தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஒரு மக்கள் போராட்டம் 590 நாட்களைக் கடந்தும் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. எளிய மீனவ, விவசாய மக்களால் கட்டமைக்கப்பட்டு நடத்தப் பட்டு வரும் இப்போராட்டத்தின் மீது அரசு தொடுத்த அவதூறுகளும், அடக்குமுறையும் எண்ணிலடங்காதவை.

அடக்கு முறையின் உச்சமாக நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் குறிப் பிட்ட பகுதியில் வாழும் 2,27,000 மக்கள் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 8,450 பேர் மீது தேசத் துரோக வழக்கும் (124கி), 13,350 பேர் மீது அரசுக்கு எதிரான யுத்தம் (121, 121கி) என்ற வழக்கும் 18143 பேர் மீது கொலை முயற்சி (307) வழக்கும், 15565 பேர் மீது அரசின் பொது சொத்தை சேதாரம் செய்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்ற இடிந்தகரை ரோசலின்(வயது64), கூடங் குளம் ராஜசேகர் (வயது 48) ஆகியோர் 60 நாட்கள் சிறையில் இருந்து போதிய மருத்துவ வசதி இன்றி உடல் நலம் குன்றியிருந்து, பிணை பெற்று மதுரையில் நிபந்தனை பிணையில் கையெழுத்து போட்டு வரும் போது மரணமடைந்தார்கள்.

இடிந்தகரையைச் சேர்ந்த மீனவ சமூகத்தைச் சார்ந்த சுந்தரி (வயது 37) என்பவர் மீது காவல் துறை தொடர்ந்த 16 வழக்குகளில் பிணை பெற்ற பிறகும், அவர் மீது 78 வழக்குகள் உள்ளது. எனவே பிணை யில் விடக்கூடாது எனக்கூறி நீதிமன்றத்தில் காவல் துறை எதிர்த்து வழக்காடி 100 நாட்கள் திருச்சி பெண்கள் சிறையில் அடைத்து வைத்தது.

அரசின் அடக்குமுறைகள், ஆசை வார்த்தைகள், மிரட்டல் கள் எதுவும் அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்களிடம் எடுபடவில்லை. எனவே போராட்டத்தில் முன் நிற்கும் ஊர் மக்களை மிரட்ட, குண்டர் தடுப்புச் சட்டம் போடுவதன் மூலம் ஓராண்டு காலம் விசாரணையின்றி சிறையில் அடைத்து அச்சுறுத்துவது என்ற முடிவை அரசு எடுத்தது.

இடிந்தகரையைச் சேர்ந்த மூவர் (லூர்துசாமி-68) நசேரன் - 40), சந்தியாகு ராயப்பன் -33), கூடங்குளத்தைச் சேர்ந்த இருவர்( ஏசு பிரான் - 40), சிந்து பாரத்-22) வரக்கிணறு ஊரைச் சேர்ந்த ஒருவர் (தவசிக் குமார் 35) மீது குண்டர் தடுப்புச்சட்டம் ஏவப் பட்டது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இந்த 6 பேர் பொது அமைதிக்கு குந்தகம் உண்டாக்கினர் எனக்கூறி 50 நாட்கள் கழித்து போடப் பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் இன்று உடைந்து அரசின் பொய்த்திரை கிழிந்துள்ளது.

குண்டர் சட்டமும்- கைதானவர் நிலையும்:

குண்டர் சட்டம் போடப் பட்டவர்களில் 5 பேர் மீது கைது செய்யப்படுவதற்கு முன்பு எவ்வித வழக்கும் இல்லை. இவர்கள் கைது செய்யப்பட்ட பின்புதான் பி.டி.வாரண்டில் சிறையில் இருந்து போது மீண்டும் இரு வழக்குப் போடப்பட்டன.

குண்டர் சட்டத்தில் கைதான லூர்து சாமி கடலில் பாசி பொறுக்கி விற்பவர். நசேரன், சந்தியாகு ராயப்பன் ஆகியோர் கடலில் மீன் பிடித்து வாழ்க்கை நடத்துபவர்கள். சிந்துபாரத் கைதாவதற்கு 12 நாட்களுக்கு முன்புதான் திருமணம் ஆனவர்.

கைதான 6 பேரும் போராட்ட குழுவிலோ, அல்லது போராட் டத்தில் முன்னணியிலோ இருந்த வர்கள் கிடையாது. இவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தால் அமைதிக்கு பங்கம் விளைவிப்பார்கள் எனக் கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் செல்வராஜ் உத்தரவிட்டார்.

