நான் ஒரு பையன்

பறவைகளே பாருங்கள்!

நானும் பறக்கிறேன்.

வேகமாக இன்னும் வேகமாக

பறவைகளே! பறவைகளே!

இதுதானே.

இதுதானே உங்கள் சந்தோஷம்

இந்த இன்பமான அனுபவத்தை

உங்கள் சிறகுகளோடு

பகிர்ந்து கொள்வேன்.

இதயமே சொல்.

இதுபோல் ஏதும் உண்டா

உலகம் முழுவதும் மகிழ்ச்சி!?

கைகளால் இறுக்கப்

பிடித்துக் கொண்டேன்

கால்களை மேலே தூக்கிக்

கொண்டு வேகமாக...

ரொம்ப வேகமாக...

இன்னும் வேகமாக...

மலையிலிருந்து கீழே வேகமாக...

காற்றைக் கிழித்து வேகமாக...

நான் ஒரு பையன்

பறவைகளே பாருங்கள்

நானும் பறக்கிறேன்.

இதயமே சொல்.

அட, எல்லா மலைகளும்

தரையிலே முடிகிறதே.

காற்றில் படகினைப் போல

அசைந்து ஆடிச் செல்கிறேன்.

தரைக்கு வந்து விட்டேன்.

சக்கரம்

முன்னே செல்ல மறுக்கிறது.

சைக்கிளை விட்டு இறங்கி

மீண்டும் மலை உச்சிக்கு

சைக்கிளை உருட்டிக் கொண்டு

மேலே செல்கிறேன்.

மேலே எனக்காகச்

சிறகுகள் காத்துக் கொண்டிருக்கிறது...

Pin It