ஏறத்தாழ 25,000 பேரை பலிகொண்ட போபால் நச்சுவளிப் பேரழிவின் 30ஆம் ஆண்டு நினைவு நாளை போபால் மக்களும் இந்தியா முழுவதிலுமிருந்து போபாலில் திரண்ட சூழலியல் ஆர்வலர்களும் கடந்த 03.12.2014 அன்று கடை பிடித்தனர். யூனியன் கார்பைட் நிறுவன உரிமையாளர் - அண்மையில் காலமான- ஆண்டர்சனின் உருவ பொம்மையை கொளுத்தி கண்டனத்தைத் தெரிவித்தனர்.
போபால் யூனியன் கார்பைட் ஆலையில் நச்சுவளி வெளியேறி அதில் சிக்கி பலியான குடும்பத்தின ரும், அடுத்தடுத்த தலைமுறையாகப் பாதிப்புகளை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மக்களும் உரிய துயர் நீக்க நிதி ஏதும் கிடைக்காமல் 30 ஆண்டுகள் கடந்து இப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போபால் பேரழிவு இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டி யதன் தேவையை உணர்த்தியது. இப்பேரழிவால் விழிப் படைந்த பல தரப்பினரும் வெளியிலும் நீதிமன்றத் திலும் நெடிய போராட்டங்களை நடத்தினர். இவற் றின் பயனாக பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஏற்கெனவே இருந்த சட்டங்களில் திருத்தங்கள் பல செய்யப்பட்டன.
ஆயினும் இச்சட்டங்கள் ஓட்டைகள் மிகுந்ததாகவும், இச்சட்டங்களைச் செயல் படுத்த வேண்டிய அதிகாரப் பொறியமைவு கள் வலுவற்றவையாகவும், சூழல் பாதுகாப்பில் அக்கறையற்றவையாகவும் விளங்கி வருகின்றன.
சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், இச்சட்டச் செயலாக்க நிறுவனங்களில் சூழலியல் குறித்து கல்வி கற்றவர் களும், சூழலியல் மீது அக்கறை யுள்ளவர்களும் அமர்த்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் இருக்கிற இந்த அரைகுறை சட்டங்களையும் நீக்கிவிட வேண்டும் என்று பன்னாட்டு, இந்தியப் பெருமுத லாளிகள் தரப்பிலிருந்து அழுத்தங் கள் தரப்படுகின்றன. குறிப்பாக 1990 களுக்கு மேல் தாரா ளமயப் பொரு ளியல் கோலோச்சத் தொடங் கிய பிறகு இந்த அழுத்தம் அதிக மானது. அதே நேரம் மக்களி டையே சூழலியல் குறித்த விழிப் புணர்வு ஏற் பட்டுப் பல தளங்களில் போராட்டங்கள் அதிகரித்தன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சட்டங்களும் அவற்றை செயல்படுத்து வதற்கான பொறியமைவுகளும் வலுவற்று இருப்பதை பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும் சுட்டிக் காட்டின.
ஆயினும் கடந்த மன்மோகன் சிங் ஆட்சி பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இச்சட்டங்களில் திருத் தங்கள் செய்யத் தொடங் கியது. இப் போது நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்திய அரசு இச் சட்டங்களை ஒட்டு மொத்த மாக மாற்றியமைக்க தீவிரமாக செயலில் இறங்கியது, இயற்கை யையும் அது சார்ந்த மக்களையும் சூறையாடுவ தற்குப் பெருமுதலாளி களுக்கு ஆதரவான சட்டமாக மாற்றியமைப்பதே மோடி அரசின் நோக்கம்.
நரேந்திர மோடி அரசு 2014 மே மாதத்தில் ஆட்சிக்கு வந்த உட னேயே சுற்றுச் சூழல் பாது காப்புக் கானப் போராட்டங்களை வளர்ச் சிக்கு எதிரான வெளிநாட்டு சதி என்று குற்றம் சாட்டியது. மோடி அரசின் உள்துறை அமைச்சகத் திற்கு உளவுத்துறை அளித்த உள்ளக அறிக்கையில் பாஸ்கோ, வேதாந்தா சுரங்கங்களுக்கு எதிராக பழங்குடி மக்கள் மாதக்கணக்கில் போராடியதையும், வன உரிமைச் சட்டத்தின் விதிகளைப் பயன் படுத்திப் பழங்குடி மக்களின் கிராம சபைகள் வேதாந்தா இரும்பு சுரங்கம் தோண்டப்படுவதைத் தடுத்து நிறுத்தியதையும், அணு உலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்தையும், மரபீனி மாற்ற விதைகளுக்கு எதிரான வழக்குக ளையும் சுட்டிக்காட்டி இவை அனைத்தும் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடு வதாக கண்டித்தது.
ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலாளிகளின் கூட்டத்தில் அடுத் தடுத்துப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி “சட்டங்கள் குறைந்த நாடாக இந்தியாவை மாற்றுவேன், இந்தியாவில் குறை கூலிக்குத் திறன் மிகுந்த தொழிலா ளர்கள் கிடைப்பார்கள். இந்தியா வில் வந்து தொழில் தொடங்குங் கள்” என்று அழைப்பு விடுத்தார்.
இந்தப் பின்னணியில்தான் இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனது துறை சார்ந்த அனைத்து சட்டங்களையும் ஆய்வு செய்து சட்டங்களைக் குறைப்பதற்கான ஆய்வுக்குழு ஒன்றை 2014 ஆகத்தில் அமைத்தது. முன்னாள் அமைச் சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த உயர் மட்டக் குழு 1986 சூழலியல் பாதுகாப்புச் சட்டம், 1980 காடுகள் பாதுகாப்புச் சட்டம், 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1974 தண்ணீர் மாசுபாட்டுத் தடுப்புச் சட்டம், 1981 காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்து கடந்த 18.11.2014 அன்று அரசுக்கு அறிக்கை அளித்தது.
பழங்குடியினர் நலத்துறை சார்ந்ததாக வன உரிமைச் சட்டம் 2006 இருந்ததால் அது குறித்து இக்குழு நேரடியாக ஆய்வு செய்ய வில்லை என்ற போதிலும், மேற் சொன்ன சட்டங்களின் வழியாக வன உரிமைச் சட்டத்திற்குள்ளும் மூக்கை நுழைத்தது.
இந்த உயர்மட்டக் குழுவில் சட்டத்துறை சார்ந்த இருவரும் அதிகாரிகள் இருவரும் உறுப்பினர் களாக இருந்தனர். அவர்களுள் ஒருவரான விசுவநாதன் ஆனந்த் கோகோகோலா நிறுவனத்தின் ஆலோசகர் ஆவார். இன்னொரு அதிகாரியான ஹர்தீஷ் ஷா குசராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலை வராக இருந்த பொழுது கண்ணை மூடிக் கொண்டு இராக்கெட் வேகத் தில் சூழல் கேடு செய்யும் நிறுவனங் களுக்கு மறுப்பின்மை சான்றிதழ் வழங்கியவர் என நீதிமன்றத்தா லேயே கண்டிக்கப்பட்டவர்.
இந்த உயர்மட்டக் குழுவுக்கு அளிக்கப்பட்ட ஆய்வு வரன் முறையே ஒரு தலைச்சார்பானது; பெருமுதலாளி நிறுவனங்களுக்கு ஆதரவாக சுற்றுச் சூழல் சட்டங்களை மாற்றி அமைக் கும் நோக்கம் கொண்டது.
“நமது நோக்கங்களுக்கும் இச் சட்டங்களின் அமலாக்கத்துக்கும் இடையில் உள்ள நிலைமையை ஆய்வு செய்வது”, “தற்போதைய தேவைகளையும் நோக்கங்களையும் நிறைவு செய்யும் வகையில் இச் சட்டங்களை ஒத்திசைவானதாக மாற்றுவதற்கு தேவையான திருத் தங்களைப் பரிந்துரைப்பது” ஆகியவை உயர்மட்டக் குழுவின் விசாரணை வரம்பாகக் குறிக்கப் பட்டுள்ளது.
“தற்போதைய தேவை”, “நோக்கங் கள்” ஆகிய தொடர்களுக்கு விளக் கம் சொல்லப்பட வேயில்லை. யார் எப்படி வேண்டுமானாலும் எடுத் துக் கொள்ளலாம் என்பது போல தெளிவற்ற முறையில் விசாரணை வரம்பு குறிக்கப்படுகிறது.
