“வேர்களைத் தேடி” என்ற தலைப்பில், சிறுகதைகளின் தொகுப்பொன்று, அதிலும் பன்னாட்டுக் கதைகளைக் கொண்ட மொழி பெயர்ப்பு நூல் ஒன்று கவிஞர் எழில்மதி எழுதி வெளிவந்துள்ளது மகிழ்வான செய்தி. என்னோடு அரசு பணியில் சக நண்பராக பணியாற்றியவர். நான் பணியாற்றிய கால்நடைத்துறை களப்பணிக்கும், எழுத்துப் பணிக்கும் அதிலும் சிறந்த எழுத்தாளாராக ஆவதற்கும் என்ன சம்பந்தம் என வினா எழுவது இயல்பே! ஆனால், மிகச் சிறந்த எழுத்தாளர் களாக ஆகியுள்ளார்கள் என்பது தான் உண்மை. புகழ்பெற்ற மலையாள கதைகளை தமிழில் மொழி பெயர்த்து சிகரம் தொட் டவர் குறிஞ்சி வேலன் - சாகித் திய அகடமி விருது பெற்றவர், சிறப்பான சிறுகதைகள், நாடகங் கள் என எழுதி சிறுகதை எழுத் தாளர் உலகில் தனக்கென உயர் இடம் பெற்ற ஜெயந்தன் போன் றோர் கால்நடைத்துறை களப் பணியாளர்கள்தான். அந்த வரிசையில் கவிஞர் எழில்மதி யும் (கோ. இராச்சந்திரன்) வந்து நிற்பது வரவேற்க வேண்டிய தாகும்.

“வேர்களைத் தேடி...” என்று இந்த சிறுகதைகள் தொகுப்பில் 10 சிறுதைகள் உள்ளன. “வேர் களைத் தேடி...” என்ற இந்திய நாட்டுக் கதையைத் தவிர மற்றவை யாவும் பன்னாட்டுக் கதைகள்.

வேலைக்காரியின் மகள் (அர்ஜென்டினா), ஆரஞ்சுப் பழங்கள் (சீனா), அடிமை வாழ்வு (டென்மார்க்), திருமதி பக்கில்டைடின் புலி (இங்கி லாந்து), முதியவர்கள் இல்லமும் உள்ளமும் (பிரான்ஸ்), நாணயம் கற்பித்த நாணயம் (ஜெர்மன்), போர் - (இத்தாலி), கலையும் பணியும் (இரஷ்யா), மனித இயந்திரம் (அமெரிக்கா).

இந்த சிறுகதைகள் அனைத் தும் அந்தந்த நாட்டு மொழி களில் எழுதப்பட்டவை. அவை அனைத்தும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, பின் எழில் மதியால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டவை. இந்த சிறு கதைகளின் சிறப்பே இவை யனைத்தும் பல பத்தாண்டு களுக்கு முன்னால் எழுதப் பட்ட வை. ஒரு சில கதைகள் நூறாண்டு களுக்கு முன்னால் எழுதப் பட்டவை! ஆனால், அத்தனை கதைகளும் இப்போதும் இனிக் கிறதே, அதுதான் அதிசயம். கதை கள் பழமையாய் இருந்தால் என்ன? அவை அனைத்தும் பட்டை தீட்டப்பட்டவை. அதோடு சரளமான மொழிப் பெயர்ப்பும் வாசகனை சோர் வின்றி படிக்கத் தூண்டுகிறது. ஆசிரியர் எழில்மதி சிரமம் எடுத்து அக்கறையோடு மொழிப் பெயர்த்துள்ளதைப் பாராட்டவே வேண்டும்.

“வேலைக்காரியின் மகள்” என்ற மூலக்கதை லிவியானா ஹேக்கர் என்ற அர்ஜென்டினா பெண் எழுத்தாளர் எழுதியது.

லூசியானா பணக்காரக் குடும் பதைச் சேர்ந்த சிறுமி. ரோசரா ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி. இவளின் தாய் லூசியா னாவின் வீட்டில் வேலை செய் யும் வேலைக்காரி. ஆனால் லூசி யானாவும், ரோசராவும் ஒரே வகுப்பில் படிக்கும் நட்பான பெண்கள், நெருக்கமாகவே பழகுகிறார்கள். வேலைக்காரி தன் பெண் ரோசரா, பணக்கார பெண்ணான லூசியானாவோடு நெருங்கிப் பழகுவது பிடிக்க வில்லை. அடிக்கடி மகளை எச்சரிக்கிறார். இந்த எச்சரிக்கை உண்மையாகி விடுவதுதான் கதையின் உச்சம். பணக்கார பெண்ணான லூசியானா வீட்டில் நடந்த ஒரு விழாவில் அவள் தன் நெருங்கிய தோழியான ரோசரா வை எப்படி அவமதிக்கிறார் என்பதை அர்ஜன்டினா பெண் எழுத்தாளர் மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி யுள்ளார். ஆதிக்க உணர்வு வர்க்க உணர்வு சிறுமி களிடமும் வடிவம் எடுக்கும் போலும்.

“ஆரஞ்சுப் பழங்கள்” எனும் சீன நாட்டுக் கதை. இதன் ஆசிரியர் ‘லோசூ’ (1903-1938) ஒரு பெண் எழுத்தாளர், புகழ் பெற்ற எழுத்தாளர்தான். ஆயி னும் தன்னுடைய 35ஆம் வயதில் குழந்தைப் பேற்றின்போது மரணமடைந்தார்.

