியேல், தமது ‘தமிழ்க்குடில்’ பதிப்பகத்தின் சார்பில் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

Comments

12 comments

12
prasanna
தமிழனை தினம் அண்டி பிழைக்கும் மலையாள ***** எப்படி இவ்வளவு திமிர். தமிழனின் லட்சணம் அப்படி. தமிழன் அனைத்திலுமே கேவலப்பட்டு போயுள்ளான். ஓட்டு போட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் இருந்து, அனைத்திலுமே தமிழன் ஒரு சாக்கடை. இதை படித்தாவது தமிழனுக்கு ரோஷம் வரட்டும். தமிழகத்திற்குள் இருக்கும் தமிழ் விரோத சக்திகளை அடித்து நொறுக்கட்டும். கேரளா செல்லும் லாரிகளையும், ரயில்களையும் தடுக்கட்டும். உண்மையான தமிழர்களுக்கு ஓட்டு போடட்டும். இங்கிருக்கும் மலையாள கடைகளையும், பொருளாதார மையங்களையும் புறக்கணிக்கட்டும். தமிழன் இதேபோன்று ரோஷமும், இனவுணர்வும் இன்றி கிடந்தால், இன்னும் 75 வருடங்களுக்குள் தமிழ்நாட்டு தமிழினம் முற்றிலும் அழிந்து போகும். தமிழன் செத்து ஒழிந்து விடுவான்.
Muruganantham
Dont give buldup to Ramasamy Naicker by hear say things what is corroboration. Is there any authuntication for the same Is there any recorded proof Is there are any news records either in viduthalai or in any periodical It is very clear that Ramasamy Naicker abandoned Thiruttani and Thiruppathi and Madars with Rajaji and after that Ramasamy Naicker was keep quit. If he is a real hero what thing prevented him agitate at Kumari District Why he flied Chennai.O dradidian Dont creat false history in your regular way
vanaggaman
தமிழகத்தில் வாழும் மலையாளிகளை நாங்கள் இங்கிருந்து அடித்துத் துரத்துவோம்” நமது அரசு வெலைவாஐபை, நமது தொழீல்கலை பரீக்கும், நமது உரிமைகலை பறீக்கும் மலையாளிகளை அடித்துத் துரத்துவோம்.
jeevanantham
காதுல நல்ல பூ தமிழன் ஏமாறும் வரை எத வேணாலும் எழுதுஙக நல்ல ப்குத்தறிவு நல்ல சுயமரியாதை போங்க
Manisekaran
காவல்துரை அடக்குமுறைக்குதான் எதிர்ப்பு தெரிவித்திருக்கார் ஈவேரா. ஆந்திரத்துக்கு
போன வடவேங்கடம்,கருநாடகத்திற்கு போன தலைக்காவிரி,தங்கவயல்,பெங்களூர் பகுதிகள்,கேரளம்
போன பீர்மேடு,தேவிகுளம் இன்னப் பிற பகுதிகள் தமிழத்துக்கு கிடைக்க ஈவேரா இன்னும் அண்ணாதுரை குழுக்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?ஓட்டம் பிடித்ததாக கூறப்படும் மா.பொ.சி. அவரால் சென்னை,திருத்தனி போன்ற பகுதிகள் தமிழத்துக்கு கிடைத்தது.திராவிடம் பேசிய இவர்களால் தமிழ் ஆட்சிமொழி, பயிற்றுமொழி தகுதியற்றும்,காவிரி,முல்லை
பெரியாறு,பாலாறு சிக்கல்கள் இதனாலும் திராவிடம் பேசி
தமிழர்களுக்கும்,தமிழத்துக்கும் இரண்டகம் செய்தது இவர்கள்தானே?ஹ்
பாலன்
நடந்ததெல்லாம் போகட்டும். இனிமேலாவது தமிழர் நலனுக்கு எதிரானவர்களை மன்னிக்காதீர்கள்.
saravanan
