Dogபிற்பகல் பொழுதின் தெருநாய்கள்
மனிதக் குரலெடுத்து,
அழுக்காக வேண்டியவர்களே இவர்கள் - என்று
மனிதமனு விதித்தவர்களைப் பார்த்து
ஒற்றுமையாய் ஓயாது குரைக்கின்றன.

குப்பை பொறுக்கியே தீருவேன்
என்று என்னமோ அவர்கள்
ஒற்றைக்கால் கொக்குத் தவமிருப்பதாய்
நினைத்துக்கொண்டோ, என்னவோ..

அதனால்தான் புத்திசாலிக் குப்பை பொறுக்குநர்
நீண்டதொரு கெட்டிக் குச்சியுடன்
மூட்டை தோளிலுமாய் செங்கோல் கையிலுமாய்
தெருக்களில் திரிய நேர்கிறது.

குப்பைத் தொட்டியின் மர்மங்களுக்குள்
பாதுகாப்பாய் பால்பாக்கெட்டுக்களை
விட்டுத் துழாவி எடுப்பது, இன்னொரு உபயோகம்.

புருஷன்மாரை வேலைக்கு அனுப்பிவிட்டு
இந்த டெலிவிஷனையும் ஓரங்கட்டிவிட்டு
கெக்கலி கொட்டும் சிரிப்புகளுக்கிடையே
விஷயமும், அதுவும் மற்றவர் பற்றி மட்டுமே
பேசும் ஜாலியான (எல்லோரும் அல்ல) -
மற்றவர்க்கு நரகங்களான இம்சை அரசிகள்,
அடுத்தவர்களை, குறிப்பாக
நள்ளிரவில் கருவுளைச்சல் தாங்காமல்
ஊளையிடும் நாய்களை
ஏறுதழுவுவதுபோல் எண்ணிக்கொண்டு
விரட்டியடிக்க மட்டும்
தம் புருஷன்மாரை
ஏவுவது ஏனோ? 

தேவமைந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.