மரபணு மாற்று விதைகளால் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் அதிகரிக்கும் என்றும், உற்பத்தியிலும் அது அதிக மகசூலை ஈட்டவில்லை என்றும் ஓர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த 20 தன்னார்வத் அமைப்பு கள் மரபணு மாற்று விதைகள் குறித்து ஆராய்ந்து, ‘மரபணு மாற்று விதைகள் மீதான அனைத்துலக குடிமக்கள் அறிக்கை’ என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை அக்டோபர் மாதத்தில் வெளியிட்டனர். இந்தியாவைச் சேர்ந்த வந்தனா சிவா உள்ளிட்ட ஆய்வாளர்களும் அதில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த ஆய்வின் முடிவுகள், மரபணு மாற்று விதைகள் பாதுகாப்பானவை என்றும், அதிகம் இலாபம் ஈட்டக்கூடியவை என்றும் முதலாளிய ஊடகங்களும், அரசுகளும் கட்டமைத்த பல்வேறு கூற்றுகளை உடைத்து சுக்குநூறாக்கியது. 29 நாடுகளில் 370 கோடி ஏக்கர்களில் பயரிடப்பட்ட மரபணு மாற்று விதைகளை ஆராய்ந்ததில், அதிகளவிலான மகசூல் ஈட்ட ம.மா. விதைகள் பயன்படும் என்ற கூற்றை உடைத்துள்ளது. இதே காலகட்டத்தில் தான் உணவு உற்பத்திக் குறைவால் ஏற்பட்ட பஞ்சம் இந்நாடுகளில் அதிகரித்ததை அறிக்கை சுட்டிக்காட்டியது.

மரபணு மாற்று விதைகளைப் பயன்படுத்தினால், மற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தத் தேவையில்லை என்ற கூற்றும் அடிபட்டுப்போனதை இவ்வாய்வு கூறியுள்ளது. உண்மையில், ம.மா. விதைகள் பயிரிடப்பட்ட பின்னும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

இவை மட்டுமின்றி, ம.மா. விதைகளால் உயி ருக்குக் கேடு விளையும் என்றும், இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ம.மா. விதைப் பயிர்களைக் கொண்டு எலி உள்ளிட்ட உயிரினங்கள் மீது நடத்தப் பட்ட ஆய்வுகளையும், அதன் தாக்கங்களையும் இதற்குச் சான்றாக இவ்வறிக்கை பட்டியலிட்டுள்ளது.

முழுமையான அறிக்கையைப் பார்வையிட:

http://image.guardian.co.uk/sys-files/Environment/documents/2011/10/19/GMOEMPEROR.pdf

Pin It