நாம் தமிழர் கட்சி தமது ஆவணத்தை வெளியிட்ட நாளிலிருந்து நான்கு திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் குவிகின்றன. அவரைப் பாசிசவாதியென்போர் ஒருபுறம், சிவசேனாவின் தளபதி என்போர் மறுபுறம், இல்லை, இல்லை அவர் இனவாதியென்றொரு குரல் இன்னொருபுறம் எனக் கூக்குரலிடுவார் கூட்டத்துக்கு குறைவேயில்லை. ஆனால் நாம் தமிழர் ஆவணத்தை முழுமையாகப் படித்த எவருமே அந்த ஆவணத்தின் சாரம் "தமிழ்நாடு தமிழருக்கே" என்பதாகும் என ஒப்புக்கொள்வர். பெரியார்களே, தாய்மார்களே இதைத் தானே அன்று பெரியாரும் முதலில் சொன்னதாக இன்றும் பலர் கூட்டம் போட்டுச் சொல்கிறீர்கள். பெரியார் அன்று சொன்னதையே திருப்பிச் சொல்லும் சீமானின் மீது மட்டும் ஏனிந்த கொலவெறி? சீமான் ஒரு பச்சைத்தமிழன் அதிலும் அவர், தமிழன் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டுமென்பதாலா?

அதிலும் சிலரின் நகைச்சுவையைத் தாங்கவே முடியவில்லை. நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தின் உரைவீச்சுத் தெறிப்பில் "ஆட்சிக்காக அல்ல தமிழர்களின் மீட்சிக்காக" என்று 'மீட்சி' என்ற வார்த்தை பாவிக்கப்பட்டிருப்பதால் அது நிச்சயமாக பாசிசத்துக்கே உரிய ‘தேசப்புத்துயிர்ப்பாம்’ என்றும் சிலர் கதைவிடுகிறார்கள். அப்படியென்றால் திராவிடர் கழகத் தலைவர் திரு. வீரமணி அவர்கள், கலைஞர் கருணாநிதியை "அவர் ஆட்சிக்காக வாழக் கூடியவர் அல்லர்; தமிழின மீட்சிக்காக வாழக்கூடியவர்" எனப் பாடிப் புகழ்ந்ததை பத்திரிகைகளில் பலரும் பார்த்திருக்கிறோம். அப்படியென்றால் கலைஞரை பாசிசவாதி என்று திரு. வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாகக் கருத்தாகுமா?

"வட்டுக்கோட்டைக்கு வழி எதுவென்று கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு என்றது போல" என இலங்கையில் ஒரு பழமொழியுண்டு. அது போல் தான் சிலர் நாம் தமிழர் ஆவணத்துக்கு விளக்கம் சொல்வதாக நினைத்து இல்லாத எல்லாவற்றையும் கற்பனை பண்ணிக் கொண்டு, ஆவணத்தில் குறிப்பிடப்படாத ஸ்ராலினிசத்துக்கு விளக்கம் கொடுத்து, ஹிட்லரையும் துணைக்கழைத்துக் கொண்டு தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறார்கள்.

அப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நாம் தமிழர் ஆவணத்தில், பிரச்சனைக்குரியதாக சிலர் பெரிது படுத்தும் விடயங்களுக்கு மட்டும் பார்ப்போம்.

நாம் தமிழர் கட்சியினர் கரசேவகர்களா அல்லது வீட்டுக்குச் சொந்தக்காரர்களா?

தனது வீடு பழுதடைந்தால் அதை முழுவதாக இடித்து விட்டுப் புதிதாக தனக்கு வசதியாக, அழகாக கட்டவேண்டுமென்று நினைப்பவன் வீட்டுச் சொந்தக்காரனாக இருப்பானே தவிர கரசேவகனாக ஒருபோதுமிருக்க முடியாது. கரசேவகனுக்கு உடைக்கத் தான் தெரியுமே தவிர கட்டத் தெரியாது. இது தேவையில்லாத குசும்புத்தனம். அப்படியொரு ஐயப்பாடு, தமிழ்நாட்டில் இன்று ஆதிக்கம் செலுத்தும் தமிழரல்லாதாருக்கு ஏற்பட்டு விடக் கூடாதென்பதற்காகத் தான் அடுத்த பக்கத்திலேயே

"நாம் கட்டடத்திற்கு

வெள்ளையடிக்க வந்தவர்கள் அல்லர்

அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டு

மறுகட்டடத்தைக்கட்ட வந்த புரட்சியாளர்கள்!”

