"என்ன அண்ணாச்சி! உங்க ஊர்ல வெயில் எப்படி?"

"அத ஏம்பா கேக்கற, அடுப்புல வெக்காமலேயே தண்ணி கொதிக்குதுப்பா"

"உலகம் வெப்பமடையுதுன்னு டிவில சொல்றது நெசந்தான்னு இப்ப நல்லாவே தெரியுதுப்பா"

"காலைல ஒம்போது மணிக்கே வெயில் எப்படிக் கொளுத்துது?"

இது போன்ற உரையாடல்கள் இப்போது சகஜமாகிக்கொண்டிருக்கின்றன.

மே பத்தாம் தேதி தமிழகத்தின் அதிகபட்ச வெயில் தினம். நம்ம தமிழகத்தை நேரடியாக, தலைக்கு மேலே சூரியன் கடக்கும் நாள்.

புவி வெப்பமடைவது என்ற தகவலின் உண்மையை மக்கள் உணர்ந்து, இந்தக் கோடையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மே மாதம் டெல்லியின் வெப்ப நிலை 45 டிகிரி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அப்படி ஒரு நிலையை நாம் சந்தித்ததில்லை. வரும் காலம் தொலைவிலும் இல்லை. காரணம் பூமி சூடாவதுதான்.

உலக வெப்பநிலையை வருட வரிசையில் காட்டும் படம் பூமி வெப்பமடைதல் என்பது வெறுமனே வெயில் கொளுத்தி நம்மை வாட்டுவதுமட்டுமல்ல. அதற்கு மேலும் சில விஷயங்கள் நடக்கின்றன நண்பா.

துருவப் பனி உருகுது, இமயமலை பனி உருகுது, கடல்மட்டம் உயருதுன்னெல்லாம் சொல்றாங்களே? அதற்கும் காரணம் பூமி சூடாவதுதான். இதனை பல ஆண்டுகால தகவல் சேகரிப்பின் மூலமாக, விஞ்ஞானிகள் அறிந்து அறிவித்தனர்.

அறிவியல் ஆய்வுகளில் தகவல் சேகரிப்பதிலும், அதன் தொடர்பாக முடிவுக்கு வருவதிலும் சில நேரங்களில் அரிதாக கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணமாக, இமயமலையை மூடியுள்ள பனி 2035 ல் உருகிவிடும் என கணிக்கப்பட்டது. இந்த கணிப்பில் தவறு ஏற்ப்பட்டுள்ளது தெரிய வந்தது. ஆனால் இது போன்ற நிகழ்வுகளை விதி விலக்காகவே கொள்ள வேண்டும். ஏனெனில் முன்பு விஞ்ஞானிகள் கணித்துள்ளதை விட, சமீப காலங்களில் துருவப் பனி உருகுதல் / மறைத்தல் என்பது எதிர்பார்த்ததை விட வெகு வேகமாகவே நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, கடல் மட்டம் உயர்வதும், கடற்கரை ஓர நிலைகளை கடல் விழுங்குவதும், அப்பகுதி மக்களின் வாழ்நிலை பிரச்சனைக்கு உள்ளாவதும் தொடர்கதையாவதை நாம் கண் கூடாக காண்கிறோம்.

பூமியின் துருவப்பகுதிகளில் பனி உருகுதல் என்பது, புவி வெப்பமடைவதற்கு மிகச்சிறந்த சாட்சியாக உள்ளது. இதனால் கடல் மட்டம் மட்டுமே உயரும் என எண்ணிவிட வேண்டாம். உலகின் பல்வேறு பகுதிகளின் தட்ப வெப்ப நிலை பற்றி பல வருடங்களாக செயற்கைக்கோள் மூலம் பல்வேறு தகவல்களை சேகரித்து உள்ளது. அதிலிருந்து பனிப் பாறைகள் உருகுவதாலேயே, பூமி வெப்பமடைகிறது என்ற துல்லியமான ஒரு உண்மையை தெரிவித்துள்ளது. பகுதிகளிலுள்ள பனிப் பாறைகளைப் பற்றிய தகவல்களை சமீப கால 2007 அறிக்கையில் ஒரு தகவல் வந்துள்ளது. "கடந்த 10 வருடங்களில் துருவப் பகுதி பனிபாறைகள் உயரம் முன்பிருந்ததைவிட 2 .7 % குறைந்துள்ளது".

இதனடிப்படையில், கடல் மட்டம் கி.பி. 2100 ல், 28 முதல் 48 வரை உயரும் என கணித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி, அண்டார்டிகாவிலுள்ள கடல் நீர் மட்டம், சுமார் 1 .4 மீட்டர் வரை உயர்ந்துவிடும் என்று நம்மை நடுநடுங்க வைக்கும் உண்மையை போட்டு உடைக்கிறது. இப்படி பனிப்பாறைகள் உருகி, பனிப்படர்வு உருகி போவதை கிரீன்லாந்தை சுற்றியுள்ள பனிப்பாறைகளை பார்க்கும்போது நன்கு தெரிகிறது.

கோடை காலத்தில் வடதுருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளின் அளவு 2007ஆம் ஆண்டு இது வரை இல்லாத அளவு குறைந்துள்ளது. இதே நிலைதான் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளிலும் நீடிக்கிறது. இதன் மூலம் தெரிய வரும் விஷயம் ஆண்டு தோறும் பனி சுருங்குவது தெரியவருகிறது.

