யுனிசெப் நிறுவனம் இந்தியா முழுவதும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தியது. அதில் தமிழ்நாட்டில் கிருமிகள் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடுகள் காரணமாக குழந்தைகள் இறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

     நாள் ஒன்றுக்கு 130 குழந்தைகள் வரை பலியாகின்றன. இதே போல் நாடு முழுவதும் கிருமி தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு காரணமாக 5 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களை யுனிசெப் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஏஞ்செலா வால்க்கர் தெரிவித்தார் அவர் கூறியதாவது:-

     இந்தியாவில் குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு பிரச்சினை உள்ளது. இது ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமாக உள்ளது. பாதி குழந்தைகள் சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

     இதை தவிர்க்க வேண்டுமானால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு சத்தான உணவு வகைகள் கொடுக்க வேண்டும். இது குழந்தை இறப்பை தடுக்கும். அதற்கு மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.