(பக்கம்: 49) என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது

நாம் தமிழர் கட்சி இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களா?

எம் இன எதிரிகளின் சட்டத்திற்குட்பட்ட

தேர்தல் பாதையை நாம் விரும்பி ஏற்கவில்லை.

வரலாறு நம்மீது வலிந்து திணித்துள்ளது. (பக்கம்: 53)

தமிழ்நாட்டுப் பிரிவினையை வலியுறுத்திய, இந்தியை எதிர்த்த தமிழ்த்தேசியத்தின் அடையாளமாக உலகத் தமிழர்களால் போற்றப்படும் அறிஞர் அண்ணா கூட இப்படியான கருத்தைத் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அறிஞர் அண்ணாவும் பாசிசவாதியா? பெரியார், கலைஞர், வைகோ போன்ற தலைவர்களும் இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உண்மையாக இருப்போம் என்பது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? நாம் தமிழர் கட்சியின் நீண்டகால நிகழ்ச்சி நிரலை முன்பே தெரிந்து கொண்டவர்கள் மாதிரி சிலர் நாம் தமிழர் ஆவணத்தில் இல்லாததையெல்லாம் கற்பனை பண்ணுவது வெறும் அபத்தம். நாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களல்ல என ஆவணத்தில் அச்சடித்து, நாடு முழுவதும் தெரிவிக்கும் ஒரு கட்சியை பிரிவினைவாதிகளாக்க முனைவது எவ்வளவு முட்டாள்தனம் என்பதைச் சிலர் உணர்வதேயில்லைப் போல் தெரிகிறது.

புலிச்சின்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அல்லது ஈழத்தமிழர்களுக்கு மட்டும் உரியதா?

நாம் தமிழர் கட்சி புலிச் சின்னத்தைப் பாவிப்பதும் பிரபாகரனின் படத்தையும் பெரையும், தமிழ்ப் பாடல்களையும் பாவிப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாத் தார்மீக நியாயங்களையும் குழிதோண்டிப் புதைத்து விடுமெனவும் கருத்துத் தெரிவித்தவர்கள் அதற்கான காரணங்களைச் சொல்லத் தவறி விட்டார்கள் என நினைக்கிறேன். ஈழத்தமிழர்கள், இந்தியத்தமிழர்கள் என்று பிரித்துப் பார்த்தோமானால், உண்மையில் புலிக்கொடியில் ஈழத்தமிழர்களை விட தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தானே கூடிய உரிமையுண்டு. இப்படியான கருத்துக்களைக் கேட்டால் பிரபாகரன் கூட மனம் நொந்திருப்பார்.

மேதகு பிரபாகரன் புலிச்சின்னத்தை தமிழர்களின் படைபலத்துக்கும் வீரத்துக்கும் அடையாளமாகத் திகழ்ந்த சோழர்களிடமிருந்து தான் இரவல் வாங்கினார். புலிக் கொடி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் கொடி, அது ஈழத்தமிழர்களின் கொடி மட்டுமல்ல. உலகத்தமிழர்கள் அனைவரும் புலிக்கொடியை எமது கொடியாக வரித்துக் கொள்ள வேண்டும். பாரதியாரின் பாடல்களை மட்டுமல்ல, பல தமிழ்நாட்டுக் கவிஞர்களையும், பாடகர்களையும் கொண்டு, தமிழுணர்வை ஈழத்தமிழர்களுக்கூட்டிய விடுதலைப்புலிகள், இன்று தாய்த்தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சி, "மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி' என்னும் உறுதியை இன்றும் ஒலிப்பதை நினைத்து சீமானை நிச்சயமாக வாழ்த்துவார்கள். அந்த மாவீர்ர்களின் நினைவுகள் இன்றும் மறக்கப்படாமல் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கப்படுவதை நினைத்து, தமிழீழத்தின் தியாகிகளை ஈன்ற பலர் சீமானை வாழ்த்துகிறார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

