தமிழர்களே தலை நிமிருங்கள்..
செம்மொழியான தமிழ்மொழி
கல்விமொழியாய் இல்லையென
கவலையை விடுங்கள்.
உலக பணக்காரானாய் தமிழனும்
தடம் பதிக்கிறான் ஏழைகள்
நாமென ஏக்கத்தை விட்டொழியுங்கள்..
அறிவையும், வேலையையும்
அரசிடம் வேண்டாதீர்
சுயமாய் கற்று,சுயமாய் தேடுங்கள்
சுயமரியாதையோடு.
விவசாயம் அழிகையில்
தூக்கில் தொங்குங்கள்
உயிரை விடமானமே பெரிது
இனமான தமிழனுக்கு.
கிராமங்களில் வறுமை
தவித்து நிற்காதீர்நகரங்கள்
அழைக்கின்றன
நடந்தே வாருங்கள்..
சாலைகள் நவீன ஆலயங்கள்.
சுயமரியாதையோடு
வீதிகளில் வாழுங்கள்.
ஒரு நூறு ரூபாய்குவார்ட்டர்,
பிரியாணிஇழிவுகள் அகற்றுங்கள்.
ஒரு வாக்கெனில் ஐந்தாயிரம்
ஒரு குடும்பமெனில் ஐம்பதாயிரம்
சுயமரியாதையோடு
சூத்திரம் கற்றுக்கொள்ளுங்கள்.
மின்தடை மின்தடையென
மிரள வேண்டாம்.
இருட்டிலும் வாழ்வான்
இரும்புத்தமிழன்
எதையும் தாங்கும் இதயமென
இலக்கியம் படையுங்கள்.
தமிழ் தமிழென
தனித்து நிற்காதீர்..
சன், ரெட்ஜெயண்ட்
கிளவ்டு நைன்.
சூர்யா உதயா ஜெமினி
திசையெங்கும் திரிந்து
அனைத்து மொழிகளிலும்
அள்ளிக்கு வித்திடுவீர்.
வீதிகளில் குழந்தைகள்
விளையாடிட வேண்டாம்
குடும்பத்துடன் அமர்நது
குதூகலமாய் களித்திடுங்கள்
மான்களும், மயில்களும்
உங்கள் வீடுகளில் ஆடிடட்டும்.
இலவசமாய் வாக்குகளை
இழந்திட வேண்டாம்.
மலிவு விலையில்
மயங்கிட வேண்டாம்.
இன்று பணம்
நாளை என்னவென
பகுத்தறிவோடு கேளுங்கள்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.