குண்டர் தடுப்புச் சட்டம் உடைந்த கதை:

6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மாவட்ட ஆட்சித் தலை வர் போட்டவுடன் அதற்கான உத்தரவு சிறையில் அனைவருக் கும் வழங்கப்பட்டது. பின்பு 600 பக்கங்கள் கொண்ட தடுப்புக் காவல் காரணங்கள் என்ற குண் டாஸ் புத்தகம் ஒவ்வொருவருக் கும் வழங்கப்பட்டது. இதில் குண்டர் தடுப்புச் சட்டம் போட் டதற்கான ஆவணங்கள் இணைத்து வழங்கப்பட்டு இருந்தது.

இந்த குண்டாஸ் எனப்படும் தடுப்புக் காவல் சட்டம் போடுவ தற்கான புத்தகம் வழக்குப் போட்ட 5 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால் சிறையில் அனைவருக்குமே 8 நாள் முதல் 11 நாள் வரை சென்றே வழங்கப் பட்டது.

சிறையில் இருந்தவர்கள் மீது குற்றம் செய்ததை நேரில் பார்த் ததாக 161(3) வாக்குமூலம் சிலர் கொடுத்ததாக கூறப்பட்டு இருந் தது. ஆனால் அவ்வாறு வாக்கு மூலம் கொடுத்தவர்கள் முகவரி யில் அப்படிப்பட்ட நபரே இல்லை. போலியான முகவரி கொடுத்து காவல்துறை வழக்குப் தொடுத்திருந்தது.

மாவட்ட ஆட்சித் தலை வருக்கு குண்டர் தடுப்புச் சட்டம் போட்டவுடன் அதை நீக்கக் கோரி 12 நாட்களுக்கு கிடைக்கு மாறு மனு செய்யலாம் என்ற அடிப்படையில் மனு செய் தனர். 12 நாட்களுக்குள் கிடைத்த பதிவு அஞ்சல் கடிதத்தை காலம் தாழ்த் திக் கிடைத்ததாக தவறான தகவல் கொடுத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர்.

இது போன்ற 30க்கும் மேற் பட்ட தவறுகளை கொண்டி ருந்தது குண்டர் தடுப்புச் சட்ட ஆவணங்கள்.

குண்டர் தடுப்புச் சட்டம் போடும் அதிகாரம் கொண்டவர் மாவட்ட ஆட்சித் தலைவர். அவர் மாவட்டத்தை நிர்வகிக்கும் நடுவர் என்ற அடிப்படையில் இச் சட்டத்தில் ஒருவரை கைது செய்யஉத்தரவிடுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆவண அடிப் படையில் இச்சட்டத்தை சரி யான முறையில் ஒருவர் மீது போட்டுள்ளாரா என்ற கூற அமைக்கப்பட்டது அறிவுரைக் குழுமம்.

குண்டர் தடுப்புச் சட்ட ஆவணங்களில் உள்ள தவறு களைப் பற்றி அறிவுரை குழுமத் திற்கு அஞ்சலிலும், நேரில் அழைத்த விசாரணையிலும் தெரி விக்கப்பட்டது.

ஒருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டவுடன் ஏழுவாரத்திற்குள் (50 நாட்கள்) அறிவுரைக் குழுமம் அரசிற்கு அவர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைத்ததற்கு போதுமான காரணம் உண்டா, இல்லையா எனத் தெரிவிக்க வேண்டும். இதனைத் தடுப்புக் காவல் சட்டம் பிரிவு 11 கூறுகிறது. ஆனால் லூர்துசாமி, நசேரன் தவிர மற்ற 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு 90 நாட் கள் ஆகியும் கூட அரசுக்கு தனது முடிவை தெரிவிக்காமல் சட்டப் புறம்பாக நடந்தது அறிவுரைக் குழுமம்.

குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டவுடன் 6 பேர் சார் பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு போடப்பட்டது. மதுரை உயர் நீதிமன்றம் விசாரித்து அனை வர்க்கும் குண்டர் தடுப்புச் சட் டத்தில் வைக்க எவ்வித முகாந் திரமும் இல்லை எனக் கூறி கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உத்திரவிட்டுள்ளது.

அரசின் அடக்கு முறையும், குண்டர் தடுப்புச் சட்டமும் இன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் நிர்மூலமாகி நிற்கின்றது. போரா டும் மக்கள் தனது வாழ்வா தாரத்தை பாதுகாக்க போராட் டத்தைத் தீவிரமாக்கி உள்ளனர்.

நீதியான மக்கள் போராட்டம் தோற்பதில்லை
அநீதிக்கான அடக்கு முறைகள் வென்றதில்லை

Pin It