பொருளின வேறுபாடற்ற கண்ணோட்டம்

பொருளின வேறுபாடற்ற (வர்க்க பேதமற்ற) கண்ணோட்டத்தை வள்ளுவம், மார்க்சியம், இலெலினியத்திடமிருந்து பெற்றுக் கொண்டு வழிநடப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஆவணம் கூறுகிறது. ஸ்ராலினியத்திடமிருந்து பெற்றுக் கொண்டு வழிநடப்போம் என்று கூறவில்லை. ஆனால் ரஸ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலினின் படத்தைப் போட்டு இனவாதப் பூச்சாண்டி காட்டுபவர்களின் உள்நோக்கம் என்னவாகவிருக்கும் என்பதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். முறைக்கு மார்க்ஸ் அல்லது இலெனினின் படத்தைத் தான் போட்டிருக்க வேண்டுமல்லவா? சிலர் நாம் தமிழர் கட்சி தனித்தமிழ்நாடு கேட்கவில்லை என்பதை மறந்து விட்டார்களோ அல்லது சீமானைப் பிரிவினைவாதியென்று காட்டி, ஈழத்தில் விழித்தெழுந்த தமிழர்களை எப்படி அழித்தார்களோ அது போல் தமிழ்நாட்டில் விழித்துக் கொண்ட தமிழர்களையும் பொய்ப்பிரச்சாரத்தால் கழுத்தறுக்க முனைகிறார்களா என்பதை ஓவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும்.

மதச்சார்பற்ற ஆட்சியும் முரண்பாடுகளும்

“நாளைய தமிழர் ஆட்சியில், அரசு சமயம் சாராது. ஆனால், யாருடைய தனிப்பட்ட சமய நம்பிக்கையிலும் அரசு தலையிடாது.” (பக்கம்: 60) “நாம் தமிழர்” ஆட்சி சமயச் சார்பற்றதாக இருக்கும் என்று அறிவிக்கிறது ஆவணம்.

மதச்சார்பற்ற தமிழர் ஆட்சி ஒன்றை அமைப்பதே நாம் தமிழர் கட்சியின் ஆவணம் தெளிவாகக் கூறுகிறது. அப்படியிருந்தும் அதற்கு மதச்சாயம் பூச சிலர் முனைவது வெறும் அடாவடித்தனமாகும். உதாரணமாக, தமிழுக்கும் கிறித்தவத்துக்கும் அல்லது தமிழுக்கும் சைவத்துக்கும் ஈழத்தில் முரண்பாடு கிடையாது. தமிழ்க் கிறித்தவர்களும், தமிழ்ச் சைவர்களும், தமிழ், தமிழ்மண், தமிழர்களின் உரிமையென்று வரும்போது அவர்களின் மதங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. நாம் தமிழர் என்ற அடையாளம் அவர்களின் மத வேறுபாடுகளைப் பின் தள்ளி விட்டு அவர்களை ஒன்றுபடச் செய்து விடும் (ஈழத்தில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை). எத்தனையோ கிறித்தவப் பாதிரிமார் கூட ஈழவிடுதலைக்குத் தம்மை அர்ப்பணித்துள்ளார்கள்.. அப்படியான மதவேறுபாடற்ற தமிழன் என்ற ஒருமைப்பாடு, கிறித்தவத் தமிழர்களும், முகம்மதியத்தைக் கடைப்பிடிக்கும் தமிழர்களிடமும் தமிழ்நாட்டில் கிடையாதென்று தான் கூறவேண்டும். முகம்மதியர்களுக்கு என்ன மொழி பேசினாலும் தமது மதத்துக்குத் தான் முதலிடம் கொடுப்பார்கள். ஈழத்தில் எத்தனை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, நானறிந்த தம்மையும் தமிழராக அடையாளப்படுத்தும் பல தமிழ்நாட்டு முகம்மதியர்கள் ஈழத்தில் தமிழர்களின் படுகொலைகளை நியாயப்படுத்தியுமுள்ளனர் ஆனால் பலத்தீனத்தில் முஸ்லீம் ஒருவரின் பல்லுடைந்தால் கூட இந்தியாவின் வீதிகளையெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தி அடைத்து விடுவார்கள்.

