காலையில் வந்த வியாபாரி
ருசியான நண்டு விலை
ரூபாய் 200 என்றார்

 இயலாமையை வெளிக்காட்டாமல்
 வெள்ளிக்கிழமையைச் சொல்லி
 வியாபாரியை விரட்டி விட்டாள்
 என் மனைவி

ஆசையோடு நின்றிருந்த
என் மகளின்
சிவந்த முகம்
கருத்துப்போனது

 எனக்கோ மனம்
 கனத்துப் போனது

இரவு நண்டு பார்சலோடு
வீடு திரும்பிய நான்
நண்பன் வாங்கிக் கொடுத்ததாக
சொன்னேன்.

 ருசியில் கிடைத்த
 மகிழ்ச்சி மகளுக்கு
 அதில் பங்கு கிடைத்த
 மகிழ்ச்சி மனைவிக்கு

எப்படியெல்லாம் பொய் சொல்லி
சமன் செய்ய வேண்டியிருக்கிறது
என்ற உறுத்தல் எனக்கு.

   - இரா.ஜோதிராம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.