ம.பொ.சி., யை கேவலபடுதாதே
S.Subramaniam
Do not create false history to glorify Periyar. Periyar was also a leader with all positives and negatives.
vanaggaman
நடந்ததெல்லாம் போகட்டும். இனிமேலாவது தமிழர் நலனுக்கு எதிரானவர்களை மன்னிக்காதீர்கள். தமிழகத்தில் வாழும் மலையாளிகளை நாங்கள் இங்கிருந்து அடித்துத் துரத்துவோம்”
தி. பரமேசுவரி
‎//அச்சமயம் தற்செயலாக அங்கு வந்திருந்த ம.பொ.சி.யிடம் கொதித்திருக்கும் தமிழர்களிடம் ஆறுதலாக உரையாற்றும்படி நேசமணி கேட்டுக்கொண்டபோது, ‘எப்படியாவது திருநெல்வேலி தாண்டி என்னை விட்டுவிடுங்கள் இப்போது சூழல் சரியில்லை’ என்று சொல்லி ஓடிவந்தவர்தான் தமிழ்த் தேசியப்போராளி ம.பொ.சி. // அரைகுறையாக வரலாற்றைப் படித்து விட்டுப் வாய்வந்தபடி பேசுவது உங்களுக்கு நன்மை தராது மீனா. இதோ நீங்கள் சொல்லும் அந்தச் சம்பவத்தைப் பற்றி ம.பொ.சி 'எனது போராட்டத்தில் தரும் குறிப்பு. எடுத்துப் படியுங்கள். // தென் திருவிதாங்கூர் நிலைமையை ஆகஸ்டு 12 ஆம் தேதி காலையில் செய்தித்தாள்களில் படித்துப் பதறிப் போனேன். வருவது வரட்டும் எனத் துணிந்து அன்றிரவே திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நாகர்கோயிலுக்குப் புறப்படுவதெனத் தீர்மானித்தேன். தெற்கு எல்லையிலுள்ள தமிழரசுக் கழகத் தலைவர்களிடமிருந்தும் 'உடனே புறப்பட்டுவர வேண்டும்' என்று தந்தி கிடைத்தது. ஆகஸ்டு 13 ஆம் நாள் நாகர்கோவில் சென்றேன். //
யுவபாரதி
சென்னை மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர்.பி.யோகீசுவரன் எழுதிய "திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு" (முதற்பதிப்பு 2011) (நீலா பதிப்பகம், சென்னை - 90) பக்.235௨36 // ...ம.பொ.சி. 13.8.54 அன்று நாகர்கோவில் வந்து சேர்ந்தார். அன்று நகரசபைத் திடலில் பி.எஸ்.மணி தலைமையில் ம.பொ.சி. பேசும்பொழுது, போலீசின் அடக்குமுறையைக் கண்டித்ததுடன் தமிழரின் உயர்ந்த கொடி தாழாது என்று கூறினார். ...கூட்டம் நடைபெற்ற பின் ம.பொ.சி., பி.எஸ்.மணி, காந்திராமன் ஆகியோருடன் நேசமணியின் இல்லம் சென்று சந்தித்தார்...(இவ்விரண்டு செய்திகளையும் 14.8.54 தினமலரும் கூறுகிறது.) ஆனால் திரு.ரசாக், தலைவர் நேசமணி வேண்டியும் ம.பொ.சி. பொதுக் கூட்டத்தில் பேச மறுத்துவிட்டார் என்றும், நேசமணி வீட்டிற்குத் தன்னை வந்து பார்த்து துணைக்கு அழைத்துச் சென்றார் என்றும் தன் நூலில் எழுதியிருப்பது (நேசமணி: ஒரு சரித்திரத் திருப்பம் - பக்.247௨48) வரலாற்று வாய்மை ஆகாது. 13.8.54 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் ம.பொ.சி.யின் பேச்சினை நேரடியாகக் கேட்டவர்களில் நூலாசிரியரான நானும் ஒருவன் என்பது இங்கு சொல்ல வேண்டிய செய்தி.// - முனைவர்.பி.யோகீசுவரன்
Pachchai Naathigan
http://www.youtube.com/watch?v=_0DbFCMSTZ0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.