உலகநீதி என்று நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் வெறும் ஆறுதல் மொழி தான். அப்படி ஒரு நீதி உலகத்தில் இருந்தால் அமெரிக்க வல்லரசு ஈராக்கை அழித்திருக்க முடியுமா? ஆப்கனிஸ்தானை அது குதறியிருக்க முடியுமா? ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபட்சே கும்பல் சுதந்திரமாகத் திரிய முடியுமா? அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகள் இன்றும் சிங்கள இனவெறி அரசைத் தாங்கிப் பாதுகாக்க முடியுமா?

தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாத இனம் உலகநீதி பற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும். இது தான் தமிழர்களுக்கு வரலாறு கற்றுத் தந்த பாடம்! தன்கொரு தேச அரசு இல்லாத இனம், உலக அனாதை தான்!

பொதுநலநாடுகள் மன்றத்தில் (காமன்வெல்த்) தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு 1961-இல் தென்னாப்பிரிக்கா விண்ணப்பம் போட்டது. அவ்விண்ணப்பத்தைப் பொதுநல நாடுகள் மன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இனவெறி, நிறவெறி கொண்ட வெள்ளை ஆக்கிரமிப்பாளர்கள், மண்ணின் மக்களாகிய கறுப்பினத்தவர்க்கு சமஉரிமை வழங்க மறுத்தார்கள். கறுப்பின மக்கள் தங்கள் உரிமைக்குப் போராடினார்கள். தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களின் போராட்டத்தை மட்டும் கணக்கில் கொண்டு, பொ.நா.மன்றம் தென்னாப்பிரிக்காவை சேர்த்துக் கொள்ள மறுக்கவில்லை. அதே கறுப்பின மக்கள், ஆப்ரிக்கக் கண்டத்தில் பல நாடுகளில் சொந்த அரசு நடத்துகிறார்கள். அந்நாடுகள் கொடுத்த நெருக்கடி - அவற்றுடன் உறவு கொண்டு, வணிகம் செய்தல், இயற்கை வளங்களைச் சுரண்டுதல் போன்ற தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்கக் கறுப்பின் மக்களின கோரிக்கைக்கு அக்காலத்தில் செவி சாய்த்தது பொ.நா.மன்றம்.

1961 - சிங்கப்பூர் பிரகடனமும், 1991 ஹராரே பிரகடனமும் பொ.நா. மன்ற உறுப்பு நாடுகள் இனப்பாகுபாடு, நிறப்பாகுபாடு, பால்வேறுபாடு, மனித உரிமைப் பறிப்பு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கின்றன.

ஜிம்பாப்வே நாட்டில் இராபர்ட் முகாபே அரசு, வெள்ளை இனத்தவரின் பெரும் பெரும் பண்ணைகளை அரசுடைமையாக்கியது. எதிர்த்த வெள்ளையர்களை சுட்டுத் தள்ளியது. இதை வைத்து 2002-இல் ஜிம்பாப்வே நாட்டை, பொ.நா. மன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்தார்கள். காரணம், பொ.நா.மன்றத்தில் பிரித்தானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற வெள்ளை இன நாடுகள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன.

இராசபட்சே கும்பல் நடத்திய இனப்படுகொலை மீது நடவடிக்கை எடுக்குமாறு உலக அரங்கிலும், பொ.நா.மன்றத்திலும் நெருக்கடிகள் கொடுக்கவும், நிபந்தனைகள் போடவும் தமிழினத்திற்கென்று சொந்த அரசு எதுவுமில்லை. எட்டுக் கோடி தமிழர்களை அடிமை கொண்டுள்ள இந்தியா, தமிழின எதிர்ப்புக் கொள்கையைத் தனது நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக வைத்துள்ளது. கொழும்பு மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் அண்மையில் கொழும்பிலிருந்த போது மகிச்சியோடு அறிவித்தார்.

இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைகள் - மனித உரிமைப் பறிப்புகள் - எஞ்சிய தமிழ் மக்களைப் பணயக் கைதிகள் போல் இராணுவ முற்றுகைக்கள் வைத்திருப்பது - போன்றவற்றின் மீது பன்னாட்டுப் புலனாய்வு வந்துவிடாமல் தடுக்கும் பேரரணாக இந்தியா உலக அரங்கில் செயல்படுகிறது. இலங்கையில் பொ.நா.மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டாமென்று கனடா கூறிய போது, அக்கருத்தைப் புறந்தள்ளச் செய்தது இந்தியா. தமிழினத்தை அழித்த இராசபட்சேக்குப் பன்னாட்டு அரங்கில் மகுடம் சூட்டி மகிழ வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொ.நா.மன்றத்தின் செயல் தலைவராக இராசபட்சே விளங்க வேண்டுமென்பது அதன் ஆசை.

பிரித்தானியப் பிரதமர் கேமரூன், இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் முன்னேற்றம் வேண்டும் என்று சொன்னதோடு சரி. மற்றபடி கொழும்பில் பொ.நா.மாநாட்டை நடத்துவதில் தீவிரம் காட்டுகிறார். மனித உரிமை ஆதரவு நாடகமாடுகிறார் கேமரூன்!

ஆஸ்திரேலியாவின் பசுமைக் கட்சி இலங்கையை பொ.நா.மன்றத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால், அந்நாட்டு அரசு உறுதியாக இராசபட்சே கும்பலை ஆதரிக்கிறது. கொழும்பில் மாநாட்டை நடத்த எல்லா வகையிலும் துணை நிற்கிறது.

சனநாயகம், மனித உரிமைகள் ஆகியவை பற்றி வாய்கிழியப் பேசும் நியூசிலாந்து அரசு, இராசபட்சே கும்பலைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டுகிறது.

கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஆர்ப்பர், கொழும்பில் நடக்கும் பொ.நா. மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்துவிட்டார். அவர் கூறும் காரணம், “உள்நாட்டுப் போருக்குப் பின், போர்க்காலத்தில் நடந்த மனித உயிர்ப் பறிப்புகள் - உரிமைப் பறிப்புகள், எவ்வளவு பேர் காணாமல் போனார்கள் - அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் யார் யார் என்பன போன்றவற்றை விசாரித்து நடவடிக்கை எடுத்து, புதிய நல்லிணக்கத்தை உண்டாக்க இராசபட்சே அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என்பது தான்.

இந்தக் குறைந்த அளவு ஞாயத்தைக் கூட இந்தியா வலியுறுத்தவில்லை என்பது மட்டுமன்று, இதனை வலியுறுத்துவோரையும் தடுக்கிறது. பொ.நா.மன்றத்தில் உறுப்பு வகிக்காவிட்டாலும் அதன்மீது செல்வாக்கு செலுத்தும் ஆற்றல் வட அமெரிக்காவிற்கு இருக்கிறது. கனடா பிரதமர் எழுப்பும் குறைந்த அளவு மனித நேய - சனநாயகக் கோரிக்கையைக் கூட ஒபாமா ஆட்சி ஏற்கவில்லை.