ஆயினும் உண்மையான நோக் கம் என்ன என்பதை உயர்மட்டக் குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியத்தின் பேச்சிலிருந்து அறிய முடிகிறது.
பெங்களூரில் நடந்த மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் சூழலி யலாளர்கள் இதுபற்றி விளக்கம் கேட்டபொழுது. விளக்கம் கூற மறுத்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அக்கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளிநடப்புச் செய்தார். அவரைத் தொடர்ந்து அக்குழுவினரும் வெளி யேறினர். அதற்குப் பிறகு நடை பெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங் கள் காவல்துறை கெடுபிடிகள், உளவுத்துறையின் விசாரணைகள் ஆகியவற்றிற்குப் பிறகு தங்களுக்கு இசைவானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு நடத்திய நாட கங்களாகவே அமைந்தன.
சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் இதுபற்றி மக்க ளிடமிருந்து கருத்துக் கேட்கப் படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அவை ஆங்கிலத்தில் மட்டும் இருக்க வேண்டும், அதுவும் 1000 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.அந்த இணையத்திற்கு அனுப்பப்பட்ட கருத்துகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா என்ற மறு மொழி கூட அனுப்பியவர் களுக்கு இல்லை.
இவ்வாறு கருத்துக் கேட்பு என்ற சடங்கு கூட சர்வாதிகார மான முறையில் நாடகமாக அரங் கேற்றப்பட்டது.
இறுதியில் இந்த உயர் மட்டக் குழு அளித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆயினும் வேண்டுமென்றே அமைச்சகத்தின் சந்து பொந்துகள் வழியாக கசிய விடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட அறிக்கைக் குறித்து இக்குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணி யன் ஊடகங்களுக்கு அளித்துள்ள நேர்காணல் வழியாகவும் இது பற்றி அறிய முடிகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என் பது முற்றிலும் மாற்றியமைக்கப் பட்டு சுற்றுச்சூழல் மேலாண்மை என்பதாக மாற்றப்படுகிறது. எல்லா சட்டங்களையும் உள்ளடக்கிய “சுற்றுச்சூழல்விதிகள் (மேலாண்மை) சட்டம்” (Environment Laws (Management) Act) - ELMA என்ற சட்டத்தை உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்காக அனைத்திந்திய அளவில் “தேசிய சுற்றுச்சூழல் மேலாண்மை ஆணையம் (National Environment Management Authority - NEMA)” என்றும், இந்த ஆணையத் துக்கு கட்டுப்பட்டதாக மாநில அளவில் “மாநில சுற்றுச்சூழல் மேலாண்மை ஆணையம் (State Environment Management Authority - SEMA)” என்றும் நிறுவப்பட வேண் டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள் ளது.
இதன்மூலம் அனைத்திந்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை கலைக்கப்படு கின்றன. வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளார்கள்.
தண்ணீர் மாசுபாட்டுத் தடுப் புச் சட்டம், காற்று மாசுப்பாட்டுத் தடுப்புச் சட்டம் ஆகியவை நீக்கப் பட்டு அவற்றின் சில கூறுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத் தின் பிரிவுகளாக்கப் படுகின்றன.
அதாவது தண்ணீர், காற்று இவற்றின் தூய்மையைப் பாதுகாப் பதற்கான தனித்த ஆய்வுகளும் அவற்றை செய்யும் நிறுவனங்களும் இல்லாது ஒழிக்கப்பட்டு பொத்தாம் பொதுவில் மொத்தமாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பதாக மாற் றப்படுகின்றது.
