ஒரே ஒசையில்தான்
அடித்துக் கொள்வார்கள்
வில்லனும் கதாநாயகனும்
சொல்ல வேண்டிய யாவற்றையும்
முழுமையாகச் சொல்லிவிட்ட பிறகுதான்
தலை சாய்ந்து போகிறது
துப்பாக்கியால் சுடப்பட்டவர்க்கு
சொல்லிவைத்தாற்போல்
ஒரே தொனியில்தான்
ஒலமிடுவார்கள்
கற்பழிக்கத் துரத்தப்படும்
கதாநாயகிகள்.
கதாநாயகன் வந்து
காப்பாற்றும் வரை
கதாநாயகியைக் கட்டி வைத்து
நிதானமாக பேசி
சித்ரவதை செய்வான் வில்லன்
முக்கிய கட்டத்தில்
கைத்துப்பாக்கியில்
தோட்டா தீர்ந்துபோகு
கதாநாயாகனுக்கு.
அந்த காலத்தில்
அம்மா பாடிய பாடலால்
ஒன்றிணைந்து கட்டியழுவார்கள்
அதுவரை எதிரிகளாயிருந்த
அண்ணனும் தம்பியும்
எல்லாமுமே
ஒரே மாதிரியாகத்தான்
இருக்கிறது
கடந்த இருபத்தைந்து
ஆண்டுகளுக்கும் மேலாக.
இருந்தும்
நாகூசாமல்
அடிக்கடி சொல்கிறீர்கள்
புத்தம் புதிய
தமிழ் திரைப்படம் என்று.
- ஜெயபாஸ்கரன் (