நடுநிலையாளன் போல் நாடகமாடி, சமரச முயற்சியில் ஈடுபட்ட நார்வே, இராசபட்சேயைப் பாதுகாக்க எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

பொ.நா.மன்றத்தின் சட்ட வல்லுநர் சங்கம் தனது 18ஆவது மாநாட்டை கடந்த ஏப்ரல் 14-18 நாட்களில் தென்னாப் பிரிக்காவின் கேப்டவுனில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட 27 நாடுகளின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் தனியே கூடி பொ.நா. மன்றத்திலிருந்து இலங்கையை இடை நீக்கம் செய்ய வேண்டுமென்று தீர்மானம் போட்டார்கள்; கொழும்பில் அம்மாநாட்டை நடத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரினர். தலைமை நீதிபதிகளின் இக்கோரிக்கையை கனடா தவிர்த்த பொ.நா.மன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் சட்டை செய்யவில்லை.

இந்தியாவைச் சேர்ந்த கமலேசு சர்மா என்பவர் பொ.நா.மன்றத்தின் தலைமைச் செயலாளராக உள்ளார். இவர் இந்திய ஆட்சியாளர்களின் கைக்கருவியாகச் செயல்படுகிறார். ஆரியத்தின் தமிழின வெறுப்பை நெஞ்சில் சுமந்துள்ளார்.

2008-2009 ஆண்டுகளில் இலங்கை அரசு நடத்திய போரில், கூட்டம் கூட்டமாக அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதையும், செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள் போன்ற துயர் துடைப்பு அமைப்புகள் ஈழத்தமிழர் பகுதிகளில் செயல்பட முடியாமல் தடுக்கப்பட்டதையும், மனித உரிமைப் பறிப்புகளையும் பொ.நா.மன்றத்தில் உறுப்பு வகிக்கும் நாடுகளின் கவனத்திற்குக் கொண்டுவர, பொ.நா. மன்றத்தின் அதிகாரிகள் ஓர் உள்ளக அறிக்கை அணியம் செய்தனர். அதனை 2009இல் சர்மாவிடம் அளித்தனர்.

ஆனால் அந்த அறிக்கையை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பக் கூடாது, வெளியிடவும் கூடாது என்று தடுத்து விட்டார் சர்மா. அதற்கு அவர் கூறிய காரணம், ”இலங்கையில் நடப்பது ஓர் உள்நாட்டுச்சிக்கல்; அதில் நாம் தலையிடக் கூடாது” என்பதாகும். கமலேசு சர்மாவின் இந்தக் குரூரத்தை ,வன்மத்தை இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் ஏடு வெளியிட்டு அம்பலப்படுத்திவிட்டது. 2010ஆம் ஆண்டு மேற்படி உள்ளக அறிக்கையை அவ்வேடு வெளியிட்டது.

இலங்கையின் ஒவ்வொரு குற்றத்தையும் மறைக்கும் கூலியாக இந்தியாவைச் சேர்ந்த கமலேசு சர்மா செயல்படுகிறார் என்று கனடாவின் பொ.நா. மன்ற சிறப்புத் தூதர் அக் செகல் கார்டியன் இதழ் நேர்காணலில் (09.10.2013) கூறினார்.

பொ.நா.மன்றத்தின் நிரந்தரத் தலைவர் பிரித்தானியப் பேரரசி எலிசபெத் - 2 ஆவார். அவ்வகையில் பிரித்தானியா அவ்வமைப்பின் தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அதைத் தடுக்க அந்நாடு முன்வரவில்லை. இப்போது அக்குற்றம் பற்றி விசாரணை நடத்தவிடாமல் தடுக்கின்ற இராசபட்சே கும்பலுக்குப் பிரித்தானியா துணை போவது ஏன்? தமிழினத்தையும் ஆக்கிரமித்துத்தானே அவர்கள் 200 ஆண்டுகாலம் ஆண்டார்கள். அதற்கான நன்றிக் கடனா இது?

இரண்டு கோடி சிங்களர் பக்கம் நின்று - அதன் அட்டூழியங்களை ஆதரிக்கின்றன பிரித்தானியாவும் பிற நாடுகளும்; பாதிக்கப்பட்டுள்ள பத்துக்கோடி தமிழர்களுக்கு வழங்க வேண்டிய நீதியை வழங்க உலகம் மறுக்கிறது. தமிழ் இனத்திற்கென்று தனியே ஒரு நாடு இல்லை என்பது தான் இதற்குக் காரணம்!

தனி நாடு அமைக்க ஈழத்தமிழர்கள் பக்கம் கைகாட்டித் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒதுங்கிக் கூடாது. இந்தியாவில் வாழும் எட்டுக்கோடித் தமிழர்கள் தமிழ்த்தேசம் அமைக்க உறுதி பூண வேண்டும்!

Pin It

தமிழின உணர்வாளர் மிகச்சிறந்த திரு. நா.ப.இராமசாமி அவர்கள் கடந்த 23.09.2013 அன்று நாமக்கலில் காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்வு 10.10.2013 அன்று நாமக்கல் - திருச்செங்கோடு சாலை - சுப்புலட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

காலை 9.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வுக்கு சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் தலைமையேற் றார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, நா.ப.இராமசாமி அவர்களின் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ஆற்றிய உரை:

“தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை - தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?" என்று கேட்டார் பாரதிதாசன். பாரதியார், பட்டுக் கோட்டையார், பாரதிதாசன் ஆகியோர் இன்றைக்கும் சாகவில்லை. அவர்களது இலக்கியங்களின் மூலம் அவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

அதைப் போல, தமிழின உணர்வாளர் திரு. நா.ப.இராமசாமி அவர்களும் சாகாமல் உயிர் வாழ வேண்டுமென்றால், அவர் திரட்டியுள்ள அரிய நூல் களைக் கொண்டு, நாமக்கலில் அவர் பெயரிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே இது போல் பல அரிய நூல்களைத் திரட்டிய ரோஜா முத்தையா அவர்களது நூல்கள், அவர் பெயரால் ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்பட்டு இன்று சென்னையில் நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுக் கோட்டையில் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியர் திருமதி. டோரதி ஆகியோரின் முயற்சியில் ஞானாலயா நூலகம் செயல்பட்டு வருகின்றது. அது பலருக்கும் பயன்பட்டு வருகிறது.

ரோஜா முத்தையா நூலகம் போல, ஞானாலயா நூலகம் போல நா.ப.இரா. நூலகம் நாமக்கலில் திகழ ஓர் அறக்கட்டளையை உருவாக்கிட முன் வர வேண் டும். இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒருங்கிணைத்த தோழர்கள் கண.குறிஞ்சி, கி.வே. பொன்னையன் ஆகி யோரும், நா.ப.இரா. குடும்பத்தினரும் இதற்கு முன் முயற்சி எடுத்தால் நான் சார்ந்துள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இதற்கான பணியில் பங்கேற்கும்.

