டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம்

அம்பேத்கர் ஒரு கலைஞனைப் போல் எழுத்துகளைக் கையாண்டார். கற்பனை நயத்திற்காகவும், இலக்கியப் புகழுக்காகவும் அவர் நூல்களை எழுதவில்லை; உயர்ந்த குறிக்கோள்களுக்காகவே எழுதினார். வரலாற்று ஆசிரியர் என்பதை விட அவர் ஒரு லட்சியவாதி என்பதே அவருடைய எழுத்துகளில் மேலோங்கி நிற்கும். இச்சிறு நூல் அரசியல், பொருளியல், சட்டவியல், சமூகவியல், சமயம் என 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் அம்பேத்கரின் எழுத்துகளின் சுருக்கம் தெளிவாகவும், முறையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மு. நீலகண்டன்
 பக்கங்கள் : 274
 விலை : ரூ.185
 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை – 600 098
பேசி : 044  26359906

****
anbuselvam_260தமிழர் பண்பாடு படும்பாடு

பொதுவாக இந்திய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் "பண்பாடு' என்பது ஆளுவோரின் அதிகாரத்தின் வெளிப்பாடாகவும், ஆளப்படுவோரின் அடிமைத்தனத்தின் அடையாளமாகவுமே அமைந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சமத்துவக் கொள்கையுடனிருந்த பழந்தமிழர் பண்பாட்டை, சமத்துவமற்ற, ஆரியப்பண்பாடு வஞ்சகமாக வீழ்த்தியது. அது முதலே, தமிழர்கள் தடுமாற்றமடைந்து ஆரியர் பண்பாட்டை, தங்கள் பண்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மன்னர்களே அயலவர் பண்பாட்டுக்கு பலியாகி அதனை தமிழர்கள் மீது திணித்துள்ளனர்.

 எஸ். கலியபெருமாள்
 பக்கங்கள் : 678
 விலை : ரூ. 500
 கலகம் வெளியீட்டகம் சென்னை– 600 002
 பேசி : 044  42663840

****
தீண்டப்படாதோருக்கான இறுதிச் செய்தி

நான் எனது போராட்டங்களினால் சாதித்துக் காட்டியவற்றையெல்லாம் அனுபவித்து வரும் படித்தவர்கள், தங்களது இரக்கமற்றத் தன்மையாலும் வஞ்சகத்தாலும் தங்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று மெய்ப்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒடுக்கப்பட்ட அவர்களது சகோதரர்கள் மேல் எவ்வித இரக்கமும் இல்லை. நான் எண்ணியிருந்ததை விட அவர்கள் கேடு கெட்டவர்களாய் இருக்கிறார்கள்.  அவர்கள் முழுவதும் தங்களது தன்னலத்திற்காகவே வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட சமூகத் தொண்டில் அக்கறை காட்டவில்லை.

டாக்டர் அம்பேத்கர்
பக்கங்கள் : 28
 விலை : ரூ.15
 அம்பேத்கர் அறக்கட்டளை
பேசி : 97881 93130

***
ஆஷ் படுகொலை

மாட்டுக்கறி தின்றவனுக்காகவும் பஞ்சமனின் நலனுக்காகவும் கள் இறக்கிய மரமேறிக்காகவும் அன்றைக்கு எவரும் அக்கறைப் படவில்லை என்பதை ஆஷ் படுகொலை வரலாறு நிரூபிக்கிறது. ஆரியர் படையெடுப்பிலிருந்து இரண்டாவது மைசூர் போரில் முடிவடைந்த (178084) படையெடுப்புவரை நடந்த ஆட்சிகளில், அதாவது 2400 ஆண்டுகளில் 104 படையெடுப்புகள் இந்த நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் நலன்களுக்காக ஒரு படையெடுப்போ, ஒரு பகுதி ஆட்சியோ இம்மண்ணில் நிகழவில்லை.

 அன்பு செல்வம்
 பக்கங்கள் : 96
 விலை : ரூ. 60
 புலம் சென்னை – 600 005
 பேசி : 97103 53177

****
விதைகள்

பசுமைப் புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள், இன்று நமது வாழ்வின் மூலாதாரமான விதைத் துறையிலும் நுழையவிருக்கின்றன. இதனால் நமது வருங்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. வடிவுரிமை என்ற பெயரில், நமது விதைகளை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் அழிக்கத் தொடங்கிவிட்டன. இனிமேல் தனது வயலை நம்பிக் கொண்டிருந்த விவசாயி, பன்னாட்டு நிறுவனங்களை கையேந்தி இருக்க வேண்டிய நிலை வரும். இந்த ஆபத்து குறித்து  இந்நூல் விவாதிக்கிறது.

 பக்கங்கள் : 108
 விலை : ரூ. 70
 பூவுலகின் நண்பர்கள் சென்னை – 600 010
 பேசி : 044 26461455

****
அய்யோ... அணு உலைகள்!

அணுஉலைக்கழிவுகள் மொத்தம் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு அதே கதிரியக்க வீரியத்தை இழக்காமல் ஒளிர்கின்றன. ஆகவேதான் அணுக்கழிவுகளை ஈயத்தொட்டிகளில் வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது. இந்த கதிரியக்கம் வன்காரைச் சுவர் வழியாகவும், கதிர்வீச்சின் பேரதம் ஒரு நொடிக்கு 32 லட்சம் கல் முடுக்கத்தில் செல்லவல்லது. உயிருள்ள உடலில் உள்ள திசுக்களில் புகுந்து செல்கிறது. உயிர்உள்ள திசுக்களை அழிக்கிறது. நோய்களை உருவாக்குகிறது. நிலம், நீர், மரம், புல் எல்லாவற்றிலும் பரவுகிறது.

 கா. தமிழ்வேங்கை
 பக்கங்கள் : 80
 விலை : ரூ. 50
 அய்ந்திணை வெளியீட்டகம்
 பேசி – 94421 70011

Pin It