உஷாதீபனின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பாக ‘திரை விலகல்’ வெளிவந்துள்ளது. மத்திய தர வர்க்கக் குடும்பங்களி லும், அலுவலகங்களிலும், நிக ழும் சம்பவங்களை மையமாக வைத்து சுவையான நடையில் கதை சொல்லும் அவரது பாணி இந்தத் தொகுப்பில் உள்ள பதி னெட்டு சிறுகதைகளிலும் காண முடிகிறது.

முன்னுரையில் ஏ.ஏ.ஹெச். கே. கோரி குறிப்பிட்டுள்ள ஒரு கோட் பாடு ‘கருத்து முக்கிய மல்ல எழுத்தாளனின் எழுத்து ஆளுமை, வார்த்தைப் பிரயோ கம், மொழி ஆதிக்கம், தனித் தன்மை இவைதான் முக்கியம்’ என்பது இந்த நூலுக்குப் பொருந் தும். ஆனால், இலக்கியத்திற்கு பொருந்துமா? சமூகம் சார்ந்த கவலை, மனிதாபிமானம், வாழ் வியலின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் சித்தரிப்பு என்பதெல்லாம் வேண்டாமா?

இந்தத் தொகுப்பில் உள்ள சில கதைகளில் இந்த அம்சங்கள் உள்ளதை மறுக்க முடியாது. தெருவில் போகும் உப்பு வியா பாரியைக் கணவன் அழைத்து விட்டதால், உடனடித் தேவை இல்லாவிட்டாலும் உப்பு வாங் கும் மனைவி - (கடல் மல்லிகை) தெருவில் துணிகள் தேய்க்கும் எளிய குடும்பத்து சிறுமி மீது சினம் காட்டும் மனிதர் (நா) என்ற சித்தரிப்புகள் உள்ளன.

மின் வெட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கும் ‘தேக்கம்’, அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டப் பின்னணியில் வெளிப்படும் ‘தோழமை’ போன்ற கதைகளும் சிறப்பாக உள்ளன.

‘குதிரை’ என்ற தலைப்பும் அதில் பெண்களைப் பற்றிய உடல் சார்ந்த வர்ணனைகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். நூலகத்தில் உள்ள புத்தகங்களை ‘சரஸ்வதியின் குழந்தைகள்’ என குறிப்பிட்டிருப்பதும் முதியோர் இல்லங்களில் உள்ள சூழலை விளக்கும் ‘அப்பாவின் நினைவு தினம்’ கதையும் சிறப்பானது.

நீரோட்டம்போல் நடை இருப்பதால் ஒரே மூச்சில் படிக்கலாம்.

வெளியீடு: உதயக்கண்ணன், 10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011.

விலை ரூ 80.

Pin It