நா.ப.இரா. அவர்கள் ஈழவிடுதலையை ஆதரித் தவர், தமிழ்நாடு விடுத லையைக் கோரியவர், பகுத்தறிவாளர், பார்ப் பன ஆதிக்க எதிர்ப்புப் போராளி, பொதுவுடைமையாளர் என்று சிறப்பாகக் குறிப்பிட்டு துண்டறிக்கையிலேயே போட்டுள் ளார்கள். இவை அத்தனையும் உண்மை.

ஆனால், தமிழ்நாட்டில் ஈழவிடு தலையை ஆதரிக்கும் பலர் தமிழ் நாட்டு விடுதலையை ஆதரிப் பதில்லை. ஈழம் விடுதலை அடை வதற்கு நூறு காரணங்கள் இருக் கின்றன என்றால், தமிழ்நாடு விடு தலைஅடைவதற்கு நூற்றி இரண்டு காரணங்கள் இருக்கின்றன (கைத்தட்டல்).

அப்படி இருந்தும், தமிழ்நாட்டு விடுதலையை பலர் ஆதரிக்காமல் இருப்பது ஏன்? மூன்று வகையான காரணங்கள் இதற்கு இருக்கலாம்.

ஒன்று, நாம் அடிமைப்பட்டி ருக்கிறோம் என்ற உண்மையை உணராத அறியாமை. இரண்டு, அச்சம். மூன்று, அரசியல் சந்தர்ப்ப வாதம்.

நா.ப.இராமசாமி அவர்கள் நேர்மையான,உண்மையான, துணிச்சலான மனிதர். அதனால் அவர் தமிழீழ விடுதலையையும், தமிழ் நாட்டு விடுதலையையும் ஒருங்கே ஆதரித்தார்.

அவர் பார்ப்பன எதிர்ப்பாளர் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆரியப் பார்ப்பன எதிர்ப்பு தொன்று தொட்டு தமிழ் இனத்தின் முக்கியமான கொள்கையாகும். பெரியார் அவர்கள் நம் காலத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து பட்டிதொட்டியெல்லாம் பரப்புரை செய்தார்கள். அது, நமக்கு சில பலன்களையும் தந்தது. சங்ககாலத் திலிருந்து தமிழர்கள் ஆரியத்தை, பார்ப்பனியத்தை முறியடித்தால் தான் நாம் வாழ முடியும் என்ற கருத்தை உணர்ந்திருந்தார்கள். அதை வெளிப்படுத்தினார்கள்.

சேர, சோழ, பாண்டிய மன்னர் கள் தமிழ்க்கொடியை ஏற்றும் கொடிக் கம்பமாக இமயமலை இருந் திருக்கிறது. இதைப் பற்றியெல் லாம் பாடல்கள் இருக்கின்றன. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இக்காலத்தில் நாம் இமயமலையில் கொடியேற்ற வேண்டும் என்ப தல்ல. ஆரியத்தையும், பார்ப்பனி யத்தையும் அடக்கி வைக்கவில்லை யென்றால் தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாது என்பதைத்தான்.

சோழன் நலங்கிள்ளியைப் பாராட்டிய கோவூர்கிழார் 'உன் பெயரைக் கேட்டால் வடபுலத்து அரசர்களின் நெஞ்சில் அவலம் பாயும். அவர்கள் கண்கள் தூக்க மிழந்துவிடும். அஞ்சி நடுங்கு வார்கள்' என்கிறார். இந்த வகை யில் வடபுலத்தை ஒடுக்கி வைத்தா லொழிய, நம் காலத்தில் ஒதுக்கி வைத்தாலொழிய தமிழர்களுக்கு அமைதி கிடையாது, வாழ்வுரிமை கிடையாது என்பது தான் வரலாறு.

சிந்துச்சமவெளி நகரங்களை அழித்த அதே ஆரியம் தான், கிளிநொச்சி நகரத்தையும் அழித் தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம், இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழர் களைத் தவிர நாங்கள் அனைவரும் ஒரே இனம் என்றார். அக்கூற்றை இந்திய ஆட்சியாளர்கள் யாரும் எதிர்க்கவில்லை. பா.ஜ.க. தலைவர் அத்வானி தனது முகநூலில், சிங்கள ரும் இந்தியரும் ஆரியர்களே என்று எழுதினார். அவர்கள் வரலாற்று உண்மையைத்தான் சொல்கிறார் கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான் ஏமாளிகளாக இருக்கிறார்கள். சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வந்த மரபுத் தொடர்ச்சியோடு தான் நா.ப.இராமசாமி ஆரியத்தை முழு மூச்சோடு எதிர்த்தார்.

பகுத்தறிவுக் கருத்துகள் தமிழ் இனத்தில் நீண்ட நெடுங்காலமாக இருக்கின்றன. “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’’ என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. எவ்வளவு பெரிய ஆள் சொன்னா லும், கடவுள் சொன்னதாகச் சொன்னாலும் அது உண்மையா னதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய் என்றார் அவர்.

ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந்த திருநாவுக்கரசர், ”சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டென் செய்தீர்’’ என்று கேட்டார்.

திருமந்திரத்தில் திருமூலர், “பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் / போர் கொண்ட மன்னர்க்கு நோயாம் / சீர் கொண்ட நாட்டின் சிறப்பெல் லாம் மாயும்’’ என்று எழுதினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் இராமலிங்க அடிக ளார், ”வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் / வேதாக மங்களின் விளைவறியீர் சூதாகச் சொன்னதலால் / உண்மை வெளித் தோன்ற உரைத்தல் இல்லை” என்றார்.

நா.ப.இரா.வின் பொதுவுடை மைக் கருத்துகளை நான் அறிந்திருக்கிறேன். ”பகுத்து ண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாந் தலை’’ என்றார் வள்ளுவர்.

ஆக, தமிழக விடுதலை, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு, பகுத்தறிவு, பொதுவுடைமை ஆகிய அத்தனை பண்புகளும் கொண்ட நா.ப.இரா. அவர்களை ஒரு சிறந்த தமிழர் என்று சொல்லலாம். தமிழினத்தின் பண்புகள் தான் இவை அனைத்தும்’’

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிகழ்வில், சமூகநீதி வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர் பொ.இரத்தி னம், மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கண. குறிஞ்சி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. கி.வே.பொன் னையன், முன்னாள் நடுவண் அமைச்சர் திரு. காந்திசெல்வன் (தி.மு.க.), தோழர் நிலவன் (தமிழ்த் தேச மக்கள் கட்சி), எழுத்தாளர் பொ.வேலுசாமி, புலவர் கருப் பண்ணன் (பாவேந்தர் பேரவை) உள்ளிட்ட பல்வேறு இயக்கப் பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.

நிறைவில், நா.ப.இராமசாமி அவர்களின் மகன் திரு. இரா. அன்பழகன் நன்றி நவின்றார்.

Pin It

உலகம் முழுவதும் மான்சாண்டோ குழும எதிர்ப்பு நாள் கடைபிடிப்பதையொட்டி, 12.10.2013 அன்று திருவாரூரில் உழவர் பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தன. ‘மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்திற்கு மாறான தென்னகம்’ என்ற அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்தது. பல்வேறு உழவர் அமைப்புகள் இதில் கலந்து கொண்டன.

திருவாரூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடங் கிய பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திரு. வெ.துரை ராசன் தலைமை தாங்கினார். விவசாய சங்கங்களின் தலைவர்களான திரு. மு.சேரன், திரு. சி.பாலகிருஷ் ணன், திரு. பா.மணிமொழியன், திரு. ஆர்.பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் இயற்கை உழவர் இயக்கத்தின் மாநில இணைச் செயலாளர் திரு. இரா.செயராமன் இப்பேரணிக்கான ஒருங்கி ணைப்புப் பணிகளைச் செய்தார். கண்டன ஆர்ப் பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி திரு. கே.சுரேஷ் கண்ணா, திரு. காவிரி தனபாலன் ஆகியோர் பேசினர்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அஞ்சலகத்தின் எதிரே நிறைவுற்ற பேரணியின் முடிவில், மான் சாண்டோ எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில், இயற்கை வேளாண் அறிவியலாளர் முனைவர் கோ.நம்மாழ்வார், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கி ணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் ஆகியோர் உரையாற்றினர்.

முனைவர் கோ.நம்மாழ்வார் அவர்கள் உரை யாற்றும் போது, மரபீனி மாற்று விதைகளைப் பயன் படுத்தி சாகுபடி செய்தால் அந்தப் பயிர்களைப் பிடுங்கி அழிப்போம் என்றும் மான்சாண்டோ உருவ பொம்மையை கொளுத்துவோம் என்றும் எச்சரித்தார்.

தோழர் பெ.மணியரசன் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

”நகரங்களிலே உள்ள பழமுதிர்ச்சோலைகளில் பூசணிக்காய் அளவிற்கு கத்தரிக்காய் பெரிதாக இருக்கி றது. இந்த வகை கத்திரிக்காய் மான்சாண்டோ வின் மரபீனி மாற்று கத்திரிக்காயாகும். மரபீனி மாற்று பி.ட்டி. பருத்தி சாகுபடி தான் நூற்றுக்கு 80 விழுக் காடு நடைபெறுகிறது.

மரபீனி மாற்றுப் பயிர் ஒழுங் காற்றுச் சட்டம் மசோதா நிலையி லேயே இருக்கிறது. அதை சட்ட மாக நிறைவேற்ற இந்தியாவெங்கும் உழவர்கள் எதிர்ப்புத் தெரிவித் தனர். நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர சி.பி.எம். நாடாளு மன்ற உறுப்பினர் நிலோத்பல் பாசு தலைமையில் ஒரு தேர்வுக் குழு (ஷிமீறீமீநீt சிஷீனீனீவீtமீமீ) வை அமைத்து அதனுடைய ஆய்வுக்கு விட்டார் கள்.

அக்குழு இந்தியாவெங்கும் சென்று களஆய்வு நடத்தி கருத்து கள் கேட்டு, இறுதி அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில் ”மர பீனி மாற்று விதைகளைப் பயன் படுத்தினால் விளைச்சல் பாதிக்கப் படும், அதனால் உருவாகும் காய் கறிகளையும் தானியங்களையும் உண்பவர்களுக்கு நோய்கள் ஏற் படும். அதன் தாவரங்களை உண் ணும் பிராணிகள் நோய் வாய்ப் படும். மனிதர்களும் விலங்கு களும் மலட்டுத்தன்மை அடைவர். அப் பயிர்கள் நச்சுத்தன்மை வாய்ந் தவை’’ என்று கூறி மரபீனி மாற் றுப் பயிர்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் பல் வகைப் பயிர்களை பயிரிட்டு உயிர்ப் பன்மத் திற்கு பாதுகாப்பு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவ் வறிக்கை கூறியது.

அவ்வறிக்கை அரசுக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின் மேற்படி மசோ தா கிடப்பில் போடப் பட்டுள்ளது. அது சட்டமாக வில்லை.

ஆனால், கொல்லைப்புற வழி களில் இந்திய அரசு மான் சாண் டோ, சின்ஜென்டா போன்ற பன் னாட்டு நிறுவனங்களின் மரபீனி மாற்று விதைகளை இந்தியாவிற் குள் அனுமதித்திருக்கிறது. தமிழ் நாட்டிற்குள்ளும் அனுமதித்திருக் கிறது. இந்தியாவின் பிரதமர் மன் மோகன் சிங், ஆளுங்கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகி யோர் மான்சாண்டோ நிறுவனத் தின் கங்காணிகளாக வேலை செய்கி றார்கள். இவர்கள் நாடாளு மன்றத் தேர்வுக் குழு அளித்த அறிக்கையை நடைமுறையில் செல்லாக் காசாக்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்த போதும் சரி, இப்பொழுது அண்ணா தி.மு.க. ஆட்சி நடக்கும் போதும் சரி மான்சாண்டோவின் மரபீனி மாற்று விதைகளை அனு மதிக்கிறார்கள். இன்றும் மான் சாண்டோ நிறுவனத்தின் நிதியுதவி யுடன் கோயம்புத்துர் வேளாண் பல் கலைக்கழகத்திலும், அண்ணா மலைப் பல்கலைக் கழகத்திலும் மரபீனி மாற்று விதைக்கான ஆய்வுத்துறைகள் செயல்படுகின் றன. அப்பல்கலைக் கழகங்கள் மரபீனி மாற்றுப் பயிர்களை ஆதரித்துப் பரப்புரை செய்கின்றன.

இப்பல்கலைக்கழகங்கள் மான் சாண்டோ கொடுக்கும் இலஞ்சப் பணத்தில் அந்நிறுவனத்திற்கு ஆதரவாக மக்களுக்கு எதிரான ஆராய்ச்சி அமைப்புகளை உரு வாக்கி கொண்டுள்ளன. நாடாளு மன்றத் தேர்வுக் குழுவில் அ.இ.அ.தி. மு.க.வின் தம்பித்துரையும் உறுப்பி ன ராக இருந்தார். அவரும் மரபீனி மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அத் தேர்வுக் குழுவில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

ஆனால், அண்ணா தி.மு.க.வின் தமிழக அரசு, தமிழ்நாட்டுப் பல் கலைக்கழகங்களில் மான்சாண் டோவின் நிதியில் ஆராய்ச்சிகள் நடப்பதை அனுமதிப்பது ஏன்? தமிழக முதலமைச்சர் மவுனம் காக்காமல் இதிலொரு முடிவெடுக்க வேண்டும்! அந்த மான்சாண்டோ ஆராய்ச்சி அமைப்புகளை மூடச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மரபீனி மாற்று விதைகளோ, காய்கறிகளோ, தானியங்களோ வராமல் தடுக்க வேண்டும்.

