voters 460

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மைய ஆட்சியைப் பா.ச.க கைபற்றியது. தமிழகத்தில் இரு தொகுதிகளைத் தவிர மற்ற 37 தொகுதிகளையும் அ.இ.அ.தி.மு.க. அறுவடை செய்தது.

நாடளுமன்றத் மதுவும் கூட தேர்தல் பணியின் ஒரு அங்கமாக சமர்ப்பித்துள்ள சொத்துக் கணக்கின்படி கார்களும், ஜே.சி.பி வாகனமும் வாங்க சுமார் 67 இலட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்றுள்ளார்.

இவருக்கு வருமான வரி அட்டை உண்டு. ஆனால் வருமான வரி கணக்கு இல்லை, தங்க நகையோ வெறும் 32 கிராம் எடையுள்ளத் தங்கச்சங்கிலியும், இரண்டு மோதிரங்களும் மட்டுமே. ஆனால் இவரது கணவரோ 176 கிராம் எடையுள்ள 8 தங்க வலையல்களை வைத்திருக்கிறார். இவர் தேர்தலில் வங்கி கணக்கில் வரவு வைக்காமல் தேர்தலுக்காக சுமார் 48 இலட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

அதேபோல தி.மு.க வின் வேட்பாளராக மத்திய சென்னையில் போட்டியிட்ட திரு. தயாநிதி மாறன் அவர்களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் சுமார் 73 இலட்சம் ரூபாய். அதில் தயாநிதிமாறனின் வருவாய் ஆண்டுக்கு ரூபாய் 12 இலட்சம் மட்டுமே, இவருக்குச் சொந்த நிலமோ, கட்டிடமோ இல்லை. குடும்ப வருவாய்க் கணக்கின்படி அவரது மகள்கள் இருவரில், ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 30 இலட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுகிறார்கள். திரு. தயாநிதிமாறன் அளித்துள்ள தேர்தல் செலவு கணக்கின்படி தனது கட்சியிலிருந்து ரூ. 50 இலட்சம் பெற்றிருக்கிறார். அதில் வெறும் 5 இலட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளார். தமிழகத்தில் ஏன் இந்தியவிலேயே நாடாளுமன்றத் தேர்தலின் போது மிகக் குறைந்த அளவுக்கு தேர்தல் செலவு செய்த வேட்பாளர் இவர் ஒருவர் மட்டுமே. அளவுக்கு தேர்தல் செலவுக்கான பார்வையாளர்கள் கணக்கின்படி இவரது தேர்தல் செலவு ரூ. 70 இலட்சத்திற்கும் மேல். பிற நாடுகளைப் போலன்றி, வண்ணப் பிரிகையாக பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டின் நாடாளுமன்றமே அத்தகைய பன்முகத் தன்மையைப் பிரதிபலிப்பதாக இல்லை. நமது நாட்டின் மக்கள் தொகை 120 கோடி எனக் கொண்டால், அதில் சரிபாதி பெண்கள். இப்போதைய நாடாளு மன்றத்தில் 61 பெண்களே உள்ளனர். இது 543 நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக் கையில், இது வெறும் 11.5 விழுக்காடுதான். அதுபோலவே இந்திய மக்களில் சுமார் 20 கோடி சிறுபான்மை இனத்தவர், அதில் இஸ்லாமியர் சுமார் 15 கோடி. இன்றைய நாடாளுமன்றத்தில் 23 இஸ்லாமியர்களே உள்ளனர், இது 4.5 விழுக்காடு மட்டுமே.

