இருபதாம் நூற்றாண்டில் படைப்பிலக்கியத் துறையில் சிறுகதை, புதினம் ஆகியவற்றில் உலகத் தரத்திற்குத் தமிழை வளர்த்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு அடுத்து ஜெயகாந்தன் ஒளி உமிழும் சிகரமாக விளங்குகிறார். அவரது இறப்பு (08.04.2015) தமிழ் மக்களின் துயரத்திற்குரியது.

தமிழ் இன உணர்வு, தமிழ்மொழி உணர்வு ஆகியவை குறித்து ஜெயகாந்தன் கொச்சையான சில கருத்துகளைக் கூறியிருந்தாலும், தமிழ் மொழியைப் படைப்பிலக்கியத் துறையில் அவர் மேம்படுத்தியிருப்பதை நாம் ஏற்க வேண்டும்; அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். தமிழ்த் தேசியம் என்பது, தமிழ் இனத்தின் எல்லாப் பரிமானங்களின் கொள்கலன் ஆகும்.

கதைப்போக்கில் செறிவான தருக்கங்களை உரையாட விட்டவர் ஜெயகாந்தன். புதுமைப்பித்தனின் பொன்னகரம் ஒரு பாய்ச்சல் என்றால், ஜெயகாந்தனின் “அக்கினிப் பிரவேசம்” அதை விஞ்சிய இன்னொரு பாய்ச்சல்! அதற்குள் ஒன்றுக் கொன்று முரணான பற்பல உளவியல் போக்குகள் ஊடாடி இணங்கிச் செல்லும்!

“யாருக்காக அழுதான்” கதைதான் - ஜெயகாந்தனை நோக்கிப் படிப்பாளர் பார்வையை ஈர்த்தது. அதன்பிறகு எத்தனையோ படைப்புகள்!

“ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” - “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற புதினங்கள் மனித உளவியலின் ஆயிரம் குறுக்குவெட்டுப் போக்குகளை சித்தரித்தவை! ”சாத்தான்கள் வேதம் ஓதட்டும்” என்ற சிறுகதை அவருடைய மாறுபட்ட பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு!

இளம் தமிழ்ப் படைப்பாளிகள் ஜெயகாந்தனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய செய்திகள் இருக்கின்றன. கற்றுக் கொள்ளக்கூடாத சில குணங்களும் இருக்கின்றன.

சமகாலத் தமிழின் மாபெரும் படைப்பாளி ஜெயகாந்தன் மறைவுக்குத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது!

Comments

1 comment

1
இளமுருகு
பொதுவுடைமியில் ஆரம்பித்து மதவாததில் மூழ்கிப்போய் , காங்கிரசில் ஆரம்பிது திராவிட இயக்கத்தை கடுமையத்தாக்கி பிறகு கனிமொழியின் தாசனுதாசன் ஆகிப் போய் தனது வாழ்வினை நிறைவு செய்த செயகாந்தன் தமிழ்த்தேசியர்களுக்கு பிரியமானவர் எப்போது ? செத்தபிறகு விமர்சனம் கூடது என்பது அவர்கள் கொள்கை போலும்! மதம் மாறிய யூதனுக்கு என்ன சிறப்போ அதுதான் அவருக்கு கிடைக்கும் அவர் கஞ்சா குடிப்பவர் என்பதை தெளிவாகக் கூறத்தயங்குவானேன்?பாரதியைக் கஞ்சாக் கவி என்று எழுதி உள மகிழ்வுக் கொண்டவர்கள் செயகாந்தனைப் பற்றி மூடிமறப்பது ஏன்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.