இது உழவர்களுக்கான சிக்கல் மட்டுமல்ல. இது அனைத்து மக்க ளுக்குமான சிக்கல். இனிமேல் கடை களில் மரபீனி மாற்றுக் காய்கறிகள் இருந்தால், அவற்றை வெளியே சாலையில் வீசி அழிக்க வேண்டும். பி.ட்டி. பருத்தியை சாகுபடி செய் யாமல் விவசாயிகளை தடுக்க வேண்டும். இது போன்ற போராட் டங்களை நடத்துவதற்கும், உழவர் கள் நடத்தும் போராட்டங் களில் பங்கு கொள்வதற்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவிலுள்ள உழவர்கள் அணியமாக இருக்கிறார் கள் என்பதைத் தெரிவித்து இப் போராட்டத்தை திருவாரூரில் முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறு கிறேன். வணக்கம்!’’

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, திருத்துறைப்பூண்டி மூத்த த.தே.பொ.க. தோழர் இரா. கோவிந்தசாமி, ஒன்றியச் செயலா ளர் தோழர் மு.தனபாலன், பொதுக் குழு உறுப்பினர் தோழர் வெ.இரா சேந்திரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.

Pin It

நாம் மதிப்பிட்டதைப் போலவே இந்திய அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை மாநிலங்களின் மீது சுமத்துவதற்கு உறுதியான திட்டம் தீட்டி விட்டது. அதிலும் தமிழ் நாட்டை வஞ்சிப்பதில் குறியாக உள்ளது. இந்திய அரசு தான் வசூலிக்கும் வரி வருமானத்தில் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய இந்திய நிதியமைச்சர் நியமித்த இரகுராம்ராஜன் குழு அளித்துள்ள அறிக்கை 26.09.2013 அன்று வெளியாகி உள்ளது.

மறைமுக வரியிலும், நேரடி வரியிலும் இந்திய அரசு திரட்டும் வருவாயில் ஒரு குறிப்பிட்டப் பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பகிர்ந்தளிக் கப்படும் வரியினங்களின் பங்கீட்டு விகித்ததை தீர்மானிக்கவும், மாநிலங்களுக்கு என ஒதுக்கப்படும் பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யவும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது.

இப்போது 13 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் செயலில் உள்ளன 2015 க்குப் பிறகு இந்திய ஒன்றிய மாநில அரசுகளின் நிதிப் பங்கீடு குறித்து தீர்மானிப்பதற்கு கடந்த ஆண்டு .முனைவர் ஒய்.வி.ரெட்டி தலைமையிலான 14 ஆவது நிதி ஆணையம் 2016 அக்டோபரில் தனது முடிவுகளை அரசுக்கு அளிக்க இருக்கிறது.

நிதி ஆணையம் என்பது அரசமைப்புச் சட்ட உறுப்பு 280-ன் படி நிறுவப்படும் அமைப்பாகும். அது இருக்கும் போதே அரசமைப்புச் சட்டத்திற்கு தொடர் பில்லாமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதே செய்தி குறித்து முடிவு செய்ய இன்னொருக் குழுவை நிதியமைச்சர் ப.சிதம்பரம் நியமித்ததேகடும் அதுமீறலாகும்.

நிதியாணையம் அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்டப் பின்பே தனது பரிந்துரையை அளிக்கிறது. ஆனால், நிதியமைச்சர் நியமித்த நிதிப் பங் கீட்டு குழுவுக்கு அப்படி ஒரு சட் டக் கடப்பாடே இல்லை. எனவே, தானடித்த மூப்பாக இப்பரிந் துரையை அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் ஒட்டு மொத்த வரிப்பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதற்கு இரகுராம் ராஜன் குழு அளித்துள்ளப் பரிந்துரையை உற்று நோக்கினால், செயல்திறன் உள்ள மாநிலங்களை தண்டிக்கும் நோக்கில் அது அமைந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக இப்பரிந்துரை தமிழகத்தின் மீது மிகக் கொடுமையான நிதித்தாக்கு தலைத் தொடுக்கிறது.

இது குறித்து கடந்த 2.10.2013 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள விரிவான கடிதத்தில் தமிழக முதலைமைச்சர் செயலலிதா இரகுராம் ராஜன் பரிந்துரை எவ்வாறு தமிழகத்துக்கு எதிராக உள்ளது என்பதை ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறார்.

‘நகர் மயமாக்கலை வளர்ச்சியின் ஓர் அளவுகோளாக குறீப்பிடும் இக் குழு நகர்மயமாக்களோடு இணைந்து உருவாகும் நடைபாதை குடியிருப்பு உள்ளிட்ட முறை சாராக் குடியிருப்புகள் பெருகுவதையும் அது மாநில அரசுக்கு ஏற்படுத்தும் கூடுதல் செலவினங்களையும் கருத்தில் கொள்ள வில்லை. தண்ணீர் என்பது மிக அடிப்படையான வாழ்வாதாரப் பொருள். தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையில் தத்தளிக்கும் மாநிலம் மக்களுக்கு பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்குவது மாநில அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் கணக்கில் கொள்ளப் படவில்லை.

இந்தியாவின் ஒட்டு மொத்த தாழ்த் தப்பட்ட பழங்குடியின மக்களின் தொகையில், தமிழ்நாட்டில் அப் பிரிவு மக்களின் விகிதம் என்ன என்று எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக தமிழ்நாட்டு மக்கள் தொகையில் இப்பிரிவினரின் விகிதம் என்ன என்று கொள்ளப் பட்டிருப்பது அறிவியலுக்கு புறம் பான அளவீடாகும். தொழில் மய மாகும் தமிழகம் அத்துடன் சேர்ந்து காற்று மற்றும் நீர் மாசுபாட்டையும் சந்திக்கிறது, இதில் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையையும் இரகு ராம் ராஜன் குழு கணக்கில் கொள் ளவில்லை. 1971 ஆம் ஆண்டு அடிப்படையாகக் கொள்ளாமல் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்வது குடும்பக்கட்டுப் பாட்டில் முன்னிலை வகிக்கும் தமிழகத்தை வஞ்சிப்பதாகவே அமையும்’ என்று செயலலிதா கூறுவது சரியான காரணங்களாகும்.

ஆனால், இரகுராம் இராஜன் குழு அறிவியலுக்குப் புறம்பான வகையில் நிதிப் பங்கீட்டுக்கான வரை முறைகளை வகுத்துக் கொண்டுள்ளது.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத் தகுதியான ஒட்டுமொத்த வரி நிதியில் அனைத்து மாநிலங்களுக் கும் தலா 8.4 விழுக்காட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் மீதம் உள்ள 91.6 விழுக்காட்டு நிதியை தேவை அதிகமுள்ள மாநிலங்களுக்கு முக்கால் பங்கும் செயல் திறன் உள்ள மாநிலங் களுக்கு கால்பங்கும் என்ற அளவில் பிரித் துக் கொடுக்கலாம் என்றும் இரகுராம் ராஜன் குழு அறிக்கை வரைய றுக்கிறது.

தேவையுள்ள மாநிலங்கள் (nee ded states) என்பதைத் தீர்மானிக்க “வளர்ச்சியின்மை’’ யை (under development) அளவுகோலாக இரகு ராம்ராஜன் குழு வைத்துக் கொள்கிறது. வளர்ச்சி குறித்த 10 முக்கிய அளவுகோல்களைக் கொண்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டை (underdevelopment index) இக்குழு வரையறுத்தது.