நாட்டு விடுதலைக்குப் பிறகான அரசியல் வரலாற்றில் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் இடம் பெற்றுள்ளது இப்போதைய நாடாளுமன்றம் மட்டுமே. நமது நாட்டின் மிகப்பெரிய மாநிலம், இஸ்லாமியர் கூடுதல் செறிவாக வாழும் மாநிலம் உத்தரப்பிரதேசம், அங்கு மக்கள் தொகையில் 19 விழுக்காடு இஸ்லாமியர் வசிக்கின்றனர். இவ்வளவு செறிவாக இஸ்லாமியர் வாழும் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து இந்தமுறை ஓர் இஸ்லாமியர்கூட நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை, 65 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவ உரிமை மறுக்கப்பட்டது இதுவே முதன்முறை. இன்று நாட்டை ஆளும் பா.ச.க இஸ்லாமியர்கள் 5 பேருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. ஆனால் அதில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. இப்போது நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள 23 இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட 7 மாநிலங்களிலிருந்து மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகாலமாகவே நாட்டின் 14 மாநிலங் களிலிருந்தும், 1 யூனியன் பிரதேசத்திலிருந்தும் இஸ்லாமியர்கள் நாடாளுமன்றம் செல்வது மறுக்கப் பட்டு, அம்மக்களுக்கான பிரதிநிதித்துவ உரிமை தொடர்ந்தும் பறிக்கப்பட்டுவருகிறது.

நாடுமுழுவதும் பரவலாக வாழ்ந்து வருகிற இஸ்லாமியர்களுக்கே இந்த நிலையென்றால், பெரும் பான்மை மக்கள் சமூகத்தினின்றும் புறந்தள்ளப் பட்டு ஒதுங்கி வாழும் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்குக் கிட்டியுள்ள பிரதிநிதித்துவம் குறித்துத் தனியே விவரிக்க வேண்டியதில்லை.

நமது நாட்டில் இப்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையானது, ”முந்தி வரும் மாப்பிள்ளைக்கு முழு விருந்து” என்ற முதுமொழிக்கேற்ப அமைந் துள்ளது. தொகுதிவாரியாகப் போட்டியிடும் வேட்பாளர்களில் எவர் ஒருவர் ஒருவாக்கையேனும் கூடுதலாகப் பெறுகிறாரோ அவர் வென்றவராக ஆகி விடுகிறார். வெற்றிப் பெற்ற வேட்பாளர் தொகுதியிலுள்ள வாக்காளர்கள் பெரும்பான்மை யோரின் ஆதரவைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயமில்லை, அதாவது குதிரைப் பந்தையத்தின் இறுதிக் கட்டத்தில் வெற்றிப்புள்ளியை தனது மூக்கினை உந்தி முதலில் தொட்டுவிடும் குதிரைக்கே வெற்றிக் கோப்பை என்பது போலத்தான் இது. இத்தகைய தேர்தல் முறையை First-Past-the-Post System என்பர்.

இந்த முறையில் பணம் படைத்த வேட்பாளர்கள் தேர்தலின் இறுதிக்கட்டத்தின் போது பணம் வழங்குதல் போன்ற தந்திரங்களால் கூடுதல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுவிடுகிறார்கள். அவ்வாறு செய்ய இயலாத எளிய மக்களின் பிரதிநிதிகளுக்கு வெற்றி வாய்ப்பு மறுக்கப்பட்டு விடுகிறது.

இன்றைய நமது தேர்தல் முறையானது பின்வரும் விளைவுகளுக்குக் காரணமாக இருக்கிறது.

1. தொகுதி வாரியாகக் கூடுதல் வாக்குகள் பெறுவது என்ற அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவதால், குறிப்பிட்ட கட்சி பெற்ற ஒட்டு மொத்த வாக்கு வீதத்திற்குச் சற்றும் பொருத்தமற்ற வகையில் ஆட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையைத் தாராளமாக அள்ளி வழங்கிறது.

2.இவ்வாறு செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்ட ஆட்சிமன்றப் பெரும்பான்மை காரணமாக ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட குறிப்பிட்ட அரசியல் கட்சி தனது சொந்த அரசியல் குறிக்கோள்களைச் செயல்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கிறது.

3. சிறுபான்மையோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதிகள் தேவையான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்படும் உரிமை மறுக்கப்பட்டு விடுகிறது.

4. ஆட்சி மன்றங்களில் ஆக்கப்பூர்வமான செயல் பாடுகள் மறுதலிக்கப்பட்டு, மோதல் போக்கு நிலவ வழி வகுக்கிறது.

