ரா. கிருஷ்ணசாமி
டாக்டர் அம்பேத்கர் சமூக, கல்வி, பொருளாதார அறக்கட்டளை
86/147, எம்  20, அவ்வை நகர்,
துறைமங்கலம்,
பெரம்பலூர் மாவட்டம்  621 220
அலைபேசி : 97881 93130

அன்புடையீர், வணக்கம்.

"தலித் முரசு' – சமூக நீதித்திங்களிதழ் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழகத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். சாதியை ஒழிப்பதற்கான கருத்தியல் அடர்த்தியுடன் இவ்விதழ் எவ்வித விளம்பரங்களுமின்றி வெளிவருகிறது. இதனால் அது மிகுந்த பொருள் இழப்பை உருவாக்கியிருக்கிறது  என்பதை விளக்கத் தேவையில்லை. ஆனால், எவ்வளவு இழப்புகள் ஏற்படினும் "தலித் முரசு' தொடர்ந்து வெளிவருவதற்கான தேவையை எவரும் நிராகரித்துவிட இயலாது. இக்கருத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் எனில், நாங்கள் உருவாக்கும் காப்பு நிதியத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அதற்காக தாங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

1.  "தலித் முரசு' தொடர்ந்து வரவேண்டும் எனில், ஒவ்வொரு மாதமும் தங்கள் வருவாயில் இருந்து அய்நூறு ரூபாய் அளிக்க வேண்டும்.

2. குறைந்தது நூறு பேரையாவது இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள விழைகிறோம். இதன் மூலம் மாதம் அய்ம்பதாயிரம் ரூபாயை "தலித் முரசு'க்கு அளிக்க இயலும்.

3.  இத்திட்டத்தில் இணைத்துக் கொண்ட தாங்கள், மேலும் ஒருவரை இத்திட்டத்தில் இணைக்க முயலலாம்.

4.  இந்நிதியத்தின் பொறுப்பாளர்களாக 1. ரா. கிருஷ்ணசாமி, பெரம்பலூர்; 2. தமிழேந்தி, அரக்கோணம்; 3. யாழன் ஆதி, ஆம்பூர் ஆகிய மூவரும் தாமாகவே முன்வந்துள்ளனர். இதற்கான வங்கிக் கணக்கு பெரம்பலூரில் உள்ள திரு. ரா. கிருஷ்ணசாமி அவர்களின் பெயரில் இயங்கும்.

5.  ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்ப விரும்புகின்றவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள வங்கிக்கு ஒவ்வொரு மாதமோ, ஓராண்டுக்கு என மொத்தமாகவோ அனுப்பி உதவும்படி கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

R.Krishnasamy, State Bank of India, Perambalur, SB A/C: 30325626130, Code No: 796

ரா. கிருஷ்ணசாமி        தமிழேந்தி           யாழன் ஆதி
  97881 93130      94434 32069          94431 04443

Pin It