1) மாநிலத்தின் தனி நபர் மாத நுகர்வுச் செலவு 2) கல்வி நிலை 3) உடல் நலம் 4) குடும்பத் தில் உள்ள வசதிகள் 5) வருமை விகிதம் 6) பெண் கல்வி 7) மாநில மக்கள் தொகையில் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தொகை விகிதம் 8) நகரமயமாக்கல் விகிதம் 9) மக்களிடையே நிதி ஆதாரப்பகிர்வு 10) சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகிய பத்து கூறுகளில் ஒரு மாநிலம் எந்த அளவுக்கு பின் தங்கியிருக் கிறதோ அந்த அளவுக்கு அதற்கான வளர்சியின்மைக் குறியீடு வழங்கப்படும்.

இந்த வளர்ச்சியின்மைக் குறி யீட்டின் அடிப்படையில் இந்தியா வில் உள்ள மாநிலங்களை மூன்று தொகுதிகளாக இரகுராம் ராஜன் குழு வகைப்படுத்துகிறது.

முற்றிலும் எந்த வளர்ச்சியும் இன்மை என்பதை 1 ஆகக் கொண்டு இந்த குறியீட்டு அளவு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 0.6 க்கு மேல் வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் “மிகவும் வளர்ச் சிக்குறைவான ”மாநிலங்கள் (least developed) என்றும், 0.4 க்கும் 0.6க் கும் இடைப்பட்ட வளர்ச்சியின் மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் “வளர்ச்சிக் குறைவான’’ (least developed) மாநிலங்கள் என்றும் 0.4க் குக் கீழ் வளச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் ஒப்பீட்டள வில் வளர்ந்த (relatively developed) மாநிலங்கள் என்றும் வகைப் படுத் தப்படுகின்றன.

பீகார், மத்தியப் பிரதேசம், இரா சஸ்தான், உத்திரப்பிரதேசம் உள் ளிட்ட பெரும்பாலான வடமாநி லங்கள் மிகவும் வளர்ச்சிக் குறை வான மாநிலங்கள் என்றப் பட்டிய லில் வருகின்றன. இவற்றிக்கு நிதித் தேவை அதிகம் என மதிப்பிடப் பட்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண் டும் என்பதே இரகு ராம்ராஜன் குழுவின் பரிந்துரை.

இவ்வகைப்பாட்டின்படி குச ராத், ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் கூட வளர்ச்சிக்குறை வான மாநிலங்கள் எனப் பட்டியலி டப்பட்டு அவற்றிக்கு தமிழ் நாட்டைவிட கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப் பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு வளர்ச்சி யின்மைக் குறியீட்டில் 0.34 பெற்று ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலம் எனற கிரீடம் சூட்டப்பட்டு நிதி ஒதுக்கிட்டில் கீழ் நிலையில் வைக் கப்படுகிறது.

கல்வி, சாலை வசதி உள்ளிட்ட வற்றில் பிற மாநிலங்களைவிட சொந்த முயற்சியில் முன்னேற்றம் கண்டதால் தமிழ் நாட்டிற்கு இரகுராம் ராஜன் குழு அளிக்கிற பரிசு இது.

வரி வசூலில் தமிழ்நாடு இந்தி யாவின் பெரும்பாலான பிற மாநி லங்களை விட திறன் பெற்ற மாநில மாகும். இங்கேயும் வரி ஏய்ப்பவர் கள் உண்டு என்றாலும் ஒப்பீட்டள வில் குறைவு.

தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகக் கூறப்படும் குசராத், மகாராட்டிராவை விட தமிழ் நாட்டில் வரி வசூல் விகிதம் அதிக மாகும். 2012-2013 ஆம் நிதியாண் டில் தமிழ் நாட்டிலிருந்து இந்திய அரசு அள்ளிச்சென்ற வரி வருவாய் ஏறத்தாழ 85 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது இந்திய அரசின் ஒட்டு மொத்த வரி வசூலில் 14.12 விழுக் காடு ஆகும்.

ஆனால் இந்திய அரசு கடந்த நிதி ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக் கிய வரிப் பங்கீடு மற்றும் மானியங் களின் மொத்த அளவு ஏறத் தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இந்திய அரசு திரட்டும் மொத்த நிதித்தொகையில் தமிழகத்திற்கு வழங்குவது 4. 18 விழுக்காடே ஆகும். அதாவது 14. 12 விழுக்காடு எடுத்துக் கொண்டு வரிப்பங்காக 4.18 மட்டுமே வழங்குகிறது.

13 ஆவது நிதி ஆணையம் இந்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிடு செய்யும் மொத்த நிதித் தொகையில் தமிழ்நாட்டுக்கு 5.01 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. திட்டக் குழு 4. 46 விழுக்காடு பகிர்ந்தளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால் இந்திய அரசு தமிழகத் திற்கு அளித்ததோ 4. 18 விழுக்காடு தொகை.

இதையும் ஏறத்தாழ பாதியாகக் குறைத்து 2.51 விழுக்காடு தொகை யை தமிழ்நாட்டிற்குக் கொடுத் தால் போதும் என இரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஒப்பீட்டளவில் வளர்ச்சிய டைந்த மாநிலங்கள் என்றப் பட்டி யலில் தமிழ்நாட்டை விட முன்னே உள்ள கேரளாவுக்கு செய்த நிதி ஒதுக்கீட்டையும் விட இது குறை வானது. இதற்கு முன்னர் மாநிலங் களுக்கு இடையில் நிதிப் பகிர்வு வழங்குவதற்காக உருவாக்கபட்ட காட்கில் வழிமுறை (பார்முலா), காட்கில்- முகர்ஜி வழிமுறை ஆகிய அனைத்தையும் விட இரகுராம் ராஜன் குழு வழிமுறை தமிழகத் தைப் பெரிதும் வஞ்சிக்கக் கூடியது.

இந்திய அரசு தமிழ்நாட்டி லிருந்து அள்ளிச்செல்லும் வரி வருமானத்தில் பாதியையாவது தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்வதற்கு பதிலாக இருக்கும் குறைவான ஒதுக்கீட்டையும் இன்னும் பாதி யாகக் குறைப்பது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கில் இன் னும் ஒரு கொடிய நடவடிக்கையாகும்.

பீகார் மாநிலம் தங்கள் மாநி லத்தை மிகவும் பின் தங்கிய மாநில மாக ஏற்று கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனக் கோரியதை அடுத்தே இக் குழு அமைக்கப் பட் டதாக இதன் நோக்க அறிக்கைக் கூறுகிறது. அது உண்மையானால் நடுவண் அரசு தன்னுடைய நிதி யிலிருந்து சிறப்பு நிதி ஒதுக்கீடு பீகாருக்கு வழங்க வேண்டுமே அல்லாது தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வழங்கும் நிதியிலி ருந்து எடுத்து வழங்கக் கூடாது.