ஈழத்துச் சைவத்துக்கும், இந்தியாவின் மனுவியத்துக்கும் முரண்பாடுகளுண்டு. ஆனால் ஈழத்துத் தமிழ்ச் சைவனாக இருந்தாலும், இந்தியாவின் இந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் தமிழனாக இருந்தாலும், யாருமே தமிழன் என்பதை விட இந்து என்ற மத அடையாளம் தான் தனக்கு முதன்மையானது என்று அடம்பிடிப்பதில்லை. அதனால் அதைப்பற்றிப் பேச வேண்டிய தேவை கிடையாது, முரண்பாடுள்ளவற்றைத் தான் பேசித் தீர்க்க வேண்டும், அதனால் யாரும் பேசத்துணியாத, தமிழர்களின் முரண்பாடுகளைக் கூட பேசியது மட்டுமல்ல, அதை ஆவணத்திலும் பொறித்து தமிழர்களை அவற்றையெல்லாம் பேச வைத்த செந்தமிழன் சீமான் உண்மையான, அச்சமில்லாத் தமிழனே.

தமிழ்த்தேசியமும் தமிழரல்லாத சிறுபான்மையினரும்

தனி இனமாக நீங்கள் வாழ வாழ்த்துகிறோம்; ஆனால் ஒன்று;

தமிழர் தேசத்தில் தமிழர் ஆட்சியை நீங்கள் வாழ்த்துங்கள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பு என்று கூறுகிறது. மொழிவழி மாநிலங்களின் தலைவர்களும், அந்த மாநில மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்களும் அந்த மொழிவழி மக்களின் நலன்களையும், அவர்களின் மொழி, கலை, கலாச்சார பண்பாடுகளையும் காப்பதை வலியுறுத்தி அரசியல் செய்வது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அது அவர்களின் கடமையும் கூட. அந்தக் கடமையை இன்றுள்ள அரசியல்வாதிகளை விட, உண்மையுடன், தமிழுக்கும், தமிழர்களுக்கும் நாங்கள் விசுவாசமாகச் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஆவணம் கூறுகிறது. தமிழ்நாடு என்ற மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசிய இனம் தனது மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மற்றவர்களின் இடையூறில்லாமல் காப்பதற்காகத் தான்.

பல மேற்கத்தைய நாடுகளின் மாநிலங்கள் மிகவும் அதிகாரங்களைக் கொண்டு தனிநாட்டைப் போலவே இயங்குகின்றன. உதாரணமாக கனடாவின் பிரெஞ்சு பேசும் மாநிலமான, கியூபெக் மாநில அரசு தனியாக The Office québécois de la langue française (OQLF) (English: Quebec Board of the French Language) என்று தனி இலாகாவையே பிரஞ்சு மொழியின் ஆதிக்கத்தை தமது மாநிலத்தில் உறுதிப்படுத்துவதற்காக் நிறுவியுள்ளது. அந்த மாநில அரசு அரசுப்பணிகளில் பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தவர்களை மட்டும் தான் பணிக்கமர்த்தும். அவர்களின் கடமை கியூபெக் மாநிலத்தில் ஆங்கில மொழியின் பாவ்னையை குறைப்பதும், அங்கு குடியேறுபவர்கள் பிரஞ்சு மொழியைக் கற்பதை ஊக்குவிப்பதுமாகும். கனடாவைக் கட்டியெழுப்பிய இரண்டு முக்கிய குடியேற்றவாதிகளில் ஒருவராகிய பிரெஞ்சு மக்கள், தம்மைக் கடல் போல் சூழ்ந்திருக்கும் ஆங்கிலம் பேசுபவர்களால், தமது மொழியும், தனித்துவமும், கலாச்சாரமும் அழிந்து விடுமோ என்று பயந்து அங்கு குடியேறுபவர்களின் குழந்தைகளைக் கூட ஒரு குறிப்பிட்ட வயது வரை, ஆரம்பக் கல்வியைப் பிரெஞ்சு மொழியில் தான் கற்க வேண்டுமென்று சட்டப் பூர்வமாக வலியுறுத்துகிறார்கள். அப்படியானால் கியூபெக் மக்கள் எல்லாம் பாசிசவாதிகளா?

