அமெரிக்காவில் ஒருவர் இறந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டால் அவரது படைப்புகள் எவ்வகை அறிவிப்பும் இன்றி தானாகவே நாட்டுடைமை ஆகிவிடும். 

தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது காந்தியடிகள் எழுதிய இரண்டு நூல்கள் அங்கே நாட்டுடைமை ஆக்கப்பட உள்ளன. 

ரஷ்யாவில் தனது ஆட்சிகாலத்திலேயே தோழர் லெனின் தனது எழுத்துக்களோடு காரல்மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் எழுத்துக்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த அனுமதி பெற வேண்டியதில்லை என அறிவித்தார். 

இன்றைக்கும் செக் குடியரசில் எழுதப்படும் நூல்கள் அனைத்துக்குமான உரிமை அரசிடம் உள்ளது. 

நோபால் பரிசு பெறும் ஒரு படைப்பாளியின் படைப்புகளை சர்வதேச அளவில் 26 மொழிகளில் எடுத்துச் செல்கிறரர்கள். அவற்றில் ஏழு மொழிகளில் (பிரெஞ்சு, அராபிக், ஸ்பானிஷ் உட்பட) அந்த நூல்களின் உரிமையை அந்தப் படைப்பாளி கோரமுடியாது. அந்த உரிமை நோபல் குழுவிற்கானது. 

அறிவியல் கண்டுபிடிப்புகள் கட்டுரைகளாக வெளியாகும் போது, அந்த கண்டுபிடிப்புகளின் உரிமத்தோடு எழுத்தின் உரிமமும் சேர்த்தே பதிவாகி பேணப்படுகிறது. 

தனது நூல்களை விட தன்னைப் பற்றியும் தனது படைப்புகளைப் பற்றியும் பிறர் எழுதிய நூல்களால் அதிக உரிமத்தை உயிர் வாழ்ந்த நாட்களிலேயே பெற்றவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். 

அயோத்தி தாச பண்டிதரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டாலும் அவரது வாரிசுதாரர்களை அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Pin It