ஏற்கெனவே உள்ள சூழலியல் சட்டங்கள் சரிவர செயலாவ தில்லை. சூழலியலுக்கு எதிரான தொழில் நிறுவனங்கள், திட்டங்கள் ஆகியவற்றை சுற்றுச் சூழல் துறை தடுத்து நிறுத்துவதேயில்லை. சுற்றுச் சூழல் அமைச்சகம் தன்னி டம் நிறுவனங்கள் அளித்த மனுக்களில் 99 விழுக்காடு மனுக் களை ஏற்றுக் கொண்டு அந்நிறுவ னங்களுக்குச் இசைவு அளித்துள் ளது என்பதே இதற்குச் சான்று. சுற்றுச் சூழல் சட்டங்கள் வெறும் ஏட்டள விலேயே நிற்கின்றன, சரிவர செயலாவதில்லை என்ப தையே இது காட்டுகிறது.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு சூழலியல் சட்டங்களை யும் அவற்றைச் செயலாக்கும் நிறுவனங்களையும் வலுப்படுத்து வதற்கு மாறாக “99 விழுக்காடு மனுக்கள் ஏற்று அனுமதிக்கப் பட்டுள்ளன என்பதிலிருந்தே இச் சட்டங்கள் தேவையற்றவை எனப் புரிகிறது” என்று உயர்மட்டக்குழு முடிவு செய்கிறது. அதாவது சட்டம் செயலாகவில்லை எனவே அச் சட்டமே தேவையில்லை என்ற தலைகீழான முடிவுக்கு உயர் மட்டக்குழு வருகிறது.
நெடுஞ்சாலைகள், மின் வழங் கல் திட்டங்கள், குழாய் அமைத்தல் போன்றவற்றிற்கும், தேசிய முக்கியத் துவம் வாயந்தவை அல்லது தேசப் பாதுகாப்புக்கு தேவையானவை என இந்திய அமைச்சரவை முடிவு செய்யும் திட்டங்களுக்கும் வன உரிமைச் சட்டத்தின்படி இனி கிராம சபைகளின் அனுமதி தேவை யில்லை என்று உயர்மட்டக் குழு வின் பரிந்துரை கூறுகிறது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பழங்குடியின மக்களும் வனங்களில் வாழும் பிற மக்களும் பெற்ற உயிரான உரிமை இதன் மூலம் பறிக்கப்படுகிறது. இனி எந்தத் தங்குதடையுமின்றி பன்னாட்டு, இந்திய பெரு நிறுவனங்கள் காடு களையும் மலைகளையும் தங்கள் இலாப வேட்டைக்காக விழுங்கி விடலாம்.
இனி நடக்கும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள், திட்டங்களை செயல் படுத்தலாமா கூடாதா என்பது பற்றியதாக இருக்கக் கூடாது. மாறாக இத்திட்டங்கள் செயல் படுத்துவதால் தங்கள் வாழ்விடங் களை இழந்து பாதிக்கப்படும் மக்களுக்கான மறுவாழ்வு, மறுக்கு டியமர்த்தம் பற்றியதாக மட்டுமே இருக்கலாம். அதிலும் உண்மை யான உள்ளூர் வாசிகள் மட்டுமே பங்குபெறலாம் என்று பரிந்துரை கூறுகிறது.
ஒரே அடியில் கேள்விமுறை யற்ற தாயகப் பறிப்புக்கு இது வழி வகுக்கிறது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய உயர்மட்டக் குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர். சுப்பிரம ணியன், “மிகப்பெரிய வளர்ச்சித் திட்டத்தை சாதாரண பழங்குடி கிராமம் ஒன்று தடுத்து நிறுத்து வதை இனியும் அனுமதிக்க முடி யாது. இதுபற்றி முடிவு செய்ய அமைச்சரவைக்கு மட்டுமே தகுதி உண்டு” என்று ஈவிரக்கமின்றி கூறினார்.
அதுமட்டுமின்றி நர்மதை அணைக்கு எதிராக மேதா பட்கர் தலைமையில் பழங்குடி மக்கள் நடத்திவரும் போராட்டத்தை மறைமுகமாகக் குறிப்பிட்ட டி.எஸ். ஆர். சுப்பிரமணியன் “இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அணையின் உயரத்தை அதிகரிக் காமல் விட்டிருந்தால் குசராத்தி லும் மகாராட்டிரத்திலும் பல பகுதிகள் தண்ணீர் வசதி பெற்றிருக் குமா? சில பேர் பாதிக்கப் படுகி றார்கள் என்பதற்காக ஒட்டு மொத்த வளர்ச்சியை நிறுத்திவிடக் கூடாது” என்றார்.