ஆனால் பனி சுருங்கும் அளவைத் தெரிந்து கொள்வதுதான் இதில் முக்கியமானது,.ஐரோப்பிய விண்வெளி முகமை என்ற அமைப்பு கிராயோசாட் 2 ( 2) என்ற செயற்கை கோளை, பனி சுருங்கும் அளவை தெரிந்து கொள்வதற்காக கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று ஏவியுள்ளது. இதற்கான செலவு ரூ 870 கோடிகளாகும். இது துருவப்பகுதியின் பனிப்பாறைகளை ஆய்வு செய்யும் இரண்டாவது கோள். முதலில் 2005 அக்டோபரில் அனுப்பப்பட்ட செயற்கை கோள் தோல்வி அடைந்தது. கிரயோசாட் 2இல் உள்ள சிறப்பம்சம், துருவப்பகுதிகளை அதிக பரப்பளவிலும், அதிக நெருக்கத்திலும் சுற்றி வரக்கூடிய வகையில் ஏவப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏவப்பட்ட செயற்கை கோள்கள் துருவப்பகுதிகளின் பத்து சதவிகித பரப்பை மட்டுமே கண்காணிக்க முடிந்தது. கிரயோசாட் 2 என்பது பழைய சோவியத் யூனியனில் இருந்து அனுப்பப்பட்ட ஏவுகணையின் அமைப்பில் சற்று மாற்றம் செய்து, ரஷ்யாவின் கஜகஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

பூமி மேல் படும் சூரியக்கதிர்களில் சுமார் 30 % விண்வெளிக்கே திருப்பி அனுப்பப் படுகிறது. மீதி 70 % வலி மண்டலத்தால் கிரகிக்கப்பட்டு, எதிரொளிக்கப் படுகிறது. இதில் பனிப்பாறைகள் 80 % எதிரொளிப்பதன் விளைவாக, அவை உருகாமல் தன்னிலையில் இருக்க உதவுகிறது. மேலும், பனிப்பாறைகள் பூமின் தட்ப வெப்ப சம நிலையைப் பேணிக்காக்க இந்த பனிப் பாறைகள் மிகவும் உதவுகிறது. இதனை அல்பிடோ விளைவு என்று கூறுகின்றனர். அல்பிடோ விளைவால், குறைவதால்/உருகுவதால் ,அல்பிடோ விளைவு குறைகிறது. இதனால் பனிப் பாறைகள் உருகுவது அதிகமாகும். இப்படி பனிப் பாறைகள் உருகுவதால், மேலும் அல்பிடோ விளைவு குறையும்.அதனால் மீண்டும் பனிப் பாறை உருகும்; குறையும், மீண்டும் அல்பிடோ விளைவு குறையும். எனவே இர்ஹ§ ஒரு மீளமுடியாத சுழற்சி/மீளாத்துயர்தான். உன்னால் நான் கேட்டேன், என்னால் நீ கெட்டாய் என்ற கதைதான்.

துருவப்பிரதேசப் பனியை அவை செயல்படும் விதம் குறித்து, இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று தரையை மூடியிருக்கும் பனித்தகடு/தட்டு. இது சுமார் 50,000 ச.கி.மீ பரப்பில் நிறைந்திருக்கிறது. இரண்டாவது வகை கடல் நீரின் மேல் மட்டும் பனி உறைவதால் ஏற்படும் பனிப் பாறைகள். இவை இரண்டும் வெவ்வேறு விதமாக செயல்பட்டு வெவ்வேறு விதமான கேடுகளை உண்டு பண்ணும். கடலின் மீது படிந்துள்ள பனிப் பாறைகள் உருகுவதால் உண்டாகும் நீரில் உப்பு குறைவாக இருக்கும்.அதன் அடர்வும் குறைவாகவே இருக்கும் அதனால் அது உருகும்போது அதனை ஈடு செய்ய /அந்த இடத்தை நிரப்ப வேறு இடத்திலிருந்து தண்ணீர் இதனை நோக்கி ஓடிவரும் .இதுதான் கடல் நீரோட்டம் எனப்படுகிறது. இதுபோல் தொடர்ந்து நடக்கும்போது கடலின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறது.இதனால் நிலநடுக்கோட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நீர் முடுக்கப்பட்டு, துருவப்பகுதியை நோக்கி துரத்தப்படும். இப்படிப்பட்ட நீரோட்டங்களில் ரொம்பவும் வெப்ப நிலை அதிகமான கடல் நீரோட்டம் மெக்சிகோ வளைகுடாவிலிருந்து வடதுருவத்தை நோக்கிச் செல்லும். இந்த நீரோட்டத்தால் இங்கிலாந்தை, மற்ற வடஐரோப்பிய நாடுகளைவிட வெப்பமாக வைத்திருப்பதன் முக்கியக் காரணியாகும்.

துருவப்பிரதேசத்திலுள்ள கடலின் மேற்பரப்பு பனிப் பாறைகள் உருகுவதால் புவிவெப்பமடைதலுக்கு பெரிய கேடு எதுவுமில்லை. ஆனால், கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள தரைப்பகுதியில் காணப்படும் பனித்தகடுகள் உருகி புவிவெப்பமாவதால்தான் பெரிய பிரச்சனைகள் உண்டாகிவிடுகின்றன. தரைக்குமேல் கிடக்கும் பனித்தகடு அதிக அளவு உள்ள பனிப் பாறை உருகி அந்த இடத்தை நீரால் நிரப்பிவிடும். அதனால்தான் கடல் மட்டம் உயருகிறது. இதனை அறிவியல் ரீதியாக அளவை அளக்க , இரண்டுக்கும் எவ்வளவு கடல் மேல் உள்ள பனிப் பாறைகளை துளையிட்டு கண்டுபிடித்து விடலாம்.

ஆனால் நிலப்பகுதியை மூடியிருக்கும் பனித்தகடின் கதை அப்படியல்ல. அதனால்தான் அதனை வேவு பார்க்க கிரயோசாட் 2 விண்ணில் ஏவப்பட்டது.

Pin It