நீடிக்காதென்றும்
நிறுத்திவைக்க முடியாதென்றும்

கச்சிதக் கண்ணாமூச்சிக்கான
கனத்த பீடிகையுடன்
கிட்டியது அவள் நட்பெனக்கு...

அறிந்திராப் பொருள்களுள் மூழ்கி
உணர்ந்திரா அலைகள் மோத
ஊகமற்ற தவிப்பில் நான்...

கரையுடன் பிணைத்திருந்த
கட்டவிழ்த்து மிதக்கவிட்டாள்
கள்ளமற்றக் குவிச்சிரிப்புடன்
உயிர்ப்படகை...

ஊக்கமுடன் பற்றியதில்
உவகை அலைகள் மீது
உச்சகட்டக் களிப்பில் நான் இப்பொழுது...

- சாருமா

Pin It