சுற்றுச்சூழல் தொடர்பான எல்லாச் சட்டங்களையும் பலவீனப் படுத்தி ஒன்றாக்குவதற்கு இந்த உயர்மட்டக் குழு கூறும் காரணம் பொய்யானது. தொழில் நிறுவனங் கள் சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு மனு கொடுத்துவிட்டு ஆண்டுக் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டி யிருக்கிறது எனக்கூறும் காரணம் உண்மையன்று. ஏனெனில் ஒவ் வொரு தொழில் திட்டம் தொடர் பாகவும் அமைச்சகம் அளிக்கும் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assement - EIA) அறிவிக்கையிலும் அதற்கான கால வரம்பு அறிவிக்கப்படுகிறது. அக் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை வரவில்லை என்றால் அத்திட்டத் திற்குத் தாமாகவே இசைவு அளிக் கப்பட்டதாக பொருள் என்று அவ்வறிவிக்கையே கூறுகிறது.
ஒவ்வொரு சட்டத்தின் கீழும் தனித்தனியே அனுமதி வாங்குவது குறித்து உயர்மட்டக் குழு மிகவும் அலுத்துக் கொள்கிறது. காட்டு வளப் பாதுகாப்புச் சட்டம், வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம், காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம், தண்ணீர் மாசுபாடுத் தடுப்புச் சட்டம் ஆகிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சிக்கல் தொடர்பா னவை. அவை குறித்த ஆய்வுகளும் முற்றிலும் வெவ்வேறு தன்மையுடை யவை. உண்மை நிலை இவ்வாறி ருக்க, ஒவ்வொரு சட்டத்தின் கீழும் தனித்தனி இசைவு தேவையில்லை என்று டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு கருதுவது முழுக்க முழுக்க இலாப வெறி கொண்ட தொழில் முதலாளிகளின் பார்வையே அன்றி மக்கள் சார்ந்த சூழலியல் பார்வை அல்ல.
ஏற்கெனவே உள்ள சட்டங் களின்படி நிறுவப்பட்டுள்ள சூழலி யல் கண்காணிப்பு அமைப்புகளில் சூழலியல் தொடர்பான வல்லு நர்கள் இடம்பெறாமல் வெவ்வேறு துறை அதிகாரிகளே அமர்த்தப் படுகிறார்கள் என்ற அடிப்படைக் குறைபாடு நிலவுகிறது.
இதனைச் சரி செய்வதற்கு மாறாக உயர்மட்டக் குழு “இந்நிறு வனங்களில் சூழலியல் வல்லுநர்கள் இல்லை. எனவே இந்நிறுவனங் களே தேவையில்லை” என்ற முடி வுக்கு வருகிறது. நோயைக் காரணம் காட்டி நோயாளியைக் கொல்லும் மனிதப் பகைப் பார்வை இது.
இந்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டு செயலுக்கு வருமானால் பழங்குடி மக்களும், உழவர்களும் தங்கள் வாழ்வாதா ரத்தையும் தாயகத்தையும் இழந்து சூழலியல் அகதிகளாக தொகை தொகையாக வெளியேற வேண்டிய அவலம் ஏற்படும்.
பருவநிலை மாற்றங்கள் ஓர் அபாய நிலையை எட்டியுள்ள சூழலை உலகமே கவலையோடு விவாதித்து வரும் சூழலில், சூழலை அழிக்கும் “வளர்ச்சி”க்கு மாற்றாக வளங்குன்றா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என கருதிக் கொண்டிருக்கும் வேளை யில் ,இதற்கு முற்றிலும் நேரெ திரான இயற்கைச் சூழலையும், அது சார்ந்த மக்களையும் அழிக்கும் கொலைகாரத் திட்டத்திற்கு டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு பரிந்துரை அளித்துள்ளது.
இந்த உயர்மட்டக் குழு அறிக் கையை இந்திய அரசு ஏற்கக் கூடாது. இயற்கையையும், மனித வாழ்வையும் பாதுகாப்பதற்கு ஏற்ப சூழலியல் சட்டங்களை வலுப் படுத்த வேண்டும்.
சூழலியலாளர்களும், பழங்குடி மக்களும், உழவர்களும், மக்கள் நலனில் அக்கறையுள்ள அனை வரும் இந்த அறிக்கையை எதிர்த்துக் களம் காண வேண்டும்.