கனவின் தடயங்களுக்குள் புகுந்து
கலைக்கிறது கடிகாரத்தின் மணியோசை

கடன் வாங்கி ஏய்த்திருந்தவர்கள்
சிக்க இருந்த பொழுதில்
காதல் முத்தம் பரிமாற இருந்த கணத்தில்
தேர்வில் முதல் மதிப்பெண்
அறிவிக்கப்படும் அந்த நிமிடத்தில்

துளைத்துக் கொண்டுவந்து எழுப்புகிறது
தூக்கத்தில் கிடப்பவனை

குழப்ப கதாபாத்திரத்திலிருந்து வெளியேறி
அன்றாடத்தின் வலையில் வந்து விழ
நேரம் கொடுக்காமல் -
கனவுக்குள்ளிருந்தே நீள்கின்ற
கரங்களுக்கும் பிடிபடாமல் -
அடித்துக் கொண்டிருக்கிறது ஓயாமல்,
அவரவரும் தத்தமக்கே
வைத்துக் கொண்ட அலாரம்.....

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.