இந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, எத்தியோப்பியாவில் ஆறு வருடங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தார். பிறகு, அமெரிக்காவின் நாடர் டேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

Udaya_250இவரின் தந்தை அரசியலில் ஆர்வம்கொண்டவர். இவரின் தாய் சமூகப் பணியாளராக இருந்தவர். அந்த உந்துதலினால், அரசியலுக்காகவும் மக்களுக்கான அறிவியலைக் கொண்டுசெல்லவும் பல விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.

இவர் அணுசக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய் தாக்கி இறந்தனர். அதற்குக் காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய மணல் போன்ற கனிமங்களில் இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச் சுரண்ட... அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் தாக்கியது. அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழை வரையில் உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது!

களப்பணியில் மட்டும் இன்றி, இவரை அணு சக்திக்கு எதிராக எழுதவும் ஊக்கம் தந்த பேராசிரியர் எபினேசர் பால்ராஜும் புற்றுநோயால் இறந்தார். எனவே, 'புற்றுநோய் கல்வி’ என்கிற புத்தகத்தை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறார் சுப.உதயகுமாரன்.

'தி கூடங்குளம் ஹேண்ட் புக்’, 'கான்ஃப்ரன்டேஷன்ஸ் ஆஃப் டிசாஸ்டர்’, 'கிரீன் பாலிட்டிக்ஸ் இன் இண்டியா’ ஆகிய புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். 'அசுரச் சிந்தனைகள்’ நூலின் தொகுப்பாசிரியர். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் பல்வேறு இதழ்களில் அணு சக்திக்கு எதிரான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். சமாதானம் மற்றும் சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தும் கல்விச் சாலை ஒன்றினை மனைவியுடன் இணைந்து நாகர்கோவிலில் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சமூகப் பணி என்கிற தளத்தில் முன்னோடியாக இருப்பவர்களில் ஒருவரான ஒய்.டேவிட் தலைமையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அணுசக்திக்கு எதிரான இயக்கங்களை ஒன்று திரட்டி 2009-ல், 'அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. தற்போது அதன் தலைவராக இருந்து, சுற்றுச்சூழலுக்காகவும் சக மனித நலனுக்காகவும் போராடி வருகிறார் நம் உதயகுமாரன்!

Comments

7 comments

7
கி.பிரபா
அரசியலில் புற்றுநோய்; ஆட்சியில் புற்றுநோய். கல்வியில் புற்றுநோய். இம்மூன்று வகை புற்றுநோய் உள்ள மக்கள் தான் முனைவர் சுப.உதயகுமாரையும் அவர் உள்ளம்சார்ந்த மக்களையும் அவரின் உண்மை கூற்றுகளையும் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள் எனநினைக்கத் தோன்றியது.ஆனால் இவற்றையெல்லாம் விட பேருண்மை இப்போது தெளிவாகத் தெரிகிறது. அணு உலை எதிர்ப்பாளர்களும் அவர்களை வழி நடத்தும் சுப.உதயகுமாரையும் எதிர்ப்பதன் காரணம் இவர்கள் மிகத் தெளிவாக அடுத்து வரக்கூடிய, வாழக்கூடிய தலைமுறைகளுக்காக உழைக்கும் உழைப்பாளிகளாக உள்ளார்களே! அயல் நாட்டின் அடிவருடியாக வாழ்ந்து வரும் நம் ப.சிதம்பரம், வாசன், உயர்சாதி எனப்படும் இந்து முன்னணியுடன் இணைந்து சூறையாடும்......?
siva
இவர் அணுசக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய் தாக்கி இறந்தனர். அதற்குக் காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய மணல் போன்ற கனிமங்களில் இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச் சுரண்ட... அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் தாக்கியது. அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழை வரையில் உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது!

இவர் தனியார் நிறுவனங்கலை எதிர்த்து போராடியதாக செய்தி இல்லையே
aruloli
The people's struggle against kudankulam nuclear power project should not be perceived as the agitation of a few coastal villages in the southern districts. It's really a struggle against the wrong nuclear policy of our central government. The essentially notable aspect in the Kudankulam nuclear power project is that all the major political parties (the Congress, the BJP, the two left parties and the two major dravidian parties in Tamilnadu) are in the same wavelength. Is it not unusual in Indian politics? What made them join together? In the words of one of the former chairman of the AERB, Gopalakrishnan it is commission. If one carefully looks in to the process of the Kudankulam project since its inception one can clearly understand the role of all these major parties in it. Being the ruling party in 1988, Congress hand is clearly visible in the agreement with the then USSR that could not have done anything without their `Indian red bloods'--the comrades (the left parties) Later when the agreement was rejuvenated the Janatha Dal was in power and when it was finalised during the BJP regime.