தவிரவும் தொழில் வளர்ச்சி , கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் ஒப் பீட்டளவில் முன்னே நிற்கும் தமிழ கத்தில் பீகார், ஜார்கண்ட், ஒரிசா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து அலை அலையாகக் குடியே ரும் வெளியாரால் ஏற்படும் கூடுதல் சுமை என்பது கணக்கில் கொள் ளப்படவில்லை. பின் தங்கிய மாநி லங்களின் பின் தங்கியத் தன்மையை இதன் மூலம் தமிழகமும் பகிர்ந்து கொள்ளு கின்றது. இதற்கான கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்கின்றது.

இந்த சிக்கலை 14 ஆம் நிதி ஆணையம் தனது விசாரணை வரம்பில் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இரகுராம் ராஜன் குழு இப்படி ஒரு பிரச்சினை இருப்பதையே கண்டுகொள்ளவில்லை.

ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நிறுவப் பட்டுள்ள திட்டக் குழு மாநிலங் களை ஆதிக்கம் செய்யும் இந்திய அரசின் ஒரு உறுப்பாக செயல்படு கிறது. அதுவும் இப்போதுள்ள திட்டக் குழு தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா இந்தியப் பேரரசர் போலவே அதிகாரம் செய்கிறார். திட்டக் குழு ஒதுக்கீடு பற்றி விவாதிப்பதற்கு இந்திய வளர்ச்சி மன்றமாவது இருக்கிறது. அதில் மாநில முதலைமைச்சர்தன் தரப்பு நியாயங்களை வலியுறுத்த முடியும்.

ஆனால், இரகுராம் ராஜன் குழு பரிந்துரை மீது மாநில அரசுகள் கருத்துக் கூறி மாற்றங்கள் ஏற்படுத் துவதற்கு வழியேது மில்லை. எல்லா வகையிலும் இரகுராம் ராஜன் குழு பரிந்துரை தமிழகத் திற்கு எதிரானது. இதனை இந்திய அரசு ஏற்கக் கூடாது. அதன் பரிந்து ரைகளை எந்த வடிவிலும் செயல் படுத்தக் கூடாது.

இந்திய அரசு தனது நயவஞ்ச கத்தை தொடருமேயானால் தமிழ கத்திலிருந்து இந்திய அரசு வரி வசூல் செய்வதை தடுப்போம் என தமிழக அரசும் மக்களும் களம் இறங்கவேண்டிய நேரமிது.

Pin It

ஒரு தேசிய இன மக்கள் வாழுகின்ற தாயகப் பகுதி யில், பிற தேசிய இன மக்களை வேண்டுமென்றே மிகை எண்ணிக்கையில் குடியமர்த்தி, அத்தாயகத்தை சீர் குலைத்து சிதைக்கின்ற போக்கு, உலகெங்கும் ஆதிக்க இனவாதிகளிடம் காலந்தோறும் வெளிப்பட்டு வரு கின்ற நடவடிக்கையாகும்.

அவ்வகையில், பாலத்தீனத் தாயகத்தை சிதைக்கும் வகையில் நடைபெறுகின்ற யூதக் குடியேற்றங்களும், தமிழீழத் தாயகத்தை சிதைக்க நடைபெறும் சிங்களர் குடியேற்றங்களும், உலகெங்கும் உள்ள சனநாயக சக்திகளால் வன்மையாக கண்டிக்கப்படுகின்றன.

ஆனால், உலகின் மிகப்பெரும் சனநாயக நாடு என சொல்லிக் கொள்ளும் இந்திய அரசு, இந்தியத் துணைக் கண்டமெங்கும் உள்ள பல்வேறு தேசிய இனத் தாய கங்களை திட்டமிட்டு சீர்குலைத்து வரும் அபாயகர மானப் போக்கு, சனநாயக சக்திகளால் பெரிதும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

ஆரியத்தின் அரச வடிவமாக நிற்கும் இந்திய அரசு, தேசிய இனங்களின் தாயகங்களை சிதைப்பதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு பல்லாண்டு காலமாக செயல்பட்டு வருவது கண்கூடு.

இந்தி பேசாத மக்கள் வாழும் மாநிலங் களில் இயங்கும் நடுவண் அரசு அலு வலகங்களில், இந்திக்காரர்களை யும், பிற மொழிக்காரர்களையும் வேண்டு மென்றே அதிகளவில் பணியமர்த்துவது, இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களுக் குச் செல் வதை ஊக்குவிக்கும் வகையில் புதிய புதிய தொடர் வண்டிகளை அறிமுகப்படுத்துவது என இந் நடவடிக்கைகள் இந்திய அரசால் திட்டமிட்டு நடத் தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் இயங்கும் சென்னை ஆவடி நடுவண் அரசு பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலை (Heavy Vehicles Factory - H.V.F.), திருச்சி பொன்மலை - துப்பாக் கித் தொழிற்சாலை, திருவெறும்பூர் - மிகுமின் தொழிற் சாலை உள்ளிட்ட பல்வேறு இந்திய அரசு நிறுவனங் களில், முடிவெடுக்கும் தலைமைப் பொறுப்புகளிலும், அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளாகவும் பிற மாநிலத் தவர்களே அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அண்மையில், புதுச்சேரியில் இயங்கும் நடுவண் அரசு தன்னாட்சி மருத்துவமனையான ஜிப்மரில் செவி லியர் பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு நடை பெற்று, அதன் முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளி யானது. அதில், தேர்வான 463 பேரில், 323 பேர் கேரளாவைச் சேர்ந்த மலையா ளிகள் ஆவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து வெறும் 140 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டனர். அதிகளவில் மலையா ளிகள் தேர்ச்சி பெற்ற கேரளாவின் திருவனந்தபுரம் தேர்வு மையத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப் பட்டவர், ஜிப்மர் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியான உன்னிக் கிருஷ்ணன் என்பவர் ஆவார். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

இவ்வாறு, தொடர்ச்சியாக, நடு வண் அரசு அலுவலகப் பணி களின் மூலம், பிற மாநிலத்தவரை அதிகளவில் தமிழகத்தில் குடியமர்த்தும் பணியை நெடுங்காலமாக இந்திய அரசு செய்து வருகின்றது.

அசாம், மகாராட்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங் களில் இதற்கு கடும் எதிர்ப்புகள் அவ்வப்போது எழுந்து வருகின் றன.

புதிதாக உருவாக்கப்படவுள்ள தெலுங்கானா மாநிலத்தில் சீமாந் திரா உள்ளிட்ட பிற மாநிலத்தவ ருக்கு அரசுப்பணியில் இட மில்லை என தெலுங்கானாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அனுமந்த ராவ் திருப்பதியில் 17.08.2013 அன்று தெரிவித்தார்.

