நாம் புதுமையை
வரவேற்பவர்கள்
நோயாக
இருந்தாலும் சரி

மரபுகளை
உடைப்பவர்கள் நாம்
ஒழுங்கீனங்களை
ஒழுங்காக்கிய
புரட்சியாளர்கள்

ஊர்சுற்றவும்
திரையரங்கம் செல்லவும்
வாகனத்தில் ஆர்ப்பரிக்கவும்
பண்டிகைகள் என்ற
பரந்த எண்ணம் நமக்கு

நமக்குத் தேவை
என்றும் இனியவை
நம் ஆதரவு
போதை
வெறியாட்டங்கள்
ஊர்சுற்றல்கள்
நடுத்தெரு கும்மாளங்கள்

வந்த கிழமைதான்
மீண்டும் வரப்போகிறது
போதையில் இருப்பதால்
பொலிவாகத் தோன்றுமோ


சு.சா.அரவிந்தன், திருநின்றவூர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It