காவிரி என்ற ஓர் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத இந்தியஅரசு, காவிரிப்படுகை யில் கிடைக்கும் இன்னோர் இயற்கை வளமான பெட்ரோலியத்தையும் எரிவளியையும் எடுக்கக் கூடாது என்ற முழக்கத்தை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு அடியக்கமங்கலத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

உடனடிக் கோரிக்கையாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க,இந்திய அரசை வலியுறுத்தி,காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக 23-02-2013அன்று காலை திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில்இந்தியஅரசின்பெட்ரோல்கிணறுகள் முற்றுகையிடப்பட்டன.

உழவர்கள்,உணர்வாளர்கள் என ஏறத்தாழ ஆயிரம் பேர் அடியக்கமங்கலம் முதன்மைச் சாலை யிலிருந்து 3கி.மீட்டர் தொலைவில் இயங்கிவரும் இந்திய அரசின் பெட்ரோல் கிணறு நிறுவனம் நோக்கி பேரணியாக சென்றனர்.வழிநெடுக“காவிரி தமிழர் செவிலித்தாய், காவிரி தமிழர் உரிமை சொத்து” ”காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை! காவிரி வாரியம் இல்லாத இறுதித் தீர்ப்பு ஏட்டுச் சுரைக்காய்!ஏட்டுச் சுரைக்காய்!”“காவிரி இல்லாமல் வாழ்வில்லை! களம் காணாமல் காவிரி யில்லை!” “வெளியேறு! வெளியேறு! காவிரி உரிமையை காத்திடாத இந்திய அரசே வெளியேறு”என்று உழவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கங்கள் திசைகளை அதிரச்செய்தன.

முற்றுகைப் போராட்டத்தையொட்டி பெட்ரோல் கிணறு நிறுவன முகப்பு வாயிலருகே மூன்று அடுக்கு பாதுகாப்புப் படையினர் நின்றுக் கொண்டு இருந்தனர்.மத்திய தொழிற் பாதுகாப்புப்படை, கலவரத் தடுப்புப்படை, அதிவிரைவுப்படை என காவல் துறையினர் தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

தோழர்கள் பெட்ரோல் கிணறு நிறுவன வாயிற் கதவுகள் அருகே முன்னேறினர். முன்னெச்சரிக்கையாக வாயிற் கதவுகளை காவல் துறையினர் இழுத்துப் பூட்டினர். தடுத்து நிறுத்தப்பட்ட உழவர்களும் உணர்வாளர்களும்,திரளான பெண்களும் வாயிற்கதவருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கண்டன எழுச்சி முழக்கம் எழுப்ப தோழர்கள் அனைவரும் வாயிலில் அமர்ந்தனர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தலை வரும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப் பாளரு மான தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசுகையில் “தமிழ் நாட்டில் பெட்ரோல் எடுக்கும் பணி நடைப்பெறக்கூடாது என்று முற்றுகை அறிவித்தோம்.இன்று ஒரு நாள் அடியக்க மங்கலம் பெட்ரோலியக் கிணறுகளில் பணி நிறுத்தப்பட வேண்டும் என்று போராட்டம் அறிவித்தோம்.அதிகாரிகள்,வாயிற்கதவை இழுத்துப் பூட்டி நம் போராட்டத்தை வெற்றி பெறச் செய்துள்ளார்கள். என்று அறிவித்தவுடன் தோழர்கள் பலத்த கரவோலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்,

அங்கே கூடியிருந்த திரளானத் தோழர்களிடம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு துரை பாலகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும் தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன்,நாம் தமிழர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் கந்தன்,தமிழர் தேசிய இயக்கம் பொது செயலாளர் தோழர் அய்யனாபுரம் முருகேசன், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்ட விவசாயிகள் சங்கக் கூட்டமைப் புத் தலைவர் திரு மு.சேரன், காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தனபால், பாரம்பரிய நெல் பாதுகாப்பாளர் திருத்துறைப்பூண்டி செயராமன்,தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழி யன்,இயற்கை வேளாண்மை இயக்கத் தலைவர் தோழர் கே.கே.ஆர்.லெனின்,தாளாண்மை உழவர் இயக்கப் பொறுப்பாளர் பொறியாளர் திருநாவுக்கரசு,விடுதலை தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன், ம.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வி. விடுதலை வேந்தன் தமிழக வாழ்வுரிமை கட்சி தஞ்சை மாவட்டத் துணை தலைவர் திரு இரவிச்சந்திரன், மகளிர் ஆயம் ஒருங்கி ணைப்பாளர் தோழர் அருணா,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற் கண்ணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவரகள் கண்டனத்தைப் பதிவு செய்து பேசினர்.

நிறைவாக தமிழர் நீதிக் கட்சி தோழர் இராசேந்திரன் நன்றி கூறினார்.

உழவர்களும் உணர்வாளர்களும் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஊர்திகளில் வந்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக தஞ்சை மாவட்டத் தலைவர் தோழர் குழ.பால்ராசு,தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன்,தோழர் நா.வைகறை, தோழர் அ.ஆனந்தன், தோழர் க.முருகன். பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் மா.கோ.தேவராசன், சிவப்பிரகாசம், குடந்தை விடுதலைச் சுடர், ரெ. கருணாநிதி, க. காமராசு, கவித்துவன் தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரி முத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருண பாரதி,துணைத் தலைவர் செந்தில்குமரன், துணைப்பொதுச்செயலாளர் ஆ.குபேரன் உள்ளிட்ட தோழர் களும்,பேராசிரியர் த. செயராமன், பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் புளியங்குடி தோழர் பாண்டியன் பழங்குடி மக்கள் ஆய்வாளர் சி.கே மணி உள்ளிட்ட இன உணர்வாளர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.

உழவர்களின் இந்த உரிமைப் போராட்ட ஆயத்தப் பணிகளுக்காக த.தே.பொ.க.மூத்த தோழர் இரா.கோவிந்தசாமி, தோழர் இரணியன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் தனபால், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள் அரசு, ஞானசேகரன், இரமேசு ஆகியோர் இரவு பகல் பாராது உழைத்தனர்.

Pin It