EE04_380பறக்கும் ஈக்களுக்கு முக்கிய பங்கு உண்டு.ஆடி மாதத் தொடக்கம் முதல் முடிவு வரை ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே என்று நம்மில் பலருக்குத் தோன்றுவது உண்டு.இதற்குக் காரணம் அந்த காலகட்டம்தான் ஈக்களின் இனப்பெருக்க காலம் என்பதால்தான்.

உலகளவில் 188ஈ குடும்பங்களும், இந்திய அளவில் 96 ஈ குடும்பங்களும் காணப்படுகின்றன. உலக அளவில் 1,56,000 வகைகளும், இந்தியாவில் 6,060 வகை ஈக்களும் காணப்படுகின்றன.

கிரேக்க மொழியில் Di என்றால் ‘இரண்டு’ என்றும் Ptera என்றால் ‘இறகுகள்’ என்றும் அர்த்தம். இரண்டு இறகுகள் என்று பொருள்படும் விதத்தில் ‘DIPTERA’ என்ற குடும்பத்தின் கீழ் பகுக்கப்பட்டுள்ள ஈக்கள் உலகெங்கும் பரவியுள்ளன. பனிப் பகுதிகளான அண்டார்டிகா முதல் ஆர்டிக் பிரதேசம் வரை ஈக்களில் பல வகைகள் காணப்படுகின்றன.இன்று மனிதர்களுக்கு பலவித நோய்களை பரப்பி வரும் கொசுக்களும் ஈ குடும்பத்தை சேர்ந்தவையே.

ஈக்களின் சூழலியல் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.நம்மால் வெறுத்து ஒதுக்கப்படும் ஈக்கள் பல பறவை இனங்களுக்கு முக்கிய உணவாக அமைவதுடன், நமது வீடுகளில் காணப்படும் குதிக்கும் சிலந்திகளும் (Jumping Spider) முக்கிய இரையாகின்றன. வீட்டுத் தோட்டங்களில் கூடு அமைக்கும் தேன்சிட்டு,தையல்சிட்டு போன்ற பறவைகளுக்கும் தும்பி,சிறு பூச்சிகள்,பட்டாம்பூச்சிகளுடன் ஈக்கள் முக்கிய உணவாகின்றன. ஒரு வேளை ஈக்கள் முழுவதுமாக அழிந்துவிட்டால்,அவற்றைச் சார்ந்து இயங்கும் குதிக்கும் சிலந்தி,தேன்சிட்டு,தையல்சிட்டு போன்ற சிறு உயிரினங்களும் அழிவைச் சந்திக்க நேரிடும்.அதனால் அவற்றை முற்றிலும் ஒழித்துவிடாமல்,அதிகம் பெருகாத வகையில் காப்பாற்றப்பட வேண்டும்.

துணை நின்ற நூல்: Indian Insects & Arachnids - Meenakshi Venkatraman - Simova Education and Research - April 2010.

இதற்கடுத்த மூன்று, நான்கு நாள்களில் வளர்ந்த ஈக்கள் உருவாகும். எனவே, ஓர் ஈயின் வாழ்க்கை சுழற்சி (பிறப்பதற்கான காலம்)என்பது,அதிகபட்சம் ஒரு வாரம்தான். வளிமண்டல வெப்பநிலை 33டிகிரி செல்சியஸ் இருப்பது ஈக்கள் உருவாக உகந்த வெப்பநிலை ஆகும். ஒரு வளர்ந்த ஈ கோடை காலத்தில் ஒரு மாதமும், குளிர் காலத்தில் 3 மாதங்களும் உயிர் வாழும்.

மனிதக் குடியிருப்புகளைச் சுற்றி உருவாகும் கழிவுகளே ஈக்களுக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். அதேபோல,திறந்த நிலையில் இருக்கும் உணவும் ஈக்களுக்குப் பிடித்த விஷயமே. இதன் காரணமாகத்தான் காலரா,டைபாய்டு,வயிற்றுப்போக்கு நோய்க்கிருமிகளை ஈக்கள் பரப்புகின்றன.ஈ தனது உடலை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள முயற்சிக்கும் என்பதால், அப்படிச் செய்யும்போது மனித உணவில் நோய்த் தொற்றை உதிர்த்துவிடுகிறது. இதில் மனிதனுக்கும் 50%பொறுப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.ஈக்கள் நோய்க்கிருமிகளைப் பரப்பும் வகையில் சுகாதாரமற்ற சூழ்நிலையை மனிதன்தானே உருவாக்கு கிறான்.மனித இனம் எவ்வளவு நாகரிகம் அடைந்தி ருந்தாலும் எவ்வளவு பெரிய கூட்டமாக வாழ்ந்தாலும், அதைவிடப் பெரிதாகவே கழிவுகளையும், சுகாதாரமற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது.இதன் காரணமாக ஈக்கள் இந்த இடங்களைத் தேடி வரும்போது, நோய்த் தொற்றை பரப்பவும் நோயை பரப்பவும் காரணமாக அமைகின்றன.

Musca domestica என்ற ஈ உலகின் பல்வேறு பகுதி களில் காணப்படும் ஈ வகை. இந்தியாவில் சாதாரணமாக் காணக்கூடிய ஈ வகை Musca nebula.சிறிய அளவில் வந்து வீட்டுக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் மற்ற ஈ வகை Muscavicina.(குழப்பமாக இருந்தால் படங்களைப் பார்த்து வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.)

ஈக்களுக்கு பல்லி, பறவை உள்ளிட்டவை எதிரிகள். மனிதர்களுக்கு மட்டுமல்ல ஈக்களுக்கும் தொற்று நோய்கள் எதிரிதான். புஞ்சைத் தொற்றுகள் பரப்பும் தொற்றுநோய்கள் காரணமாக ஈக்கள் பெருமளவில் இறந்து போகின்றன.தொற்று உண்ணிகள், நூற் புழுக் களாலும் ஈக்கள் பாதிக்கப்படுகின்றன.ஈக்களின் ஆண்டு இறப்பு விகிதம் 95 சதவிகிதத்துக்கும் அதிகமா கவே இருக்கிறது. இருந்தபோதும் அது கோடிக்கணக்கில் பெருகுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் மனிதன், அவன் ஏற்படுத்தும் சுகாதாரச் சீரழிவு, கழிவு உருவாக்கம்.

நன்றி: Insects, M.S. Mani, NBT, படங்கள்: விழியன்

Pin It