இத்தகைய தேர்தல் முறையானது, வாக்காளர்களில் பெரும்பாலோருக்கு ஏமாற்றமளிப்பதோடு, மக்கள் அளிக்கும் தீர்ப்பைத் திசை திருப்புவதாகவும் அமைந்து விடுகிறது. எனவே கால வளர்ச்சிக்கு ஏற்ப நமது தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

இன்று உலக நாடுகள் பலவற்றில் தமது தேர்தல்முறை குறித்தும், மக்களாட்சி முறையை மேலும் செழுமைப்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு, ஆழமான விவாதங்களுக்குப் பின்னர் தமது நாட்டின் தேர்தல் முறையில் பல்வகையான சீர்திருத்தங்களை, மாற்றங்களை

அமலாக்கியுள்ளன. உலக அளவில் பல நாடுகளில் இன்று கடைபிடிக்கப்படும் தேர்தல் முறைகளை மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை

 1. தேர்தலில் போட்டியிடுவோரில் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெறுவது (FPTP System))

2.விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (Proportional Representation System)

3.பகுதி அளவிலான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (Semi Proportional Representation System)

எனினும் பெரும்பாலான நாடுகளில் விகிதாச் சாரப் பிரதிநிதித்துவ முறையே அமலாக்கப்பட்டு வருகிறது.

விகிதாச்சாரப் பிரதிநித்துவ முறை: (Proportional System)

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் பெறுகின்ற வாக்குகள் எண்ணிக்கை மொத்தமாகக் கணக்கிடப்பட்டு, அக்கட்சிகளுக்குக் கிட்டிய வாக்குகளின் விழுக்காட்டு அடிப்படையில் நாடாளுமன்றம் மற்றும் பிற ஆட்சி மன்றங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வது.

கலப்பு முறை விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமுறை: (Mixed Member Proportional System)

இந்த தேர்தல் முறையில் வாக்காளர் ஒவ்வொரு வருக்கும் இரண்டு வாக்குரிமை அளிக்கப்படும். வாக்குகளில் ஒன்றை அவர் விரும்பும் வேட்பாளருக்கு அளிக்கலாம், மற்றொன்றை அவர் விரும்பும் ஏதாவது

கடந்த 25 ஆண்டுகாலமாகவே நாட்டின் 14 மாநிலங்களிலிருந்தும், 1 யூனியன் பிரதேசத்திலிருந்தும் இஸ்லாமியர்கள் நாடாளுமன்றம் செல்வது மறுக்கப்பட்டு, அம்மக் களுக்கான பிரதிநிதித்துவ உரிமை தொடர்ந்தும் பறிக்கப்பட் டு வருகிறது.

ஒரு கட்சிக்கு அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் பெரும் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கான எண்ணிக்கை முடிவு செய்யப்படும், எனினும் தொகுதிவாரியாகப் போட்டியிட்டு அக்கட்சியின் சார்பில் வென்றோர் எண்ணிக்கையைக் காட்டிலும், அக்கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீத அடிப்படையிலான எண்ணிக்கை கூடுதலாக இருப்பின், தொகுதி வாரியாக தேர்தலில் வென்றோர் தவிர, தான் பெற்ற கூடுதலான இடங்களுக்கு கட்சித் தலைமையானது தனது பிரதிநிதிகளைக் கூடுதலாகத் தேர்வு செய்து நாடளுமன்றம் அனுப்பலாம். இவற்றோடு கூடவே கூடுதல் விதிகள் சிலவற்றை இணைத்து, மொத்தம் 10 வகையிலான தேர்தல் முறைகள் உலகின் பல நாடுகளிலும் இன்று புழக்கத்தில் உள்ளன.

நமது நாட்டின் தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொணர இதுவே சரியான தருணம். தேர்தல் சீர்திருத்தம் குறித்து இந்திரஜித் குப்தா ஆணையம், மத்திய சட்ட ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் கால வெள்ளத்தில் கரைந்துவிட்டன, எனவே இது குறித்து அரசியல் கட்சிகள், அடித்தட்டு மக்களிடையே பணியாற்றும் இயக்கங்கள் ஆகியவை ஆழமாக விவாதித்து கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்டு உரிய காலக் கெடுவுக்குள் இந்தியத் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த மாற்றங்கள் மாநில வாரியான பிரதி நிதித்துவம், பெண்கள், சிறுபான்மையோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு ஆளும் அவைகளில் உரியப் பங்களிப்பதாக வடி வமைக்கப்பட வேண்டும்.