சீனாவில் பிரபுக்கள் வாழ்ந்த காலத்தில் வர்த்தக சூதாடிகளால் விவசாயிகள் எப்படி சுரண்டப் பட்டார்கள் என்பதை விளக்கும் கதைதான் ‘ஆரஞ்சுப் பழங்கள்’. கடன்காரனாக வாழும் விவசாயி - சிறு ஆரஞ்சுப் பழத் தோட்டம் வைத்துள்ளவன். அவனிடம் ஆரஞ்சுப் பழங்களை வாங்கி கொள்ளை லாபத்துக்கு விற்கும் வர்த்தக சூதாடி, விவசாயியின் கடன் நெருக்கடியைப் புரிந்து கொண்டு, அநியாய விலையில் ஆரஞ்சுப் பழங்களை விலை பேசி வாங்கி விடுகிறான், விற்று விட்ட பிறகு தன் பேரன் கேட்கும் இரண்டு ஆரஞ்சுப் பழங்களை பறித்துக் கொடுக்கக் கூட அந்த விவசாயிக்கு உரிமை இல்லாது போகிறது. திருடன் என்கிற அவப் பெயருக்கு ஆளாகிறன்; அவமானப்படுகிறான். கதையின் முத்தாய்ப்பு, ஆறு வயது சிறுவன் தன் தாத்தாவின் சங்கடத்தை அறிந்து கீழே விழுந்த அந்த இரண்டு ஆரஞ்சுப் பழங்களை எடுத்து சுவைக்காது, தள்ளி விட்டு தாத்தாவோடு புறப்படு வது தான் எடுப்பான காட்சி. வியாபாரியின் முகத்தில் கரி பூசும் காட்சி.

கலையும் பணியும் என்ற சிறு கதை பவ்வோவிச் செக்கோவ் (1860-1904) எழுதியது. புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் எழுதிய இந்தக் கதை “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை”-என நாம் பேசுவோமே அந்தக் கருத்தை பிரதிபலிக்கும் கதை.

ஒரு டாக்டர் இலவசமாக ஒரு ஏழைக்கு சிகிச்சை செய்கிறார். ஏழையும் குணமடைகிறான். டாக்டருக்குப் பணம் கொடுக்க ஏழையால் இயலவில்லை. ஆகவே ஒரு தொழில் நுணுக்கம் வாய்ந்த ஒரு வெண்கல சிலை ஒன்றை தருகிறான். அவனின் தந்தை உயிர் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட பொருட்களை தேடி அலைந்து சேகரித்து செல் வந்தர்களுக்கு விற்பது வழக்கம். தந்தை இறந்த பிறகும், அதை நினைவாகக் காப்பாற்றி வந்த வன் இப்போது டாக்டருக்குக் கொடுக்க விரும்புகிறான். டாக்டரோ வாங்க மறுக்கிறார். அவருக்கு அதன் கலை அம்சம் புரியவில்லை. அது ஏதோ ஆபாசச் சிலையாக உள்ளது என மறுக்கிறார். இருந்தாலும் அந்த ஏழை அதை அவரின் மேஜை மீது வைத்து விட்டு வெளியேறு கிறான். ஆனால் அவனுக்கு ஒரு கவலை, இதே போல வேறு ஒரு சிலையும் சேர்த்து கொடுத்திருந் தால் ஜோடியாக இருந்திருக்கும் என்ற கவலை அவனுக்கு.

இந்த சிலையை டாக்டர், தான் வைத்துக் கொள்ள விரும் பாது, ஒரு வக்கீலிடம் சேர்த்து விடுகிறார். பிறகு அந்த வக்கீலும் தான் வைத்துக் கொள்ள விரும்பாது வேறு ஒருவரிடம் தள்ளி விடுகிறார், அவரோ இதை பழைய கலைப் பொருளை வாங்கி விற்கும் ஒரு மூதாட்டி தெருவில் குரல் கொடுத்து வர அவரிடம் இதை கொடுத்து விடுகிறார். அந்த மூதாட்டி அந்த வாலிப ஏழை யின் தாய்தான். இந்தச் சிலை யைப் பார்த்தவுடன் பூரிப்பு அடைகிறான். டாக்டரிடம் ஜோடியாக வெண்கல சிலை களைக் கொடுக்காத வருத்தம் அவனுக்கு இருந்ததல்லவா! ஆகவே அதை எடுத்துக் கொண்டு டாக்டரிடம் ஒப்படைத்துவிடு கிறான், டாக்டரிடம் கட்டாயப் படுத்தி வைத்து விட்டான். டாக்டரின் நிலை என்ன? இந்த அதிர்ச்சியால் அவருக்குப் பேசத் தான் முடியவில்லை.

“மனித இயந்திரம்” எனும் சிறுகதை ஓ ஹென்றி (வில்லியம் சிட்னி போர்டர்) (1867ஆம் ஆண்டு பிறந்தவர்) எழுதிய நகைச்சுவையான கதை. மனிதனுக்குள்ள மறதியை விளக்க இது ஒரு தலை சிறந்த கதை.

இப்படி ஒவ்வொரு சிறு கதையும் ஒரு புதிய செய்தியைச் சொல்லுகிறது. டீடனகளை படிடன என்பதுபோல பழைய கதை களாக இருந்தாலும் இன்றும் மின்னுகின்றன. வாசகர்கள் இந் நூலைப் படிப்பது அவர்களின் நேரம் பயனுள்ள வகையில் கழிந்தது என்று அர்த்தம்.

புத்தகத்தின் அட்டையும் ‘வேர்களைத் தேடி’ - என்ற தலைப்பைப் பொருள்பட பிரதி பலிக்கும் வகையில் ஓவியப் படுத்தப்பட்டுள்ளது. 

வெளியீடு:

வண்ணமலர்ப் பதிப்பகம்,

71/2 ஆசிரியர் குடியிருப்பு ,

பரமத்தி அஞ்சல் - 637 207

நாமக்கல் மாவட்டம்.

விலை ரூ. 100

Pin It