ambedkar 400மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அரசாங்கத்தைப் பற்றி இந்து சமூக அமைப்பு எதுவும் கூறவில்லை. சட்டத்தின் அடிப்படையில் மக்கள் இயங்கிட வேண்டும். மக்களின் பிரதிநிதிகளே சட்டத்தை இயற்றிட வேண்டும் என்ற அடிப்படையில்தான் பிரதிநிதித்துவ அரசு இயங்கும்.

மக்கள் சட்டத்திற்குட்பட வேண்டுமென்பதை இந்து சமூக அமைப்பு ஏற்றுக் கொள்கிறது; ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே சட்டமியற்றிட வேண்டும் என்பதை அது மறுக்கிறது.

“நீ கூறியதை நான் முற்றிலும் மறுக்கிறேன்; ஆனால் நீ மாற்றுக் கருத்து கூறும் உரிமையை என்னுயிரை ஈந்தும் காப்பேன்'' என்று வால்டேர் கூறிய தர்க்கம் பற்றியும் விவாத முறை பற்றியும் மநு கூறுவது இதனைத் தெளிவாக்குகிறது:

4. 29:30 “விருந்தினருக்கு இருக்கை தந்து, உணவளித்து, படுக்கை ஈந்து, தண்ணீர், கிழங்கு, மற்றும் பழங்கள் கொடுத்து இல்லத்தில் தங்கவைத்தல் வேண்டும். வழக்கத்திற்கு மாறுபாடான கொள்கையாளரை, விலக்கப்பட்ட தொழில் புரிவோரை, வேதத்தை எதிர்த்து வாதிடுவோரை, கேடிபோல் வாழ்வோரை, நாரை போல்வாழ்வோரை முகமன் கூறி சிறப்பித்தல் கூடாது.

2:10 “ஸ்ருதி (வெளிப்பாடு) என்றால் வேதம்; ஸ்மிருதி (மரபு) என்றால் புனிதச் சட்டம். இரண்டுமே விவாதத்திற்குரியவை அல்ல. இரண்டிலிருந்தும் புனிதச் சட்டம் ஒளிர்கிறது.''

2:11 “இரு பிறப்பாளர் எவரும் விவாத முறையில் இறங்கி இவ்விரண்டையும் (ஸ்ருதி, ஸ்மிருதி) அவமதித்தால், நல்லோர் அவரை நாத்திகரென்றும் வேத துவேஷி என்றும் சாதிப் பிரதிஷ்டம் செய்தல் வேண்டும்.''

2:12 “வேதமும் அறநெறியும், மேலோர் கடைப்பிடித்த மரபும், ஆத்ம சந்துஷ்டியும் என இவை நான்குமே தர்ம சாஸ்திர விளக்கங்களாக இருப்பனவென்று அறிந்தோர் தெளிவாகக் கூறுகிறார்கள்.''

இதற்குரிய காரணங்களையும் மநு விளக்குகிறார்:

2:6 “புனிதச் சட்டத்தின் ஆதி மூலம் வேதங்களே. அடுத்தது மரபு. வேதமறிந்தோரின் நன்னடத்தை, புனிதர்களின் பழக்க வழக்கங்கள், இறுதியாகத் தன்னிறைவு.''

2:7 “மநு அளித்த சட்டங்கள் ஏற்கனவே வேதங்களில் அறிவிக்கப் பெற்றுள்ளன; மநு முனிவன் அனைத்தும் அறிந்தவன்.''

இந்தச் சுதந்திரத்தில் விவாதம் செய்வதற்கான சுதந்திரம் இல்லை.சமூக அமைப்பைத் தர்க்க

ரீதியாக விமர்சனமும் செய்ய முடியாது.இங்கு சுதந்திரம் என்று எதுவுமே இல்லை. செயல்படும் சுதந்திரம் எப்படிப்பட்டது? இந்து சமூக அமைப்பில் தன் விருப்பத்திற்கான இடம் என்று ஒன்று கிடையாது.தனி மனிதர் விருப்பத்திற்கென இந்து சமூகம் எதையும் விட்டு வைக்கவில்லை. தொழிலையும் அதுவே நிர்ணயிக்கிறது.இந்தக் கட்டுப்பாடுகளுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்வது ஒன்றுதான் தனி மனிதன் செய்யக்கூடிய ஒரே வேலை.

அரசியல் சுதந்திரம் பற்றியும் இதே கருத்தைத்தான் சொல்ல வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அரசாங்கத்தைப் பற்றி இந்து சமூக அமைப்பு எதுவும் கூறவில்லை. சட்டத்தின் அடிப்படையில் மக்கள் இயங்கிட வேண்டும். மக்களின் பிரதிநிதிகளே சட்டத்தை இயற்றிட வேண்டும் என்ற அடிப்படையில்தான் பிரதிநிதித்துவ அரசு இயங்கும். மக்கள் சட்டத்திற்குட்பட வேண்டுமென்பதை இந்து சமூக அமைப்பு ஏற்றுக் கொள்கிறது; ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே சட்டமியற்றிட வேண்டும் என்பதை அது மறுக்கிறது.

மக்கள் உட்பட்டு நடக்க வேண்டிய சட்டம் ஏற்கனவே இயற்றப்பட்டுவிட்டது. ஆனால், அது வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே இந்து சமூகத்தின் முடிவு. அதிலிருந்து கூட்டவோ, குறைக்கவோ எவருக்கும் உரிமையில்லை. அப்படியென்றால், பிரதிநிதித்துவ அவை என்று எதுவும் தேவையில்லை. அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றும் உரிமையே. அரசை உருவாக்குவதற்கும் மாற்றுவதற்குமான உரிமை இந்து சமூக அமைப்பில் இல்லை.

தொகுத்துக் கூறினால், இந்து சமூக அமைப்பு வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது; தனி மனிதர்களை அல்ல. வர்க்கங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. வர்க்கத்தின் நிலையும் தொழிலும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இந்து சமூக அமைப்பு இறுக்கமானது.தனிமனிதன் என்ற முறையில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தான் பிறந்த சமூகத்தின் நிலையில் எம்மாற்றமும் நிகழ வாய்ப்பே இல்லை. வேறு வர்க்கத்தில் பிறந்த இன்னொருவருடன் அவனுக்குரிய உறவு ஒருபோதும் மாறாது. முதன்மையானது இறுதிநிலைக்கு இறங்காது; இறுதிநிலையில் உள்ளது முதல்நிலைக்கு ஏறவும் முடியாது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் 114)

Pin It