கியூபெக்கில் எந்தக் கடைக்குப் போனாலும், அது பெரிய மேட்டுக்குடியினரின் வர்த்தக நிலையமாக இருந்தாலென்ன, சாதாரண நடுத்தரமக்களின் பல்பொருள் அங்காடியாக இருந்தாலென்ன, வந்திருப்பவர் ஐரோப்பியரல்ல, பிரெஞ்சு மொழி தெரிந்திருக்காதென தெளிவாகத் தெரிந்தாலும் கூட, அவர்களின் மொழியில் தான் முதலில் வாழ்த்தி விட்டு, பின்னர் பிரெஞ்சு மொழி தெரியாதென்றால் ஆங்கிலத்தில் பேசுவார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில், இது தமிழ்நாடு, நான் தமிழில் கேட்பதற்கு, நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறீர்கள் என்று நான் கேட்டிருக்கிறேன். இது தமிழ்நாடு, முதலில் தமிழைக் கற்றுக்கொள் என்று சொன்னதால், ஒரு வட இந்தியன் எனக்கு அடிக்கக் கூட வந்திருக்கிறான்.

இவ்வளவு மொழிப்பற்றுடனும், அதுவும் கிட்டத்தட்ட ஒரு தனி நாடு கொண்டிருக்க கூடிய உரிமைகளையுள்ள கனடாவின் ஒரு மாகாணமாகிய கியூபெக் மக்களே தமது மொழியையும், கலாச்சாரத்தையும் இழந்து விடுவோமோ என்று பயப்படும்போது, தமிழர்களை விட, தமிழரல்லாதார் தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரங்களை தமது கைகளில் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் போது, நாம் தமிழர் கட்சி போன்ற தமிழர் நலன்களைக் காக்கப் புறப்பட்டிருக்கும் இயக்கம் தமிழர் தேசத்தில் தமிழர் ஆட்சியை வாழ்த்துமாறு தமிழரல்லாதாரைக் கேட்பதில் என்ன தவறு? இவ்வளவுக்கும் தமிழ்நாட்டிலுள்ள தமிழரல்லாதார் அனைவரும் தமது மொழியையும், கலை கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பேணவும், வளர்க்கவும் தமக்கென சொந்த மாநிலங்களை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி கொண்டுள்ளார்கள். அவர்களைத் தமிழ் தேசத்தில் தமிழை முதலிடத்தில் இருக்க தடங்கல் செய்யாதீர்கள், தமிழனை ஆளவிடுங்கள் என்று கேட்பதில் என்ன தவறு?

நாம் தமிழர் ஆவணத்தால் தமிழின் தொன்மையும் கேள்விக்குரியதாகி விட்டதா?

தமிழின் தொன்மைக்கு சாட்சி கூற எத்தனையோ அறிஞர்கள் உலகம் முழுவதும் தயாராகவிருக்கிறார்கள் என்பதுடன் அதற்கான வரலாற்றுத் தடயங்களும், அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் உண்டு. எல்லா தொன்மையான இனங்களிடமும் தமது வரலாற்றின் பழமையைக் காட்டும் ஆனால், இக்காலத்தில் நம்பவே முடியாத கதைகள் ஏராளமாகவுண்டு. கிரேக்கர்களிடமும், ரோமர்களிடம் கூட பல நம்பமுடியாத பழங்கதைகள் உண்டு. அவையெல்லாம் இக்காலத்துக்கொவ்வாத கட்டுக்கதைகள் என்ற உண்மை, கிரேக்க மொழியின் பழமையை இல்லாமல் செய்து விடாது.

பேராசிரியர் நோம் சோம்சுகி உலகமொழிகளின் மூலமொழி தமிழ் தான் என வெளிப்படையாகச் சொன்னாரா அல்லது அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளின் அடிப்படையில் அப்படி யாராவது அந்த முடிவுக்கு வந்தார்களா என்ற கேள்விக்குரிய பதிலைக் கூறவேண்டிய கடமை நாம் தமிழர் கட்சிக்குண்டு. இந்த ஆவணம் தமிழர்களின் விவாதத்துக்குரியது, அதில் பிழைகளிருந்தால் திருத்துவதற்கு நாம் தமிழர் கட்சி தயங்காது என அண்ணன் சீமான் தெளிவாகத் தெரிவித்த பின்பும், ஆவணத்தில் பிழை இருப்பதாகக் குய்யோ முறையோ என்று கூச்சலிடுபவர்களின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைத் தமிழர்கள் அறிய விழைய வேண்டும்.