அசாமில் கடந்த 14.09.2013 அன்று, தலைநகர் கவகாத்தியில் மாநிலத்தின் அனைத்து அரசுப் பணிகளிலும் அசாம் மாநிலத்த வருக்கு 100 விழுக்காட்டு இடங்க ளையும் ஒதுக்கக் கோரி அனைத்து அசாம் மாணவர் சங்கம் , பெருந்திரள் போராட்டத்தை நடத்தியது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழகத்தில் இயங்கும் நடுவண் அரசுத் தொழிற்சாலை களிலும் அலுவலகங்களிலும் தமி ழர்களுக்கு 85 விழுக்காட்டு இடங்களை ஒதுக்க வேண்டுமெனக் கோரி வருகிறது.

ஒருபுறத்தில், உயர் அரசு அதிகாரிகளாக பிறமாநிலத்தவரைத் பணியமர்த்தும் இந்திய அரசு, மறுபுறத்தில் தொடர் வண்டித் துறையின் மூலம் பீகார், ராஜஸ் தான், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநி லங்களைச் சேர்ந்த சாதாரண மக்களை தமிழகத்திற்கு தங்கு தடையின்றி வந்து போகும் வகையில் புதிய தொடர்வண்டிகளை அறிமு கப்படுத்துகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு நடு வண் தொடர்வண்டித்துறை வரவு செலவுக் கணக்குத் திட்டத் தில், தமிழகத்திற்கு 10 விரைவு தொடர் வண்டிகளும், 4 பயணிகள் தொடர் வண்டிகளும் அறிவிக் கப்பட்டன. அதில், தமிழகத்திற் குள்ளே தமிழக மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாநிலத்திற்குள்ளான தொடர் வண்டிகளைவிட, கேரளா, ஹைத ராபாத், கொல் கத்தா, ராஜஸ்தான், பெங்களுர், ஒரிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வந்து போகும் தொடர்வண்டி களே அதிகம். வெளிமாநிலத்த வர்கள் தங்குதடையின்றி தமிழகம் வந்து போவதற்கான, இந்திய அரசின் வெளிப்படையான ஏற் பாடு இது! ஒவ்வொரு வரவு செலவுக் கணக்குத் திட்டத்திலும் இப்போக்குத் தொடர்கிறது.

இவ்வாறு, தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் தங்கு தடையின்றி தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யும் இந்திய அரசு, தேசிய இனத் தாயகமான மாநிலங்களை பிற தேசிய இனத்தவர்களின் குடியேற் றங்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை சரியே என கொள்கையள வில் ஏற்றுக் கொண்டுள்ள அரசு தான்.

1948ஆம் ஆண்டு காசுமீரை இந்திய அரசு ஆக்கிரமித்த போது ஐ.நா.வில் இது குறித்து பாகிஸ்தான் நாடு சிக்கல் எழுப்பியது. காசுமீரின் சிங்கமென அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா அப்போது, காசுமீரை இந்தியா விடுவிக்க வேண்டுமெனக் கோரி வந்தார். ஐ.நா.வையும், ஷேக் அப்துல்லாவையும் சமதானப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருந்த இந்திய அரசு, காசுமீரை காசுமீரி களின் தேசிய இனத் தாயகமாக பகுதியளவில் அங்கீகரித்தும், அத் தாயகத்தை இந்தியாவின் ஆதிக்க தேசிய இனங்கள் சிதைத்து விடாமல் பாதுகாக்கும் வகையிலான சில விதிகளைக் கொண்டும் இந்திய அரசமைப்புச் சட்ட விதி 306-கி என்ற சட்டப்பிரிவை உருவாக்கியது. அதுவே பின்னர், இந்திய அரசமைப்புச் சட்ட விதி 370 ஆனது.

காசுமீரில் பிற மாநிலத்தவர் (தேசிய இனத்தவர்) சொத்து வாங்க தடை விதிப்பது, 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் கூட காசுமீரி அல்லாத பிறருக்கு வாக்குரிமை மறுப் பது, காசுமீர் பல்கலைக்கழ கங்கள் மற்றும் கல்லூரிகளில் பிற மாநிலத் தவர் கல்வி கற்க தடை விதிப்பது உள்ளிட்ட சில பலன்களை இச் சட்டத்தின் மூலம் காசுமீர் மாநி லத்திற்கு அளித்த்து இந்திய அரசு. இச்சட்டத்தின்படி, காசுமீரி பெண் ஒருவர் பிற மாநிலத்தவரை திரும ணம் செய்து கொண் டால், அப்பெண்ணால் கூட காசுமீரில் நிலம் வாங்க முடியாது.

இதே போல, பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் அரு ணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், அந்தமான் - நிக்கோபர் தீவுகள், நாகலாந்து ஆகிய பகுதி களில், பழங்குடியினத்தவரின் வாழ் வாதாரங்களைப் பாதுகாக்கும் வகையில் பிற மாநிலத்தவர்கள் அங்கு நிலம் உள்ளிட்ட சொத்து கள் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதை இந்திய அரசு ஏற்றக் கொண்டுள்ளது.

ஆக, கொள்கையளவில் இந்திய அரசு, தனது இறையாண்மைக்கு உட்பட மாநிலம் எனப்படுகின்ற தேசிய இனத் தாயகங்களை பாதுகாக்க, அம்மாநிலங்களில் பிற மாநி லத்தவர்கள் சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும் என்ற விதியை ஏற்றுக் கொண்டுள்ளது. அதை தமிழகத்திற்கும் செயல் படுத்த வேண்டுமென்பதுவே நமது கோரிக்கை!

தமிழகத்தில் பிற மாநிலத்தவரை குடியமர்த்தவதை ஊக்குவிக்கின்ற இந்திய அரசு, வெளியாரை வெளியேற்றுவோம் என நாம் கூறுகின்ற முழக்கத்தையும் கூட கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அசாமில் அதை செயல்படுத்தியும் காட்டியது.

அசாம் மண்ணில், 1970களில் நடைபெற்ற மிகை எண்ணிக் கையிலான இந்திக்காரர்களின் குடியேற்றத்தை, அசாம் மாணவர் இயக்கங்கள் வன்மையாக எதிர்த் தன. போராட்டம் தீவிரம் பெற் றதைத் தொடர்ந்து, 1985 ஆகத்து 15 அன்று, இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி முன்னிலையில் மிகை எண்ணிக்கையில் அசாமில் குடியேறியவர்களை வெளியேற்று வது என ஒப்பந்தம் கையெழுத் தானது. 1971க்குப் பிறகு அசாமில் குடியேறிய பிற மாநிலத்தவர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

காசுமீர் - அசாம் மாநிலங்களில், தமது தாயகத்தைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்ற முனைப்பும், விழிப்புணர்வும் அரசியல் கட்சி, இயக்கங்கள், மக்கள் என அனைத்துத் தரப்பிலும் தீவிரமாக எழுந்ததன் விளைவாகவே இந்திய அரசு இதற்கான சட்டதிட்டங் களை வகுக்கப் பணிந்தது. தமிழகத் திலும், இதற்கான விழிப்புணர்வும், இந்திய அரசை அதற்குப் பணிய வைக்கும் வகையிலான போராட்டங்களும் வெடித்தால் மட்டுமே நம் தாயகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். தாயகத்தை சிதைவிலி ருந்து காப்பாற்ற முடியும்!

Pin It