தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவதைத் தவிர, இந்தியாவில் வேறெந்த உயரிய பணியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபடும் நானோ, மற்றவர்களோ இந்தப் பணியை கைவிட்டு வேறு பணிக்குச் சென்றால், வேறு எவரும் இப்பணியை செய்ய முன் வர மாட்டார்கள்.

– டாக்டர் அம்பேத்கர்

"தலித் முரசு' காப்பு நிதியத்தை உருவாக்கி, அதன் இலக்கையும் அவசியத்தையும் விளக்கி ஓர் அறிக்கையாக வெளியிட்டிருந்தோம். அதன் நியாயத்தையும் "தலித் முரசை'ப் பாதுகாக்க வேண்டிய சமூக நிர்பந்தத்தையும் அறிந்த தோழமை சக்திகள், உடனே அதற்காக தாங்கள் என்ன செய்ய வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஏராளமான அழைப்புகள் வந்தன. சிலர் அவசரத்தை மனதில் கொண்டு நன்கொடைகளை அலுவலகத்திற்கே வந்து கொடுத்தும், சிலர் வங்கியில் பணம் செலுத்தியும் தங்களின் சமூகக் கடமையை ஆற்றினர்.

நாம் அடைய வேண்டிய இலக்கு இன்னும் தொலைவில் இருக்கிறது. ஆனால், நிதியத்தை ஒருங்கிணைக்கும் பணி தாமதமாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நகரத்திற்கும், ஒன்றியத்திற்கும் ஒரு பொறுப்பாளரை நியமிப்பதும் அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் ஒரு குழுவை உருவாக்குவதும் மார்ச் – ஏப்ரல் மாதப் பணிகள். யாரை நியமிக்கலாம் அல்லது தாமே முன்வரக் கூடியவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறலாம்.

அம்பேத்கர் (ஏப்ரல்) மாதத்தில், குறைந்தது 15 வாழ்நாள் சந்தாக்களையும் – அதிகப்படியான ஆண்டு சந்தாக்களையும், இவை தவிர ஆர்வமுள்ளவர்களிடம் நன்கொடை வாங்கும் பணியையும் முடிக்க வேண்டும். மே மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை நிர்ணயித்து, நிதியம் சேமித்திருக்கிற நிதியை தலித் முரசிடம் அளிப்பது என்பது நம்முடைய செயல் திட்டம்.

வேறு ஏதாவது நல்ல ஆலோசனைகள் இருந்தாலும் நீங்கள் தெரிவிக்கலாம். வரவிருக்கும் மாதங்கள் தேர்தல் சூழல் நிலவுகின்ற காலமாக இருப்பதால், இப்பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : யாழன் ஆதி, அலைபேசி : 94431 04443, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'தலித் முரசு' காப்பு நிதியத்திற்கு இதுவரை பங்களித்தோர் :

டாக்டர் அன்பழகன்

வெ. தனபால்

"பெல்' எஸ்/எஸ்.டி. சங்கம்

ராமகிருஷ்ணன்

ராணிப்பேட்டை, எம். சிவக்குமார்

மா. அண்ணாதுரை

ரா. கிருஷ்ணசாமி

நெ. அருண்குமார்

ரா. சிவக்குமார்

கு. உதயகுமார்

 ம. நல்லுசாமி

ரா. பாண்டியன்

செ. ராசேந்திரன்

ம. புரட்சிக் கண்ணன்

கவிஞர் சீராளன்

தி. தமிழ்ச் செல்வி

எம். சிங்காரம்

எம். கண்ணன்

டாக்டர் ஆர். சுப்பிரமணிய பாரதியார்

தமிழ் நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்

 

Pin It