குமரிக்கண்டம் வெறும் கற்பனையா?

குமரிக்கண்டம் பற்றிய இலக்கிய தடயங்கள் தமிழில் நிறையவுண்டு. சிலப்பதிகாரம் மதுரைக்காண்டத்தில் மாங்காட்டு மறையோன் தென்னனை (பாண்டியனை) வாழ்த்துகிறான்.

வாழ்க எம்கோ மன்னவர் பெருந்தகை

ஊழி தொறு ஊழிதொறு உலகம் காக்க

அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது

பஃறுளியாற்றுப் பல்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

வட்திசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென் திசை ஆண்ட தென்னவன் வாழி.

குமரிக் கண்டத்துக்கு உண்மையிலேயே அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லையா அல்லது வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்பது போல், சீமானிலும், நாம் தமிழர் கட்சியிலுமுள்ள காழ்ப்புணர்வால், அக்கட்சியின் ஆவணத்தில் எப்படியாவது பிழை பிடிக்க வேண்டுமென்ற அவரசம் புத்தியை மறைக்கிறதா என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

அண்மைய கடல்கோளின் பின்னர், மாமல்லபுரத்தில் கடலுக்கடியில் கட்டிடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் கூறுவர். இந்திய அரசு தமிழர்களின் வரலாற்றை ஆராயும் வகையில் கடலில் ஆராய்ச்சி செய்யத் தயங்குவதால், குமரிக்கண்டத்தைப் பற்றிய வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கவில்லை, அதைக் காரணமாக்க் கொண்டு, குமரிக்கண்டம் என்ற ஒன்றே வெறும் மூடத்தனம் என்று கூறுவதில் தமிழரல்லாதவர்களுக்கு ஒரு கிளுகிளுப்பு ஏற்படலாமே தவிர அது தமிழின் தொன்மையை இல்லாமல் செய்து விடாது.

graham_hancock_450இதனால் எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் எதையோ கற்பனை செய்த குமரிக்கண்டத்தைப் பற்றி நாம் தமிழர் ஆவணம் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. பல அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் கடலில் மூழ்கிய பழம்பெரும் நகரங்களைப் பற்றி எழுதியுள்ளார்கள். அவர்கள் எல்லாம் முட்டாள்களா? அதை விட, தமிழன் தனது பெருமையைத் தமிழில் எழுதி தமிழர்களுக்குக் கொடுத்தால் மற்றவர்களுக்கு ஏன் வயிறெரிகிறது. தமிழர்களின் வரலாற்றை தமிழர்கள் நினைத்துத் தமிழர்கள் பெருமைப்படுவதில் என்ன தவறு?

(''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.") 

For further info:

http://www.grahamhancock.com/archive/underworld/underworld1.php?p=4

("These finds of structures in shallow water (some so shallow that they are exposed at low tide) have been quite widely written-up in the archaeological literature. But for some reason other discoveries that the NIO has made in deeper water off Poompuhar have attracted no attention at all. Most notably these other discoveries include a second completely separate group of structures fully three miles from the Poompuhar shore in water that is more than 70 feet (23 metres) deep. The lack of interest is surprising because to anyone with even minimal knowledge of post-glacial sea-level rise their depth of submergence is - or should be - highly anomalous. Indeed according to Glenn Milne's sea-level data the land on which these structures were built last stood above water at the end of the Ice Age more than 11,000 years ago.

Is it a coincidence that there are ancient Tamil flood myths that speak of a great kingdom that once existed in this area called KUMARI KANDAM that was swallowed up by the sea? Amazingly the myths put a date of 11,600 years ago on these events -- the same timeframe given by Plato for the end of Atlantis in another ocean.")

தொடரும்....

Pin It