ஒரு தவிர்த்தலின் நிமித்தம்
எட்டிப் போடுகிறாய் நடையை
உனது நடையற்ற நடை
காட்டிக் கொடுக்கிறது உன்னை

ஓர் அச்சத்தின் பாற்பட்டு
வேகப்படுத்துகிறாய் பேச்சை
உனது பேச்சற்ற பேச்சு
மாட்டி வைக்கிறது உன்னை

ஒரு பிடிவாதத்தின் உந்துதலில்
மறுத்து எறிகிறாய் கவிதையை
உனது மறுப்பற்ற மறுப்பு
காத்தளிக்கிறது உன்னை
 
ஒரு நிர்ப்பந்தத்தின் நுனியில்
சலித்துச் சொல்கிறாய் பதில்களை
உனது சலிப்பற்ற சலிப்பு
உணர்த்தி விடுகிறது உன்னை

ஒரு சமூக வேலியின் முள் குத்தலில்
ஒதுங்கி மாற்றுகிறாய் பாதையை
உனது விலகலற்ற விலகல்
சுட்டெரிக்கிறது என்னை

- எஸ்.வி.வேணுகோபாலன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.