As Indians we are well aware of the inseparable relationship between our politicians and commission. Going by this theory we have all reasons to believe that the hands of every politician involved in this kudankulam nuclear power project agreement would have been greased. It is hence all these parties with a single voice abuse Uthayakumar and his team and the people's movement against Kudankulam project as anti-national.
thaaraki
நல்ல செய்திகளை சுருக்கமாக கொடுத்துள்ளார் கட்டுரையாளர் .உதயகுமார் மற்றும் கூடன்குளம் போராட்டக் குழுவினர் அன்னிய நாடுகளிடம் பணம் பெற்றுக்கொண்டு போராடுகிறார்கள் ....குறிப்பாக அமெரிக்க சார்பு நிலையில் இருந்து ரசியாவின் தொழில்னுட்பத்துடன் கட்டப்படும் அணு உலையை எதிக்கிறார்கள்.....என்ற விமர்சனத்திற்கு போதிய பதில் உள்ளது. ஆனால் இப்போதைய சூழலில் இது மட்டும் போதாது இன்னும் நிறைய விளக்கம் மக்களிடம் கொண்டுச்செல்லப்படவேண்டும் ...அந்தக் கடமை உண்மையான மக்கள் நல விரும்பிகளையே சாரும் .
மதிவதனன்
எந்த நாட்டில் இருந்தும் நாங்கள் பணம் பெறவில்லை எனக்கூறும் உதயகுமார், நாடு கடத்தப்பட்ட ஜெர்மன் காரரை முதலில் தெரியாது என்றார். பிறகு தெரியும் என்கிறார். இது போன்ற பிறழ்வான செய்திகள் உதயகுமாரின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்ப வைக்கிறது.
கூடங்குளத்திற்கு யார் சென்றாலும் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை முன்வைத்தே அனுமதிக்கப்படுகிறார்கள். கருத்து ரீதியான தர்க்கங்களில் கலந்து கொண்டு வரும் உதயகுமார், இந்த விடயங்களில் கூடங்குளத்தில் போராடி வருபவர்களின் மனநிலைகளின் ஒரு படிமத்தை உருவாக்கியுள்ளதை உணரும் போது, அவரின் சர்வாதிகார தன்மையே புலப்படுகிறது. அதற்காக உதயகுமார் கூட்டங்களில் கலகம் விளைவிப்பது, அவரது பள்ளியின் சுற்றுச்சுவரை இடிப்பது போன்ற அநாகரீக நடவடிக்கைகளை எக்காரணமும் கொண்டு ஏற்க முடியாது. இந்துதுவாவின் குற்றச்சாட்டுக்களுக்குப் பயந்து போராட்ட மக்களை பால்குடம் சுமக்க வைக்கும் உதயகுமாரை நினைத்தால் வருத்தம் தான் மேலிடுகிறது.
கி.பிரபா
"உதய குமார்" அனைவராலும் மனப்பாடம் செய்யப்பட்ட பெயர் இது. பாமரமக்கள் முதல் படித்தவர்கள் ஈறாக எல்லோரையும் ஒத்த கருத்தின் கீழ்க் கொண்டுவரும் பண்பாடு, பொறுமை,சிந்தனை இவை உதயகுமாருக்கே உரியன.கடந்த 26ஆம் நாள் சென்னையில் இவரின் பேச்சில் மிகத் தெளிவான சிந்தனையுடன் கூடிய செய்திகளைப் பார்த்தோம்.பெருக்கத்து வேண்டும் பணிவும் கசடறச் சொல் திறமுமிருப்பதை நேரில் சென்று கண்டவர்கள் உணர்வார்கள்.பெருமிதம், செருக்கில்லை! யார்க்கும் அஞ்சாத நேர்மை குடி கொண்டிருப்பதால் முனைவர் உதயகுமாரின் போராட்டம் வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. கூடுவோம் அவரின் பாதையில். யுரேனியத்தின் கழிவில் இறப்பதை விட அணு உலையை ஒழிக்கப் பாடுபடுவோம் ,
sampath. sulur coimbatore
He is one of the great personality in our country

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.